வெற்றி என்ற இமயத்தைத் தொட வேண்டுமா ?

     வாழ்வில்  வெற்றி என்ற இமயத்தைத் தொட வேண்டுமா ? இந்த ஒரு கேள்வி உங்கள்முன் கேட்கப் பட்டால் அதற்கு, உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சற்றும் தயங்காமல் வருவது “ஆம்” என்ற பதிலாகவே இருக்கும். வாழ்வில்  எல்லா செல்வங்களையும் பெற்று வளமுடனும்,  நலனுடனும், மகிழ்ச்சியுடனும்  வாழவேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும். இந்த விருப்பத்தை நிறைவேற்ற பலர்  முயற்சிகளை மேற்கொண்டும், அதில் வெற்றிபெறுதல் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம் ஆகிறது. ஏன் இவ்வாறு ஒரு சிலருக்கு மட்டும் சாத்தியம் ஆகின்றது ? எல்லாரும்தானே முயல்கின்றர்கள். இதற்கு வினா காண்பதே இந்த பதிவின் நோக்கம்.

நாம் வெற்றி பெறாதது யார் குற்றம்?

மேற்கண்டவாறு எல்லோரும் கடுமையாக உழைத்தும் ஏன் வெற்றி என்ற இமயத்தை தொட இயலவில்லை? அது யார் குற்றம்? படைத்தவன் குற்றமா? வளர்த்தவர்கள் குற்றமா? இல்லை இந்த சமூகம் அல்லது நாட்டை ஆளும் தலைவர்களின் குற்றமா? நாம் இதுவரை வெற்றிபெறவில்லை என்றால் முழுக்க, முழுக்க நாம்தான் குற்றவாளி. ஆம், நம்மை பற்றி, நம் திறமையை பற்றி என்றாவது ஆய்வு செய்தது உண்டா? நான் யார்? எதற்காக இந்த உலகில் பிறந்திருக்கிறேன்?

எனது பிறப்பின் நோக்கம் என்ன?  போன்ற கேள்விகளை  உங்கள் ஆழ்மனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டது உண்டா? வாழ்வில் வெற்றியை நோக்கி உங்கள் அடுத்த  தேடலை தொடங்கும் முன் இந்த பதிவை முழுமையாக சில முறைகள் வாசித்து, புரிந்து, சரியான பயிற்சியை மேற்கொண்டு  வெற்றிப்  புரட்சிக்குப் புறப்படுங்கள். வெற்றி என்ற இமயத்தை நிச்சமயமாக தொட்டுவிடலாம்.

“உன்னை அறிந்தால்…. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் , உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்” .. என்ற கவிஞன் கண்ணதாசனின் வைர வரிகள் நமது வாழ்வாக மாறவேண்டும். அதாவது, வெற்றி என்ற இமயத்தை எட்டவேண்டுமெனில்  ஒவ்வொருவரும் தன்னை அறிதல் என்பது  மிக முக்கியம். தன்னை அறியவேண்டும் எனில் மனதை குறித்தும் அதன் தன்மையை குறித்தும் நிச்சயம்  தெரிந்தாக வேண்டும்.

ADVERTISEMENT

ஆழ்மனதின் சக்தியை தெரிந்துகொண்டு, நான் யார்? எதற்காக இந்த உலகத்தில் பிறந்தேன்? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே வெற்றி என்ற இமயத்தை தொட இயலும். தன்னை அறிதல் என்றால் என்ன? எப்படி என்னை நான் அறிந்துகொள்வது? தியானம் எப்படி செய்து நமது மனதை பண்படுத்துவது? நமது இலக்கை அடைய மனக்காட்சி எவ்வாறு உதவுகிறது?  நன்றியுணர்வின் சக்தி என்ன? போன்ற வினாக்களுக்கு விடை கண்டுபிடித்து வெற்றி வாழ்கை என்ற இமயத்தை தொட, தொடர் பதிவின் மூலம் புறப்படுவோமா?

