நன்றி உணர்வால் வாழ்வில் வெற்றிகளை குவிப்போம்!

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது. அன்றே மறப்பது நன்று.என்கிறது திருக்குறள்.  நன்றி உணர்வால் வாழ்வில் வெற்றிகளை குவிப்போம்! ஆம் நன்றியுணர்வு என்பது மிக முக்கியமான ஓர் உணர்வு. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிக உயரத்தை அடைய நீங்கள் எவ்வாறு நன்றி உணர்வை பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து  இந்த பதிவில் காண்போம்.

நன்றி செலுத்துங்கள்

வறுமை நிலையில் வாடிக்கொண்டிருக்கும்  உங்கள் வாழ்க்கையில் வசந்த ராகம் ஒலிக்கத் துவங்கவேண்டும் எனில் நீங்கள் நன்றியுடைவர்களாய் இருக்க பழகவேண்டும். நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் பலரின் உதவிகளால்தான் நாம் வாழ்ந்து கொண்டுருக்கிறோம்.

இயற்கையும் பல்வேறு தளங்களில் நமக்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் ஏனோ நன்றியுணர்வை வெளிப்படுத்த மறந்து விடுகின்றோம்.இதற்கெல்லாம் முக்கிய கரணம் நாம் பிறந்து வளர்ந்த சூழல்கள் தான். இதுவரை நாம் அப்படி வாழ்ந்தால்தான் நமது வாழ்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், வாழ்வில் பின்னோக்கி செல்கின்றோம்.

எனவே வாழ்வில் செல்வ வளங்கள்  நிரம்பி வழிய வேண்டுமெனில் நாம் பெற்றுக் கொள்ளும் எல்லா உதவிக்கும் நன்றி உணர்வு உடையவார்களாய் வாழ்வோம். வெற்றிகளை குவிப்போம்! இப்பொது இந்த பதிவை வாசிப்பவர்களுக்கு நன்றியுணர்வு என்றால் என்ன என்பது சரியாக புரியாமல் இருக்கலாம்.

ADVERTISEMENT

நன்றி உணர்வை  குறித்த ஓர் புரிதல் 

நாம் எந்தெந்த சேவைகளை இந்த சமூகத்தில் இருந்து பெறுகின்றோமோ அதற்கெல்லாம் நன்றி கூறவேண்டும். உதாரணமாக ஒரு உணவகத்துக்கு சென்று நல்ல உணவை உண்கின்றோம் என வைத்துக் கொள்வோம். உண்ட பிறகு அதற்குரிய பணத்தை கொடுக்கும் முன், இந்த சுவையான உணவை தயாரித்து கொடுத்த அந்த நிறுவனத்துக்கு மனதார, வாய்திறந்து ”நன்றி” என சொல்லுங்கள். இதுபோல நீங்கள் பணம்கொடுத்து பெறும் சேவைகளுக்கும் அல்லது  இலவசமாக பெறும் சேவைகளுக்கும் கட்டாயமாக நன்றி சொல்லவேண்டும்.

இயற்கைக்கும் நன்றி சொல்லுங்கள்

அதுபோல இயற்கையை நினைத்து பாருங்கள், இரவும்,பகலும் மாறி மாறி வந்து, சரியான நேரத்தில் மழை கொடுத்து, நாம் மகிழ்வாய் உண்டு வாழ விவசாயத்தை செழிக்கவைத்து  தனது கடமையை சரியாக செய்வதால் இந்த உலகில் நாம் எல்லோரும் மிகவும் மகிழ்வாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த செய்ல்களை என்றாவது நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லியிருக்கின்றீற்களா?

இன்றிலிருந்து மனதார நன்றி சொல்வதை வழக்கம் ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் அடிக்கடி நன்றிசொல்லி பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்க தொடங்கும். ஆம், நீங்கள் நெடும் நாளாக நினைத்தும் நடக்காத எல்லா சம்பவங்களும் ஒன்றொன்றாக நடக்க தொடங்குவதை காண்பீர்கள். உங்களை சுற்றி வசந்தகாலம் வலம்வரும்.

ADVERTISEMENT

அப்படிப்பட்ட புதிய சூழல்கள் உருவாகி வருகின்றபோது , மறவாமல் துணைநின்ற உங்கள் ஆழ்மனதுக்கும், அதை கொடையாக வழங்கிய அந்த பிரபஞ்சத்துக்கும் நன்றி கூறுங்கள். உதாரணமாக நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களது முக்கியமான தேவை ஓன்று, ஒரு நபர் வழியாக நிறைவேற்ற பட்டது என்று வைத்துக்கொள்வோம் .

