Elements Wellness Ayushwaas benefits in Tamil

இன்றைய நாகரிக உலகில் பல்வேறு விதமான நோய்கள் மனிதகுலத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று நுரையீரல் சார்ந்த சுவாசப் பிரச்சனை. இந்த நுரையீரல் பிரச்சனை ஏன் வருகின்றது? நுரையீரல் பிரச்சனையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றது?  அதை Ayushwaas என்ற பொருளைக் கொண்டு எப்படி நிவர்த்தி செய்வது என்பதை குறித்து இந்த பதிவில் காண்போம்.

வைரஸ் போன்ற நச்சு கிருமிகளின் தாக்கம்

நமது முன்னோர்கள் எல்லாம் 120 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து மடிந்து போனார்கள். ஆனால் நம்முடைய தாய் தந்தை யுடைய தலைமுறையோ 70, 80 என குறைந்து விட்டது. இப்போது நாம் வாழுகின்ற தலைமுறையோ ஐம்பது அறுபது எனச் சுருங்கிவிட்டது. இப்படியே போனால் வருங்கால தலைமுறைகள் மனிதகுலம் எப்படி வாழும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இன்று மனிதனுடைய ஆயுள் குறைவதற்கு முழுக்காரணம் மனிதனுடைய வாழ்க்கைத்தரம் மாறியதே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மனிதர்களாகிய நமது உடலை ஒவ்வொரு நொடியும் பல லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் கிருமிகள் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. இவற்றிலிருந்து நம்மை காப்பாற்றுவது  நமக்குள் இருக்கும்  நோய் எதிர்ப்பு சக்தியே. இந்தக் கிருமிகள் நமது உடலுக்குள் செல்வதை முதலில் தடுக்கும் உறுப்பு நம்முடைய தோல். அதுபோல் நமது கண்ணீர் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை கண்ணுக்குள் செல்லாமல் தடுக்கிறது. கபம் நமது உடலுக்குள் பாக்டீரியாக்களை அல்லது  நச்சுக் கிருமிகளை செல்லாமல் தடுத்து அதை வெளியே கொண்டு வருகின்றது.

உமிழ்நீர் என்பது நமது வாய் வழியாக உடலுக்குள் செல்ல  முயற்சி செய்யும் கிருமிகளைத் தடுத்து அளிக்கின்றது. இதையும் தாண்டி நமது வயிற்றுக்குள் செல்லும் நச்சுக் கிருமிகளை வயிற்றில்  சுரக்கின்ற ஒரு அமிலமானது அளிக்கின்றது. மூக்கின் வழியாக கிருமிகள் உள்ளே செல்ல முற்படும்போது, சுவாசக் குழாய்களில் சிறு சிறு முடிகள் போன்று இருக்கக்கூடிய அமைப்பானது, இந்த கிருமிகள் வந்தவுடன் அசைவை உருவாக்கி தும்மல் இருமல் வழியாக அந்த கிருமிகளை வெளியேற்றி விடுகிறது. இதையும் தாண்டி உடலுக்குள் செல்லும் நச்சுக் கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு

ADVERTISEMENT

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மன அழுத்தம். எனவே இந்த மன அழுத்தம் தான் அநேக நோய்களுக்கு மூல காரணமாக அமைந்து விடுகின்றது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் வருவது இரத்த அழுத்தம். இரத்த அழுத்தத்தால் மூளைக்கு செல்லும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, இதனால் மூளைக்கு  சிந்திக்கும் திறன்  குறைந்து விடுகின்றது. அதுபோல தலைவலி அதிகரிக்கின்றது. இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது. அதுபோல ஜீரண சக்திக் குறைபாடு வருகின்றது தோல் சம்பந்தமான நோய்களும் வருகின்றது.

தவறான உணவு பழக்க வழக்கங்களும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை  பாதிக்கின்றது. ஏதாவது நோய்களுக்கு அதிக மருந்து மாத்திரைகளை நாம் பயன்படுத்தும் போது, அதுவும் நமது நோய் எதிர்ப்பாற்றலை குறைகின்றது. குடிப்பழக்கமும் புகைப் பழக்கமும் நமது நோய் எதிர்ப்பாற்றலை மிகவும் குறைத்து விடுகின்றது.

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. குறைந்தது 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாவது நிம்மதியான முறையில் தூங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய பரபரப்பான  சூழ்நிலைகள் காரணமாக தூக்கம் மிகவும் குறைந்து விட்டது. இதனால் நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது.

ஒரு மனிதனுக்கு ஒரு நாள் இரண்டிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் தேவை. சரியான அளவுகளில் தண்ணீர் குடிப்பதால், உடலில் தேங்கி உள்ள அழுக்குகள் அனைத்தையும் சிறுநீரகமானது சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். தண்ணீரை  சரியாக கொடுக்காத பட்சத்தில், உடலில் அழுக்குகள் தேங்குவதால் நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு வரும்.

