ஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம்
ஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம் என்ற பதிவின் வழியாக”வாழ்க்கை என்பது ஒரு கலை” இந்த அரிய கலையை, கலை நயத்துடன் அணுகத்தெரியாமல், வாழ்வை புரிந்துகொள்ள இயலாமல், இயற்கை வரமாக வழங்கிய இந்த இனிய வாழ்வை, ஏனோதானோ என்று வாழ்ந்து நரகமாக்கிக் கொள்கின்றனர் பலர் . இந்த உலகத்தில் இயற்கை நம்மை படைத்ததன் நோக்கம் என்ன என்பதை நாம் உணர்ந்துகொண்டால் இந்த இனிய வாழ்வை சொர்க்கம் ஆக்கிவிடலாம். ஆழ்மனதின் சக்திகளை காண்போம்.
ஆழ்மனம் என்கின்ற அந்த அற்புத சக்தி
அவ்வாறு தன்னை உணர்ந்து கொண்டவர்களால்தான், இந்த உலகில் பல கண்டு பிடிப்புகளையும் நிகழ்த்தி சாதனைகள் புரிந்து, புகழின் உச்சிக்கே சென்றிருக்கின்றார்கள். நாமும், ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைத்து முயற்சிகள் மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் நாம் எடுக்கின்ற பல முயற்சிகள் பலன் தர மறுக்கின்றன. காரணம், நமக்குள் இருக்கும் சக்தியை, அதாவது “ஆழ்மனம்” என்கின்ற அந்த அற்புத சக்தியை நாம் இதுவரை உணரவில்லை.
ஆம் ! நம்முள் ஒளிந்திருக்கும் அந்த அற்புத சக்தியை நாம் தெளிவாக இயக்க தெரிந்துகொண்டால், உணர்ந்துகொண்டால், வாழ்வில் நினைத்ததை அடையலாம். ஆம்! நீங்கள் தற்போது எந்த நிலையில் இருந்தாலும் சரி, கவலையை விடுங்கள். நீங்கள் நினைத்ததை அடைய வேண்டுமா? நீங்கள் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில் உச்சத்தை அடைய வேண்டுமா?
புதிய வீடு கட்ட வேண்டுமா? நல்ல வாகனம் வேண்டுமா? உடல் மற்றும் மன ஆரோக்கியம் வேண்டுமா? கோடிகள் சம்பாதிக்க வேண்டுமா? உறவுகள் சீர் பட வேண்டுமா? வாருங்கள்! உங்கள் ஆள் மனம் என்ற தோட்டத்தை, நற்சிந்தனைகளால் பண்படுத்தி, எண்ணமென்னும் விதை விதைத்து, கற்பனை என்னும் நீருற்றி, விடா முயற்சி என்னும் உரமிட்டு, வெற்றி என்ற கனி பறிப்போம். பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து பயணிப்போம்.
மனம்- ஓர் பார்வை
மனம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? அது எப்படி செயல் படுகின்றது? இப்படிப்பட்ட வினாக்கள் அடிக்கடி நம்முள் விருந்தாளி போல் வந்து செல்வது உண்டு. மனம் என்பது நமது மூளையின் ஒரு பகுதியின் செயல் பாடு தான். மனம் என்ற சக்தியின் இருப்பிடம் நமது நெற்றியின் மையப்பகுதி. அதாவது இரண்டு புருவங்களுக்கும் இடைப்பட்ட பகுதி. மனிதனுடைய மனம் என்பது மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆழ் கடலைப் போல மிகவும் அமைதியானது.
அதே நேரம் இந்த அகிலத்தையே அசைத்து பார்க்கக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்தது. எனவே நம் மனதின் ஓட்டத்தை சரியாக புரிந்து கொண்டு நமது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தால் வெற்றி என்பது நிச்சயம். இதில் ஐயம் இல்லை. மனம் ஒன்று தான். ஆனால் அதன் செயல்பாடுகளை உளவியல் நிபுணர்கள் இரண்டு வகையாக பிரித்த்திருக்கின்றார்கள். அவை 1 புறமனம் 2 ஆழ் மனம் .