தன்னை அறிதல் ஓர் கலை

     அரசன் ஒருவன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தான். அந்த கால முறைப்படி வீரமும் தன்னம்பிக்கையும் மிகுந்த ஒரு மருமகனை தேர்வு செய்யும் படலம் தொடங்கியது. அரசன் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவிக்கின்றான். அந்த  நாளும்  வந்தது. கட்டுடலைக் கொண்ட வீரம் மிக்க இளைஞர்கள் பலர் ஓன்று கூடினர். போட்டி அறிவிக்கப்பட்டது. கோட்டையின் நுழைவாயிலில் இருக்கும் அந்த சக்தி வாய்ந்த, மிகக்கடினமான கதவை ஒரே முயற்சியில் வலது கையால் தள்ளித் திறக்கவேண்டும் என்பதே போட்டி.

ஒருவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும். ஒரே முயற்சியில் கதவை தள்ளி திறக்கும் நபருக்கு எனது மகளை திருமணம் செய்து தருவதோடு, நாடையும் கொடுத்து அரசனாக முடி சூட்டுவேன். அதே நேரம்  போட்டியில் தோல்வியை தழுவும் நபருடைய வலது கை வெட்டப்படும் என்ற விதிமுறையும் கூடவே வழங்கப்பட்டது.

கூடி வந்த இளம் காளையர்களுக்கு இந்த விதிமுறைகள் ஏமாற்றத்தையே கொடுத்தது. போட்டியில் வெற்றிபெறாதது ஒரு பொருட்டல்ல. மண்ணும், பெண்ணும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. வெற்றி பெறாவிட்டால்    வலது  கை வெட்டப்படும் என்ற அறிவிப்பு அவர்களிடையே மனக்கலக்கத்தை  கொடுத்தது. ஒவ்வொருவரும் பின்வாங்கத் தொடங்கினர். அந்நேரத்தில்  போனால் ஒரு கைதானே போகும். இன்னொரு கையை  வைத்து பிழைத்துவிடலாம் .

ADVERTISEMENT

வெற்றி பெற்றால்  மண்ணும், பெண்ணும் கிடைத்து ஒரு அரசனாக மாறிவிடலாம்  என்ற நேர்மறையான, உறுதியான எண்ணத்தில்,  ஓர் இளைஞன் மட்டும் இந்த போட்டியில் கலந்துகொள்ள முடிவு செய்தான். உடன் வந்த நண்பர்கள் பைத்தியக்காரன் என ஏளனம் செய்தனர். இருந்தாலும் இதை ஒன்றும் பொருட்படுத்தாமல் போட்டி நடக்கும் கதவின் அருகில் வந்தான். தனது சக்தி அனைத்தையும்  ஒருங்கணைத்துக் கொண்டு தனது வலதுகையால் கோட்டை கதவை தள்ளினான்.

கூட்டமே இவனது வலதுகை வெட்டப்படும் என எதிர்பார்த்து கிடந்த நேரம், என்ன ஆச்சரியம்? கதவு புஸ்….  என திறந்துவிட்டது.  ஆம் கதவு தாழிடப்படவில்லை. பிறகு என்ன? எல்லாம் கிடைத்து அந்த நாட்டுக்கே மன்னன் ஆனான். இந்த கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்? இந்த பிரபஞ்சத்தில் வாய்ப்புகள் என்ற கதவுகள் திறந்துதான் கிடக்கின்றன.

யார் தன்னை, தனது திறமைகளை நன்றாக அறிகின்றார்களோ அவர்களுக்கு  எல்லாமே சாத்தியம்தான். அவர் தனது பலத்தை குறித்து தெளிவாக தெரிந்த்திருந்ததால், உன்னால் முடியாது என்ற  எதிர்மறையான  கூச்சல்களை பொருட்படுத்தாமல் முயற்சி செய்து வெற்றி பெற முடிந்தது.

எமது முந்தய பதிவை வாசிக்க: மனதும் அதன் ஒப்பற்ற சக்தியும்

நம்முள் புதைந்து கிடக்கும் திறமைகள்

ADVERTISEMENT

மனிதர்கள்  அனைவரும் ஒரு தலைசிறந்த பல்கலைக்கழகம் என்பேன். எல்லா திறமையும் உள்ளுக்குள் மறைந்து கிடக்கின்றன. நமது திறமை பலநேரங்களில் நமக்கே தெரிவதில்லை. உதாரணத்திற்கு, நீங்கள் நன்றாக பாடும் திறமை உடையவர் என வைத்துக்கொள்வோம். எந்த மேடையில் தோன்றினாலும் நீங்கள் தான் பரிசை தட்டிச்செல்வீர்கள்.

இந்த பாடும் திறமை எப்படி வந்தது? என்றோ  ஒரு வாய்ப்பு கிடைத்தது. தயக்கத்தோடு தான் அந்த வாய்ப்பை பயன்படுத்தினீர்கள். பின்னர் அது பழக்கமாக மாறி வெற்றியும் பெற்றீர்கள். இப்போது நீங்கள், எனக்கு பாடும் திறமை மட்டும்தான் உண்டு என முடிவுசெய்தீர்கள். ஆனால் பேச்சு, நடனம், எழுத்து என எல்லா திறமைகளும் உங்களுக்குள்தான்  உறங்கிக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் அவற்றை தட்டி எழுப்ப முயலவில்லை என்பதுதான் உண்மை. நிரூபிக்கவா?

உங்களுக்கு இப்போது ஒரு புதிய வாய்ப்பு வருகிறது. அதாவது ஒரு ஓட்டப்பந்தயம்  உங்கள் ஊரில் நடைபெறுகிறது. 2 கிலோமீட்டர் தூரத்தை 5 நிமிடங்களில் அடையவேண்டும். வெற்றிபெற்றால் பணப்பரிசு கிடைக்கும். இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?  எனக்கு ஓட்டம்  என்பது  ஒத்து வராது. என்னால் 5 நிமிடங்களில்  1 கிலோமீட்டர் தூரத்தைக் கூட கடக்க  முடியாது. இப்படி  நீங்கள் உங்கள் ஆழ் மனதில் ஏற்கனவே  பதிந்து வைத்துள்ளீர்கள்.

எனவே நீங்கள் போட்டியில் இருந்து பின்வாங்குவீர்கள். ஆனால் நான் இப்போது உங்களுக்குள்ளும் ஓடும் திறமை உண்டு என நிரூபிக்க போக்கின்றேன். அதுவும் 2 கிலோமீட்டர் தூரத்தை 5 நிமிடங்களில் அல்ல! வெறும் 3 நிமிடங்களில் உங்களால் கடக்க முடியும் என நிரூபிக்க போகின்றேன்.  தற்போது  உங்களை, திடீரென ஒரு யானை  அல்லது ஒரு பாம்பு துரத்துவதாய் கற்பனை செய்து பாருங்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள்  உயிரை காப்பாற்ற சக்தியினை ஒருங்கிணைத்து ஓட்டத்தை தொடர்வீர்களா? இல்லை அப்படியே நிற்பீர்களா?

2 கிலோமீட்டர் என்ன? அதைவிட தூரமானாலும் ஓடுவீர்கள் தானே? 5 நிமிடத்தில் ஓட முடியாத உங்களுக்கு  எப்படி 2 கிலோமீட்டர் தூரத்தை இவளவு வேகமாக ஓட முடிந்தது? இந்த சக்தி எங்கிருந்து வந்தது? உங்களுள் தானே இருந்தது? இப்போது உங்களாலும் ஓட முடியும் என உணர்ந்து கொண்டீர்கள் அல்லவா? இதுதான்  தன்னை அறிதலுக்கு ஒரு சிறு உதாரணம்.

ADVERTISEMENT

யார் தன்னை, தனது திறமையை நன்றாக அறிந்து முயற்சியை தொடர்கிறார்களோ, அவர்கள் கண் முன் தடைகள் போன்ற தோரணைகள் தென்பட்டாலும், அது தடைகளே அல்ல. வெற்றி என்ற இமயத்தை தொட இந்த பிரபஞ்சம் காட்டுகின்ற படிக்கட்டுகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே வெற்றி வேண்டும் எனில்  தன்னை நன்றாய் அறிதல் வேண்டும்.

தன்னை அறிதல் வேண்டுமெனில்,  நமது ஆழ் மனதையும், அதன்  செயல்பாட்டையும் குறித்து தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும். அப்போது தான்  வெற்றி என்கின்ற இமயத்தை எளிதில் தொட இயலும்.

வெற்றி என்ற இமையத்தை தொட ….