உடனடியாக எந்த தயக்கமும் இன்றி , ஆழ்மனமே நீ எனது கோரிக்கையை ஏற்று  அதை பிரபஞ்சத்திடம் தெரியப்படுத்தி எனக்கு இந்த காரியத்தை சாதித்துக்கொடுத்தாயே. உனக்கு மிக்க நன்றி என மனதளவில்  சொல்லுங்கள் எப்பொழுதும் நீங்கள் ஆழ்மனதிடம் அதை பெற்றுத்தா, இதை பெற்றுத்தா என்று  கட்டளை கொடுக்கக்கூடாது.

மாறாக நான் விரும்பிய இந்த செயலை , வெற்றியை எனக்கு பெற்று கொடுத்தாய். உனக்கு மிக்க நன்றி – எனச் சொல்லுங்கள். நீங்கள் நினைத்ததை எளிதில் அடைய வேண்டுமா? கீழ்க் கண்டவாறு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நன்றி சொல்லுங்கள் உங்கள் ஆழ்மனதிற்கு. வெற்றிகளை குவிப்போம்!

எமது முந்தய பதிவை வாசிக்க: ஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம்

ஆழ்மனதுக்கு நன்றி சொல்லும் முறை

ADVERTISEMENT

அதுபோல் நமது ஆழ்மனதுக்கு நன்றி சொல்லும்போது, நாம் விரும்புகின்ற ஆரோக்கியம், செல்வம், வெற்றி, புகழ், பணம், காதல் வெற்றி  போன்ற விஷயங்கள் கிடைத்தாக நினைத்து நன்றி சொல்ல வேண்டும்.

அதாவது இப்போது உங்கள் கையில் 1 கோடி ரூபாய் கிடைத்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? எப்படிப்பட்ட மகிழ்ச்சியான மனநிலை உங்களை ஆட்கொள்ளும் ? அந்த மன நிலையோடும், உணர்வோடும்  கடவுளுக்கு அல்லது பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். சில உதாரணங்கள் இதோ …

  1. நான் அழகாக இருக்கிறேன் – அதற்காக நன்றி ஆழ்மனமே.

2 நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் – அதற்காக நன்றி ஆழ்மனமே.

  1. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – அதற்காக நன்றி ஆழ்மனமே.
  2. நான் வெற்றிகளை தினமும் பெற்றுக்கொண்டிருக்கிறேன் – அதற்காக நன்றி ஆழ்மனமே.
  1. எனது உழைப்பின் வழியாக கோடிக் கணக்கிலான பணம் எனக்கு கிடைத்துக் கொண்டே  இருக்கிறது – அதற்காக நன்றி ஆழ்மனமே.
  1. வெற்றிகள் பல பெற, அதன் விலையாக மிகக்கடினமான உழைப்பை எளிமையாக கொடுத்துக் கொண்டிருக்கிறேன் –அதற்காக நன்றி ஆழ்மனமே.
  1. மனம் விரும்பும் எல்லா செல்வங்களையும் பெற்று, நீடிய ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்தோடும், இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்  – அதற்காக நன்றி ஆழ்மனமே.
  1. நான் விரும்பிய வாழ்கை துணை எனக்கு கிடைத்துவிட்டது. – அதற்காக நன்றி ஆழ்மனமே.
  2. என்னை சார்ந்த நட்புகளும், உறவுகளும் மகிழ்ச்சியாய் வழ்ந்துகொண்டிருக்கிர்கள். – அதற்காக நன்றி ஆழ்மனமே.

இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் எல்லா சூழலிலும், உங்கள் வாழ்கை சூழலுக்கு ஏற்றவாறு  ஆழ்மனதிற்கு நன்றி சொல்லுங்கள். நன்றி உடையவராய் வாழுங்கள் .

உழைக்க களதில் இறங்குங்கள்

ADVERTISEMENT

கனவு கண்டால் மட்டும் போதுமா? அல்லது ஆழ்மனதுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதுமா? கனவுகளை, விருப்பங்களை  ஆழ்மனம் வழியாக பிரபஞ்ச சக்தியிடம் தெரிவிக்கும் போது, நாம் கேட்கும் பணத்தையும் , பொருளையும் நமது வீட்டில் நேரடியாக கொண்டுவந்துவிடுமா?  நிச்சயமாக இல்லை. அதை நாம் பெற்றுக்கொள்வதற்கான சுழ்நிலையை நமக்கு உருவாக்கி தரும்.