1 புறமனம்
புறமனம் என்பது குரங்கிற்கு இணையாக ஒப்பிடுகின்றார்கள் உளவியல் நிபுணர்கள். காரணம் புற மனதின் எண்ணங்கள் ஒருபோதும் நிலையாக இருப்பது இல்லை. கடல் அலைக்கும் இதை ஒப்பிடலாம். எண்ணங்கள் எப்போதும் தாவிக்கொண்டே இருக்கும். ஒரு போதும் திருப்தி அடையாது. உதாரணமாக, ஒரு விஷயத்தை பார்க்கும் போது அல்லது அனுபவிக்கும் போது இன்னொன்றை
காணும் நமது புற மனம், இதை விட புதியதாய் காணும் மற்றொன்றை சிறப்பானதாக எண்ணி அங்கே தாவி விடும். அதாவது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலில் அல்லது வேலையில் சற்று சிரமமான சூழலை எதிர் கொள்கின்ற போது இதை விட அவன் செய்யும் தொழில், வேலை சிறப்பாக இருக்கிறது. அதனால் தான் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். நான் மட்டும் தான் இவ்வாறு அல்லல் பட்டு கொண்டிருக்கிறேன்.
இவ்வாறெல்லாம் நமது புற மனம் புலம்பிக் கொண்டிருக்கும். இது புற மனதின் இயல்புகளில் ஒன்று. அது போல பல நேரங்களிலும் ஒரு செயலை நிச்சயமாக செய்ய வேண்டும் என நமது ஆழ் மனது நம்மை அறிவுறுத்தும். ஆனால் அவை நமது புற மனம் மறுத்து விடும்.உதாரணமாக நாளை அதிகாலை நான்கு மணிக்கு எழும்ப வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு இரவில் தூங்கி விடுவோம் .
உறுதியாக நினைத்து விட்டதால் நமது மனது சரியான நேரத்தில் விழிப்பைக் கொடுத்து விடும்.அப்போது படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என நினைத்து முயற்சியை மேற் கொள்வோம். அப்போது நமது புற மனது கூறும் – வேண்டாம் படுத்துவிடு , இன்னும் பத்து நிமிடம் தாண்டி எழும்பி விடலாம் என்று.
நமது அன்றைய நாளுக்கான தோல்விகள் அந்த நிமிடத்தில் இருந்தே ஆரம்பித்து விடும். இந்த புற மனதைத் தான் நாம் பல நேரங்களில் பயன்படுத்துகின்றோம். இதனால் தான் நாம் எதிர் பார்த்திருக்கும் வெற்றிகள் நமக்கு எட்டாக் கனியாகவே இருந்து கொண்டு இருக்கின்றது.
Read Alsho : நினைத்ததை விரைவில் அடைய வேண்டுமா?
2 ஆழ் மனம்
இது புற மனதை விட மிகவும் வித்தியாசமானது . இந்த மனதின் தன்மை என்பது மனிதனை தெய்வ நிலைக்கே கொண்டுச் செல்லக்கூடிய அளவிற்கு மாபெரும் சக்தி வாய்ந்தது. இது ஆழ் கடலை விட அமைதியானது. ஆழ் கடலில்தான் விலைமதிக்க இயலாத அளவிற்கு செல்வ வளங்கள் கொட்டிக் கிடைக்கின்றன .
அதுபோல, நமது ஆழ் மனதில் தான், இவ்வுலக பிறப்பின் பயனை முழுமையாக அனுபவிக்க வேண்டிய பேராற்றல்கள் புதைந்து கிடைக்கின்றன. இந்த ஆழ் மனதின் அளவற்ற பேராற்றல்களை சரியாக தெரிந்துகொண்டு , அதை சரியாக இயக்கத் தெரிந்துவிட்டால், இந்த உலகின் பார்வையில், மிகுந்த பொருளாதார பலம் படைத்தவர்களாக, உலகமே போற்றும் மாபெரும் சக்தி வாய்ந்த மா மனிதர்களாக மாறிவிடலாம்.
உதாரணமாக, இறைவனின் அவதாரமாக இந்த உலகில் தோன்றிய, தெய்வ மகான்கள் கூட, தனது ஆழ்மனதின் சக்தியை முழுமையாக பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இல்லை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதுபோல கண்ணுக்கே புலப்படாத கிரகங்களை விண்ணில் தேடி கண்டுபிடிப்பதும், அந்த கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்புவதும், ஏன் அந்த கிரகத்துக்கேச் சென்று கால் பதித்த மா மனிதர்களும், இந்த உலகமே இன்று இரவிலும் ஒளிவெள்ளத்தில் மிதக்க காரணமான மின்சார பல்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்களும், அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகளும் தங்களது ஆழ்மனதின் ஆற்றல்களை பயன்படுத்தியவர்கள் தான்.
பெரும் பணமும், புகழும் சம்பாதித்த அம்பானி, டாட்டா போன்றவர்களும், அதிகமாக ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்தியவர்கள் தான். சாதாரண சுழ்நிலையில் வாழ்க்கைப் பயணத்தை தொடரும் நாம், நமது ஆழ் மனதின் அளவற்ற பேராற்றல்களை மிகவும் குறைவான அளவை பயன்படுத்துவதால் தான் வாழ்கையின் உச்சத்தை எட்டிப்பிடிக்க இயலவில்லை.
ஆக இந்த ஆழ்மனதின் அளவற்ற ஆற்றலை எப்படி இனம் கண்டுணர்ந்து, அதை நமது வாழ்க்கைக்கு பயன்படுத்தி பெரும் பணமும், புகழும் சம்பாதித்து வாழ்வை ஆரோக்கியமாகவும், மகழ்ச்சியாகவும் எதிர்கொள்வது என்பதைக்குறித்து இன்னும் ஆழமாகப் பார்க்கலாம் .
நினைத்ததை அடைய வேண்டுமா?
நமது மனதில் ஒவ்வொருநொடியும் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் வந்து செல்கின்றன. ஆக நமது எண்ணங்களே வாழ்வாகிறது. இவ்வாறு வந்து செல்கின்ற எண்ணங்களை சற்றே கவனித்துப் பாருங்கள், அதில் 70 % – த்திற்கு மேல் நேர்மறையான எண்ணங்கள் வந்துச்செல்லுமானால் நீங்கள் தற்போது இருப்பது கோடிஸ்வரர்கள் பட்டியலில்.
அல்லது அவை எதிர்மறை எண்ணங்களாக இருக்குமானால் தற்போது உங்களது வாழ்கை துன்பச்சூழலில். “நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய். நீ இன்று வாழும் வாழ்கை அதாவது நீ இன்று அனுபவிக்கும் இன்பம் அல்லது துன்பம் இவை அனைத்தும் என்றோ ஒரு நாள் உன்னை அறியாமல் நீ எண்ணியவை தான்” இவைகள் சுவாமி விவேகானந்தரின் அனுபவ மொழிகள் . ஆக நமது வாழ்வில் கீழ் காணும் சில சிந்தனைகளை தொடர்ச்சியாக கடைபிடித்தால் நினைப்பது எதுவாக இருந்தாலும் நிச்சயமாக அதை அடையமுடியும் .
தேவை என்ன என்பதை தீர்மானியுங்கள்
வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் துன்பங்களை அதிகம் அனுபவிக்க காரணம், தனது தேவை என்ன என்பதை தெளிவாக வரையறுக்க தெரியாதுதான். அவ்வாறு தீர்மானித்தாலும் இதெல்லாம் நமக்கு நடக்கவாப்போகிறது என்ற எதிர்மறை சிந்தனைகள் ஆட்கொள்வதால் முற்றிலுமாக முடங்கி விடுகின்றோம்.
இப்படிப்பட்ட வாழ்வை சீரழிக்கும் சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, முடியும்! என்னால் நிச்சயமாக முடியும் ! என்ற நேர்மறை சிந்தனைகளை நமது மனதில் உரக்கப்பதிப்போம். அவ்வாறு செய்யும்போது நமது ஆழ்மனம் விரைவாக செயல்பட்டு நாம் நினைக்கின்ற அனைத்தையும் நம்மிடம் கொண்டுசேர்த்துவிடும்.
உதாரணமாக நீங்கள் நெடுநாட்களாக கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடன் மதிப்பு ரூபாய் 10 இலட்சம் . இப்போது தர்க்கரீதியாக சிந்தித்தால், உங்களது வருமானப்படி இதை தீர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் உங்கள் மனதில் உறுதியாக நினைத்தால், அதாவது இந்த கடன் தீர்ந்துவிட்டதாகவும், நீங்கள் கடனற்ற ஒரு நிம்மதியான வாழ்வை அனுபவிப்பதாகவும், உணர்வு ரீதியாக உங்கள் ஆழ்மனதிற்கு திரும்ப, திரும்ப தெரியப்படுத்தினால், உங்களது ஆழ்மனம் அதிரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு, புதிய வருமான வாய்ப்புகளை நமக்கு யார் வழியாவது அறிமுகப்படுத்தி கொடுத்துவிடும்.
இப்போது நீங்கள், வறுமையை குறித்தே எனது மனம் எல்லா நேரமும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறது. எப்படி எனது மனதை நேர்மறையாக சிந்திக்க வைப்பது ? இதுவெல்லாம் என்னால் முடியாதப்பா… என அங்கலாய்ப்பது எனக்கு புரிகிறது .
கவலை படாதீர்கள். உங்களாலும் நேர்மறையாக சிந்திக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். இப்போது உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டு, பல வேதனைகளை அனுபவித்து இறந்துபோவதை நீங்கள் காண்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
அன்றிலிருந்து குறைந்தது 3 நாள்கள் உங்களது மனதின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும்? நீங்களும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி வேதனைகளை அனுபவித்து இறந்துபோவது போன்ற சிந்தனைகள் உங்களுள் வந்ததில்லையா? ஆக உங்களுக்கு நடக்காத ஒன்றை, நடந்தது போன்று உணர முடியும் என்றால், நீங்கள் எல்லா வளங்களையும் பெற்று செல்வ செழிப்போடு வாழ்வதாக நிச்சயம் உணர முடியும் .
அவ்வாறு தொடர்ந்து நேர்மறையாக உணர்ந்து, மனதால் கோடிகளுக்கு அதிபதியாக வாழ்த்துக்கொண்டிருக்கும்போது நிச்சயம் உங்களை உயர்த்தும் வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும் . அப்போது சிக்கென பிடித்துக்கொள்ளுங்கள். ஆனால் நம்மில் பலரும் செய்கின்ற மிகப்பெரிய தவறு என்னவென்றால், இவ்வாறு நம்மை தேடி வாசல்வரை வருகின்ற நல்ல வாய்ப்புகளை உணர்ந்துகொள்ளாமல், அதை உதாசீனப் படுத்துகின்றோம்.
ஒருவேளை அந்த வாய்ப்பை எடுத்துவிட்டால் அதில் சில பிரிச்சினைகளை சந்திக்கின்றபோது அதை விட்டுவிடுகின்றோம். விளைவு நமது பிரச்சனைகள் நம்மை பின்தொடர்கின்றன. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், அலை இல்லாத கடலும் இல்லை. பிரச்சனைகள் இல்லாத வாய்ப்புக்களும் இல்லை.
ஆம்! ஒவ்வரு பூட்டும் தயாரிக்கும்போது எவ்வாறு அதன் சாவியும் தயாரிக்கின்றார்களோ , அதுபோல பிரபஞ்சமானது நமக்கு வழங்குகின்ற பிரச்சனைகளுக்குள்ளும் ஓர் அற்புதமான வாய்ப்பையும் நிச்சியமாக மறைத்து வைத்திருக்கும் . இதை உணர்ந்துகொண்டு நமது ஆழ்மனதை பயன்படுத்தி இந்த வாழ்வை இனிதாக வாழ உங்களை வாழ்த்துகிறேன். தொடர்ந்து அடுத்த பதிவில் சந்திபோம்.
எமது அடுத்த பதிவை படிக்க: நினைத்ததை விரைவில் அடைய வேண்டுமா?