வெற்றியை உறுதி செய்ய முதலில்  நமது மனதை சற்று கவனித்தால் போதும். நமது தேவை என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பலருக்கும் தனக்கு என்ன தேவை என்பதில் கூட ஓர் தெளிவில்லை. இதுதான் நமது வெற்றியை தள்ளிப் போடுகின்றது. உதாரணத்திற்கு உங்களுக்கு பணம் தேவை படுகின்றது. நான் இப்போது உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை படுகின்றது என உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

உங்களுக்கு தற்காலம் எவ்வளவு பணம் தேவைப் படுகிறதோ அவ்வளவு பணம் தேவை என சொல்வீர்கள். எதிர்காலத்தில் குழந்தைகளின் கல்வி, திருமணம், வயதான காலத்தில் தேவைப்படும் பணம் போன்றவை குறித்து எதுவும் சிந்திப்பதில்லை. அதனால் தான் நாம் தெளிவாய் இல்லை என கூறினேன்.

ADVERTISEMENT

எப்படி தெளிவாய் முடிவெடுப்பது?

சரி, இதில் எப்படி தெளிவாய் முடிவெடுப்பது? மேற்கண்ட தேவைகளை தெளிவாக எழுத்து வடிவில் வடியுங்கள். இவற்றை சமாளிக்க ஒரு மாதம் ரூபாய் 50000 பணம் தேவைப் படுகின்றது என வைத்துக் கொள்வோம்.  ஆனால் உங்களுக்கு 25000 வருமானம் மட்டுமே வருகிறது.  இப்போது பற்றாக்குறை 25000 ரூபாய்  என உங்களுக்கு தெரிய வரும். இது தான் உங்களது எதார்த்த தேவை. இப்போது உங்களது தேவை என்ன என்பதில் ஒரு தெளிவு உங்களுக்கு கிடைத்துவிட்டது.

உதாரணமாக, ஒரு மாதத்துக்கு 25000 ரூபாய் அதிகபடியாக தேவைப் படுகின்றது என்றால், உங்கள் வரவையும் சேர்த்து அதை  உங்கள் ஆழ்மனதிடம், ஒவ்வொரு மாதமும்  எனக்கு ரூபாய் 50000 தேவைப் படுகிறது. அந்த பணத்தை நீ எனக்கு ஒவ்வொரு மாதமும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். அதற்காய்   நன்றி மனமே … என அடிக்கடி சொல்லுங்கள்.

இப்போது ஒரு சந்தேகம் உங்களுள் தலை தூக்கும். எனது? மனதிடம் நன்றி சொன்னால் பணம் கிடைக்குமா? இது சாத்தியமா? என்றல்லாம் உங்களுக்கு தோன்றக்கூடும். ஆம்,  மனம் அந்த பணத்தை உங்களுக்கு வருமானமாக கிடைக்கக் கூடிய  சூழ்நிலைகளை உருவாக்கும். கவனமாக இருந்து வாய்ப்பை சிக்கென பிடித்துக் கொள்ளுங்கள்.

அனேகமான நபர்கள் இந்த இடத்தில் தான் கோட்டை விடுவார்கள். காரணம் வாய்ப்புகள் அனேகமாக நேர்வாசல் வழியாக வருவதில்லை. பெரும்பாலும் புற வாசல் வழியாக தான் வாய்ப்புகள் கதவை தடுக்கின்றன.

ADVERTISEMENT

புரியும்படியாக சொல்கிறேன். உங்களுக்கு வரும் வருமான வாய்ப்பு நேர் வாசலான, அரசு வழியாகவோ அல்லது பெரிய நிறுவனங்கள் வழியாகவோ வரவேண்டும் என்று இல்லை. மாறாக புற  வாசலான, உங்களது பக்கத்து வீட்டு, படிப்பறிவு இல்லாத ஏழை நபர் வழியாக கூட வரலாம். எனவே விழிப்புணர்வோடு இருங்கள். உடனடியாக களத்தில் இறங்குங்கள். வெற்றி  என்ற இமயத்தை எட்டி பிடியுங்கள். இன்னும் அதிக படியான  தகவல்களை அடுத்து வரும் பதிவுகளில் காண்போம். நன்றி.

எமது அடுத்த பதிவை படிக்க: மனதும் அதன் ஒப்பற்ற சக்தியும்

 

Leave a Reply