நீங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு விற்பனையாளர் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தயார்நிலையில் வைத்திருக்கும் சரக்கு , இதுவரைக்கும் மந்தமாக இருந்திருக்கும்.

உங்கள் ஆழ்மனதை மேற்கண்ட யுத்திகள் மூலம், தூண்டிவிட்டதன் விளைவாக, அந்த நிலை தற்போது மாறி விற்பனை சூடு பிடிக்க துவங்கும்.  இப்போது   இந்த வாய்ப்பை சரியாக புரிந்துகொண்டு நமது கையிருப்பை கூட்டி விற்பனையை ஊக்கப்படுத்த களத்தில் இறங்கவேண்டும்.

நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், பல கற்களும் நாம் மிதித்து நடக்க பாதையாய் விரிந்து கிடக்கின்றன. ஆனால் சில கற்கள் மட்டும் நாம் கைகூப்பி வணக்கம் செலுத்துகின்ற அளவிற்கு சிலைகளாய் உயர்ந்து நிற்கின்றன. என்ன வித்தியாசம்? கொஞ்சம் சிந்தித்து  பாருங்கள் !

சரியான முறையில் ,மிகக்கூர்மையாக கவனித்து, படைப்பாற்றலோடு, தியாகங்கள்  நிறைந்த கடின உழைப்போடு  செதுக்கப்பட்ட கற்கள் அழகிய சிலையாக உயர்ந்து நிற்க, சாதாரண  முறையில் சிந்தித்து பாதையாக போடப்பட்ட கற்கள் கால்களால் மிதிபட்டு கிடக்கின்றன.

ADVERTISEMENT

இரண்டுமே உழைப்பினால் வந்ததுதான். ஆனால் , அணுகுமுறைகள் இரண்டு . உழைக்காமல் யாரும் உயர்வை பெற இயலாது. ஒருவேளை அவ்வாறு பெற்றுவிட்டாலும் அது கானல்நீர் போன்றதாகத் தான் இருக்கும். உழைப்பின் தன்மையை பொறுத்தே நமது வெற்றி தீர்மானிக்கப்படும். திட்டமிட்டு , படைப்பாற்றலோடு உழைக்கத் தயாரானால் வெற்றி எனவே, உங்கள் பக்கம் தான்.

வாழ்வை அனுபவியுங்கள்

இந்த உலகில் பிறந்துவிட்டோம் . இனி நமக்கு இன்னொரு மனிதப்பிறவி உண்டா?  இல்லையா ? என்றெல்லாம் ஆராய தேவையில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் கூட   கடந்த காலத்தைப்பற்றி எதுவும் நமக்கு தெரியப்போவதும் இல்லை. எனவே இந்த பிறவியின் நல்ல பலன்களை  நிச்சயம்  நாம் அனுபவிக்க வேண்டும்.

வாழ்வில் சிக்கல்கள் வரும்போது அதை எதிர்கொள்ள தெரியாதால், பலரும் ஆன்மீகக் கூட்டங்களில், தஞ்சம் புகுகின்றனர். இன்றைய ஆன்மீக வாதிகள் பலரும், மக்களுக்கு வாழ்வை, அதில் வரும் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்காமல், இந்த உலக  வாழ்வு நமக்கு தேவை இல்லை.

மறு உலகவாழ்வு நமக்கு போதும் எனக்கூறி இப்பிறவின் பயனை அனுபவிக்க  விடாமல் தங்களது சுயநலத்திற்காக மக்களிடம் ஒருவித இறை போதையை உருவாக்கி அதில் இன்பம் காண்கின்றனர். மக்களின் இலாமையை கையில் எடுத்துக்கொண்டு, அவர்கள் ஆடம்பரமாக வாழ்கின்றனர். எந்த மத அமைப்பையும் எடுத்து பாருங்கள், 80% ஆன்மீகவாதிகளும் சொகுசு காரில்தான் வலம் வருகின்றனர்.

ADVERTISEMENT

அது மட்டுமா? ஆடம்பர மாட மாளிகைகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அவர்கள் சம்பாத்தியத்தை  அடுக்கிக்கொண்டே  போகலாம். நான் ஏன் இந்த செய்தியை இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன் என்றால், மக்கள், படைத்தவன் தனக்கு கொடையாக அருளிய ஆழ்மனதை, அதன் பயனை உணர்ந்து பயன்படுத்தாமல்  இவர்கள் பின் சென்று வாழ்வை வீணடிக்கின்றனர். எனவே நீங்கள் மிகவும் விழிப்பாய் இருங்கள்.

மனதார நன்றி சொல்லுங்கள்

இயற்கை கொடுத்ததை நினைத்து மனதார நன்றி சொல்லுங்கள். இன்று உங்களிடம் வெறும் 10 ரூபாய் தான் இருக்கிறதா? இல்லை வேண்டாம் 1 ரூபாய்தான் இருக்கிறதா? ஐயோ எனிடம் ஒன்றும் இலையே என புலம்பாதீர்கள்.

உங்கள் புலம்பலை கேட்க்க, கேட்க்க   பிரபஞ்சம் உங்களிடம் உள்ளதையும் புடிங்கிவிடும். மாறாக எத்தனைபேரிடம் இல்லாத அந்த 10 அல்லது 1 ரூபாய் இன்று எனிடம் இருக்கிறதே என நினைந்து மனதார  பலமுறை நன்றி சொல்லிமட்டும் பாருங்கள், நாளைய நாள் மிகவும் விதிசயமாக இருக்கும். பணம் வரும் சூழ்நிலை தானாகவே உருவாகும்.

அதுபோல நன்றாக சம்பாதிக்கின்ற சில மக்கள் , தனது தேவைக்குக்கூட பணத்தை பயன்படுத்தாமல் , கஞ்சத்தனம் காண்பிக்கின்றனர்.  அதை சேமிப்பு என   தவறாக நினைக்கின்றனர் . சேமிப்பு என்பது நமது வருவாயின் ஒரு பகுதியே தவிர, வருவாய் அனைத்தும் சேமிப்பு அல்ல. ஒருவர் சம்பாதிப்பதே, அவரது  குடும்பத்தில் உள்ள மனைவி அல்லது கணவர் மற்றும் பிள்ளைகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கே.

அதை புரிந்துகொள்ளாமல், வரும்காலத்துக்கு என்று பதுக்கி வைக்கின்றனர். அதனால் சம்பாதிக்கின்ற அனைத்தையும் செலவு செய்யவேண்டும் என சொல்லவில்லை. அதில் ஒரு பகுதியை சேமித்து வைத்துவிட்டு மற்ற பகுதியை நாம் தாராளமாக செலவு செய்ய வேண்டும். காரணம் உடல்நிலை நன்றாக இருக்கும்போதே இந்த பணத்தை அனுபவித்ததாக வேண்டும்.

ADVERTISEMENT

நாளை நமது உடல்நிலை எவ்வாறு இருக்கும் என கணிக்க முடியாது. ஒருவேளை சர்க்கரை நோய் வந்துவிட்டால் இனிப்பை ருசிக்க முடியுமா? அல்லது சிறுநீரகங்கள் பாதித்தால் ஒருகோப்பை நீர் நிம்மதியாய் அருந்த முடியுமா?

இதுபோன்ற கொடிய நோய்கள் பாதித்தால், அல்லது நமது இதயம் நாளையே நின்றுவிட்டால் …. நாம் பல தியாகங்கள் செய்து சம்பாதித்த பணத்தால் என்ன பயன்? சிந்திபோம், மனதை பயன்படுத்தி சம்பாதிக்கும் பணத்தை தேவைக்கு செலவு செய்வோம்.

நம்மை சுற்றி பலர்  வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது  ஏழைகளாக வாழ்ந்து வருகின்றனர். நாம்  சம்பாதித்ததில் கொஞ்சம் ஏழைகளுக்கும் இரக்கம் காட்டுவோம். நன்றி உணர்வோடு வாழ்வோம். செல்வ வளங்களை இறைவன் உங்களுக்கு கொடுத்து உதவவும் தான்.

நமக்கு கொடுக்கப் பட்டிருக்கும்  வளங்கள் அனைத்தும் பதுக்குவதற்கு அல்ல,   பகிர்வதற்கே ! . எனவே கிடைத்தை தேவையில் இருப்போருக்கு பகிர்ந்து வாழ்வோம். பகிர்தல் என்பது பணம் மட்டும் அல்ல. நமது நேரம், திறமை போன்றவையும் கூட. நம்மிடம் உள்ளதை பகிர்வதும் நன்றி உணர்வின் வெளிப்பாடே.

எமது அடுத்த பதிவை படிக்க: வெற்றி என்ற இமயத்தைத் தொட வேண்டுமா ?

ADVERTISEMENT

Leave a Reply