ADVERTISEMENT

சரியான உடற்பயிற்சி அல்லது குறைந்தது உடல் அசைவுகள் கூட இல்லாமல் ஒரு வேலையும் இல்லாமல்  சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, மீண்டும் சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதாவது வேலை எதுவும் இல்லாமல் சும்மா இருப்பது நோய்களை வருக, வருக என வரவேற்பதற்கு சமம். இவர்களின் எதிர்ப்பு சக்தி விரைவில் குறையும்.

எமது முந்தய பதிவை வாசிக்க: Elements wellness Melt fat benefits in Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, உலகம் முழுவதும் அங்கீகரித்த அதேநேரம்  இயற்கை கொடுத்திருக்கக் கூடிய ஒரு அற்புதமான கொடைதான் ஆயுர்வேதம். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திருந்தாலும் அல்லது சொத்து சேர்ந்திருந்தாலும் ஆயுர்வேதம் சொல்கின்றது லாபத்திலே மிகப்பெரிய லாபம்  ஆரோக்கியமான உடல் அமைப்பு. நமது உணவை சார்ந்துதான் நமது ஆரோக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரும் போது பல்வேறு விதமான பாதிப்புகள் மனிதர்களுக்கு வந்தாலும் அதில் மிக முக்கியமான ஒன்று சுவாசப் பிரச்சனை.

இந்த சுவாசப் பிரச்சனைக்காக மை லைப் ஸ்டைல் மார்க்கெட்டிங் குளோபல்  பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மிக முக்கியமான ஒரு பொருள் தான் எலிமென்ட்ஸ் வெல்லனஸ் ஆயுஸ்வாஸ். இந்த பொருட்களை தயாரித்து வழங்குகின்ற ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி தான் டாக்டர் டி பி அனந்த நாராயணா.

ADVERTISEMENT

இவர் பல வருடங்கள் அனுபவம் மிக்க ஒரு நபர். மிகப்பெரிய ஆயுர்வேத நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு நபர். ஆயுர்வேதம் தொடர்பான புத்தகங்கள் பல எழுதியிருக்கின்றார். இவரின் அயராத உழைப்பு கிடைக்கப்பெற்ற பொருட்கள் தான் எல்மெண்ட்ஸ் வெல்லனஸ் ஆயுர்வேதப் பொருட்கள். அவரது பல தயாரிப்புகளில் இன்றைக்கு நாம் ஆயுஸ்வாஸ் என்ற பொருளைக் குறித்து தான் பார்க்க இருக்கின்றோம்.

ஆயுஸ்வாஸ் என்றால் என்ன?

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை நாம் அறிவோம். அதை ஆயுர்வேதம் வாதம், பித்தம், கபம் என மூன்று கூறுகளாகப் பிரித்து இருக்கிறது. இதில் கபம் தொடர்பான பிரச்சனை தான் அதிக நபர்களுக்கு சுவாச பிரச்சினையை கொண்டு வருகின்றது. சுவாசம் தொடர்பாக எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு மிகுந்த தீர்வு கொடுக்கக் கூடிய ஒரு உன்னதமான பொருள் தான் ஆயுஸ்வாஸ். நமது நுரையீரலை பாதுகாப்பதன்  வழியாக சுவாச பிரச்சனைகளில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கிறது இந்த பொருள்.

சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் எப்படி வருகின்றது?

இந்த நுரையீரல் பிரச்சனைகள் வருவதற்கு மிக முக்கியமான காரணம் மாசு கலந்த காற்று. இது நுரையீரலின்  உள் செல்கின்ற போது, இந்த மாசுக்கள் அந்த காற்றில் இருக்கக்கூடிய துகள்கள் அவற்றை அடைத்து சுவாசத்தை தடை செய்கின்றன.காற்றின் வழியாக பரவக்கூடிய அநேக நோய் கிருமிகள்  நம்முடைய நுரையீரலை பாதிப்படைய செய்கின்றன.

ADVERTISEMENT

நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதற்கான அடையாளங்கள்

நுரை ஈரல் பாதிக்கப்பட்டால் மாடிப்படி ஏறும்போதும்,  அதிக தூரம் நடக்கும்போதும்,  நீச்சலடிக்கும் போதும், ஏற்ற இறக்கங்களில்  செல்லும்போதும்  மூச்சு வாங்கும் பிரச்சனை உருவாகும். குளிர் பிரதேசங்களில் செல்கின்ற போதும் இந்த பிரச்சனை அதிகரித்து மூச்சு திணறல் உருவாகும். அலர்ஜி பிரச்சனை இருப்பவர்களுக்கு மூச்சுக் குழலில் அடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி இருமலை ஏற்படுத்தி குறிப்பாக இரவு உறங்கச் செல்லும் போது அதிக இருமலை ஏற்படுத்தி  சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும்.

சுவாசப் பிரச்சனை வருவதற்கான காரணங்கள்

அலர்ஜி தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் அதை தொடக்கத்திலே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நிச்சயம் எதிர்காலத்தில் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு பிரச்சனை உருவாகும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியான உடற்பயிற்சி இன்மை  போன்ற காரணங்களினாலும் நம்முடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு பிரச்சனை எழும். சிலருக்கு பிறவியிலேயே இந்த பிரச்சனை வந்துவிடுகிறது.

நிச்சயம் அவர்களது முன்னோர்களுக்கு அல்லது தாய் தந்தையருக்கு இந்த பிரச்சனை இருந்திருக்க வாய்ப்பு உண்டு.மேற்கண்ட காரணங்களால் வருகின்ற சுவாச பிரச்சனைக்கு பலரும்  பயன்படுத்தக் கூடிய தீர்வு இன்ஹேலர். அதுபோல் ஒருசிலர் பல மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்துகின்றனர். இவையெல்லாம் தற்காலிகத் தீர்வையே வழங்குகின்றன. பிற்காலத்தில் பெரிய நோய்களில் கொண்டு விடுகின்றன. எனவே பக்க விளைவுகள் இல்லாத இயற்கை சார்ந்த ஆயுர்வேத பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துவது சிறப்பு.

ஆயிஸ்வாஷில் சேர்ந்துள்ள மூலிகைகள்

நுரையீரல் சார்ந்த இந்த சுவாச பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தருகிறது மை லைப் ஸ்டைல் மார்க்கெட்டிங் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எலிமென்ட்ஸ் வெல்லனஸ் ஆயிஸ்வாஷ் என்ற ஆயுர்வேத தயாரிப்பு. உடலுக்கு அதிக ஆற்றல் தருகின்ற உலர் திராட்ச்சை,  அலர்ஜிக்கு எதிராக செயல்படும் வாகை, சுவாச குழாய்களை சுத்தப்படுத்த கண்டங்கத்தரியும், இரத்தத்தில் பித்தத்தை கட்டுப்படுத்துகின்றது   ஆடாதோடை.

ADVERTISEMENT

இது காச நோயைக் கூட கட்டுப்படுத்த வல்லது. கபத்தை உள்ளே உறைய விடாமல் வெளியே கொண்டு வருவதில்  மிகப் பெரிய பங்கு ஆடாதோடைக்கு உண்டு. அதிமதுரம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குரல் வளத்தை சரியாகவும் சுவாசக் குழாயை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது.

மரமஞ்சள் நுரையீரலில்  தொற்றுகள் வராமல் நம்மை பாதுகாக்கிறது. சடாமாஞ்சில் உடலில் தேவைக்கு சூடை உருவாக்கவும் அதேநேரம் மனதை சாந்தமாக வைத்திருப்பதற்கும்  பயன்படுகின்றது. ஏலக்காய் பாக்டீரியா தொற்றில் இருந்து நம்மை  பாதுகாப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. திரிகடுகம் அதாவது நமது உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்காக இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான இதில் தேனும் சேர்க்கப்பட்டுள்ளது. உடல் ஆற்றலோடு செயல்படுவதற்கு சர்க்கரையும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆயிஸ்வாஷ் யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

இதை  எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதற்கென்று நேரம், காலம்  பார்க்க வேண்டிய தேவையில்லை. இதை காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் பால் அல்லது சுடுதண்ணீரில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. சிறியவர்கள்  ஒரு டீஸ்பூன் அளவிலும், பெரியவர்கள் இரண்டு டீஸ்பூன் அளவிலும் இதை பயன்படுத்தலாம். பாலில் கலந்து பயன்படுத்துவது இன்னும் அதிக பலனை தரும். ஆயிஸ்வாஷ் எடுத்துவிட்டு அரை மணிநேரம் தாண்டி சாதாரணமாக நீங்கள் உண்ணும் உணவை எடுக்கலாம்.

எமது அடுத்த பதிவை படிக்க: Elements wellness Uri flush 3 in Tamil

யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது?

ADVERTISEMENT

10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த பொருளை பயன்படுத்த கூடாது. கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது. குறைந்தது 6 மாதங்கள் இதை பயன்படுத்த வேண்டும். 4 வாரங்கள் அதாவது ஒரு மாதம் வரை இந்த பொருளை பயன்படுத்தி எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று தென்பட்டால் ஒரு மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.

அபாய கட்டத்தில் இருக்கும் மூச்சுத்திணறல் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த பொருளை அறிமுகப்படுத்த வேண்டாம் . நிமோனியா பாதிப்பு மிகவும் அபாய கட்டத்தில் இருப்பவர்களுக்கும் இந்த பொருளை கொடுக்க வேண்டாம். இந்தப் பொருள் தேவையெனில் கருது பதிவிடும் இடத்தில் உங்கள் தொடர்பு என்ணு டன் தொடர்பு கொள்ளுங்கள்.

அல்லது 8072301341 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply