நீங்களும் ஆல்ஃபா  தியானம் பழகலாம்

நீங்களும் ஆல்ஃபா  தியானம் பழகலாம். நமது ஆழ்மனதை நாம் ஆழ வேண்டும் எனில் அதை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சாதாரணமாக அதை கட்டுப்படுத்த நாம் நினைத்தால் நம்மால் முடியாமல் போகலாம். ஆழ்மனதை தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புபவர்கள் ஆல்ஃபா தியானத்தை நிச்சயமாக பழகியாக வேண்டும். அதை தான் இந்த பதிவில் நாம் தெளிவாக காண இருக்கிறோம்.

அது என்ன ஆல்ஃபா தியானம்?

அது என்ன ஆல்ஃபா தியானம்?  எல்லா அற்புதங்களையும் ஆழ்மனம் செய்யவேண்டும் எனில் நாம் வெளி மன செயல்பாடுகளிருந்து முற்றிலும் விலகி  ஆல்ஃபா என்கிற ஆழமான பேரமைதி நிலைக்கு கடந்து சென்றாக வேண்டும். நாம் தெரிந்தோ, தெரியாமலோ தினமும் ஆல்ஃபா நிலையை கடந்துதான் செல்கிறோம்.

குறிப்பாக கடுமையான கோபத்தில் இருக்கும்போதும், அல்லது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்போதும், ரசித்து சமையல் செய்யும் போதும் இதுபோன்று தன்னிலை மறந்து ஒன்றில் கவனமாக நிற்கும்போது   நமது மனம் எங்குமே அலைபாயாது.

கோபம் அல்லது மகிழ்ச்சி நம்மில் தாண்டவம் ஆடும்போது நமது மேல் மற்றும் நடு மனங்கள் அடங்கிவிடுகின்றன. கோபம் எனில் தொடர்புடைய நபர் மட்டும் தான் நமது நினைவில் நிற்பார். மகிழ்ச்சி எனில் அதற்கான கரணம் மட்டும் தான் நினைவில் நிற்கும்.

ADVERTISEMENT

சமையல் அறையில் பதார்த்தங்களை தயார் செய்யும்போதும் வெளி சிந்தனைகள் அடங்கி, இந்த உணவை நன்றாக தயாரிக்க வேண்டும் என்ற எண்ணங்கள்தான் மேலோங்கி நிற்கும். இது மட்டும் அல்ல ரசித்து உண்ணும்போது, உறக்கத்துக்கு விழிப்புக்கும் இடைப்பட்ட நேரங்களில், குளிக்கும்போது, பிராத்தனை செய்யும்போது, காதலிக்கும்போது என ஒன்றை குறித்து மட்டும் எப்போதெல்லாம் ஆழமாக சிந்திக்கின்றோமோ  அப்போதெல்லாம் நம்மை அறியாமலே ஆல்ஃபா  நிலைக்கு சென்றுவிடுகின்றோம்.

இப்படிப்பட்ட நேரங்களில் அறிந்தோ, அறியாமலோ நேர்மறையான எண்ணங்களை, தொழில் வளர்ச்சி, நல்ல கார், வீடு, பணம்  குறித்து சிந்திப்போர் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைகின்றனர்.  ஏன் எனக்குமட்டும் இப்படி நடக்கிறது? நான் என்ன பாவம் செய்தேன்? இது போன்ற வறுமையான, கீழ்த்தரமான, எண்ணங்களை எண்ணுவோர் வாழ்வில் முன்னேற முடியாமல் திணறுகின்றனர்.

காரணம், நமது ஆழ்மனது  எண்ணம் எதுவானாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நமக்கு நடத்தி தருகிறது. உதாரணமாக, ஒரு நபர் உங்களையோ அல்லது உங்களின் அன்புக்கு உரிய நபரையோ  தாக்கிவிட்டார் என கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அப்போது அந்த நபர்மேல் நமக்கு  கடுமையான கோபம் தோன்றும். அந்த நபரை மட்டும் மனதில் நினைத்து அவரை அடித்து, உதைத்து காயப்படுத்துவது போன்ற கற்பனை காட்சிகள் நமது மனதில் தோன்றும். ஒரு தருணத்தில் அது உண்மையாக நடந்துபோலவே தோன்றும். இப்போது நமது மனது வேறு எதையும் குறித்து சிந்திக்காது.

ஆழ் மனது திறந்திருக்கும் நேரமிது. எனவே இந்த உணர்வுகளை உள்வாங்கி தொடர்புடைய நபரை பழிவாங்கும்  சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்துவிடும். இப்படித்தான் இன்று பல வன்முறைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

ADVERTISEMENT

அதே நேரம் நீங்கள் ஒரு போட்டியில் கலந்து கொண்டீர்கள். அதில் வெற்றிபெற்று   ரூபாய் 500,000 (ஐந்து இலட்சம் ) பணப்பரிசு உங்களுக்கு கிடைத்தாக அறிவிக்கப்பட்டது . இப்போது உங்களது எண்ணங்கள் எப்படி சிறகடிக்கும் தெரியுமா?  ஐந்து இலட்சம் அல்ல 50 கோடி பணம் கிடைத்தால் நாம் என்ன செய்வோமோ அந்த அளவுக்கு நமது எண்ணங்கள் ஆனந்த ராகம் பாடும். இதுவும் நமது வாழ்க்கையில் நடந்தது போன்றே தோன்றும்.

தெரிந்தோ, தெரியாமலோ இப்படி நாம் சிந்திக்கும்போது  நமது ஆழ்மனது திறந்திருப்பதால் இந்த உணர்வுகளையும் உள்வாங்கி வசந்தங்களை வாரி வழங்கும். இதனால்தான் வளமையை சிந்திப்பவர்கள் பணம் படைத்தவர்கள் ஆகவும், ஏழ்மையை குறித்து சிந்திப்பவர்கள் வறுமையிலும் வாடுகின்றார்கள்.

இயற்கையாக இவ்வாறு நடைபெற்றாலும் சில பயிற்சி முறையால் நாம் இந்த ஆல்ஃபா நிலையை உருவாக்கி நமது ஆழ்மனதை தொடர்புகொண்டு கட்டளைகளை கொடுத்து நாம் விரும்பியபடி மகிழ்ச்சியாக வாழ முடியும்.

ஆல்ஃபா தியானத்தின்  பலன்

ஆல்ஃபா தியானம் பயிற்சி செய்பவருக்கு வாழ்க்கையில் முடியாதது எதுவுமே இல்லை என்று சொல்லலாம். சக்திகளிலே மிகப்பெரிய சக்தி நம் ஆழ்மனதின் சக்தி. இந்த சக்தியை தட்டி எழுப்பிவிட்டால் எலாம் சாதிக்கலாம். இந்த சக்தியை எழுப்ப  தேவைப் படும் திறவுகோல் தான் ஆல்ஃபா தியானம். இந்த ஆல்ஃபா தியானம் பழகுவதால் ஏற்படும் பலன்களில் சில ,

ADVERTISEMENT

* மன அழுத்தம் குறைகிறது.

* தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

* தன்னை யார் என்று அறிய முடிகிறது.

* உள்ளுணர்வு கூடுகிறது.

* தைரியம் கூடுகிறது.

ADVERTISEMENT

* சிந்தனை தெளிவு கிடைக்கிறது.

* பண வரவு அதிகரிக்கிறது.

* நோயற்ற வாழ்கை அமைகிறது.

* உறவுகள் வலுப்படுகிறது.

* வெற்றி மேல் வெற்றி வந்து குவிகிறது.

ADVERTISEMENT

* நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது. இன்னும் பல…

ஆல்ஃபா தியானம் செய்யும் முறை

ஆல்ஃபா தியானம் தொடங்குவதற்கு முதலில் நிரந்தரமான ஒரு தொந்தரவு இல்லாத இடத்தை தேர்வு செய்யுங்கள். அது இயற்கையான இடமாகவோ அல்லது உங்களது வீட்டின் அறையாகவோ இருக்கலாம். இதற்கு 4 நிலைகளை நாம் கடந்து செல்லவேண்டும்.

எமது முந்தய பதிவை வாசிக்க: மனதும் அதன் ஒப்பற்ற சக்தியும்

நிலை-1  உடலை தளர்த்துதல்

தரையில் விரிப்பின் மேலோ அல்லது நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். தற்போது தரையில் விரிப்பின் மேல்  முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள். சின் முத்திரையை பயன்படுத்துகள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். முதலில் உங்கள் சுவாசத்தின் மீது கவனத்தை வையுங்கள். அந்த மூச்சு காற்று இயல்பாக உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும் கவனியுங்கள். இவ்வாறு குறைந்தது 5 நிமிடங்கள் கவனியுங்கள்.

ADVERTISEMENT

மூச்சு காற்று உள்ளே வருகையில் பிரபஞ்சத்தின் பேராற்றல் உங்கள் உடலில் நிறைவது போல கற்பனை செய்யுங்கள். மூச்சு காற்று வெளியே செல்கையில் உங்கள் உடலில் உள்ள நோய்கள் அல்லது கெட்ட எண்ணங்கள் அனைத்தும் வெளியேறுவது போன்று கற்பனை செய்யுங்கள்.  மூச்சை கவனித்த அந்த நேரம் முதல் உங்களது வெளி சிந்தனைகள் ஒருவிதம் அடங்கியிருக்கும்.

தொடர்ந்து உங்களது உடலை தளர வைக்கப் போகிறோம். உங்கள் உச்சம் தலையில் கவனத்தை கொடுங்கள். உங்களது உச்சம் தலை தளர்ந்து போகின்றது. தொடர்ந்து உங்களது நெற்றி அதன் இறுக்கம் நீக்கி  தளர்வை சந்திக்கிறது. இப்போது உங்களது கண் புருவங்கள் இரண்டும் தளர்கிறது.

பின் தலை தளர்க்கிறது. காதுகள் இரண்டும் தளர்கிறது. கண்கள் இரண்டும் தளர்ந்து விட்டன. தொடர்ந்து மூக்கு தளர்ந்து விட்டது. கன்னங்கள் இரண்டும் தளர்ந்துவிட்டன. பற்கள், தாடை, நாக்கு ஆகிய உறுப்புக்கள் தளர்ந்துவிட்டன. (இப்போது 3 முறை மூச்சை ஆழமாக உள் இழுத்து நிதானமாக வெளியே விடவும்)

தொடர்ந்து முன் மற்றும் பின் கழுத்துகள் தளர்ந்துவிட்டன. தோள் பட்டைகள் தளர்ந்து விட்டன. அப்டியே இரண்டு கைகளும் விரல் நுனிகள்வரை தளர்ந்துவிட்டன. நெஞ்சு பகுதியும் தொடர்ந்து முதுகு, வயிறு பகுதிகள் தளர்வை சந்தித்துவிட்டன. (இப்போது இடுப்புக்கு மேல் இறுக்கம் நீக்கி  உடல் எடை குறைத்து மெல்லியதாய் இருப்பது  போன்று உணருங்கள்.)  அடுத்தாக  இடுப்பு பகுதி தளர்கிறது. இரண்டு கால்களும் தளர்கிறது.

கால்மூட்டு, கால்பாதம், விரல்கள் வரை தளர்ந்துவிட்டன. ( 3 முறை மூச்சை ஆழமாக உள் இழுத்து நிதானமாக வெளியே விடவும்) இப்போது உடல் முழுவதும் தளர்ந்து காற்றில் பறக்கும் இலவம் பஞ்சைப்போல் இருப்பதாக உணருங்கள். தொடர்ந்து மனதை அமைதிபடுத்தும் 2வது நிலைக்கு போகின்றோம்.

ADVERTISEMENT

நிலை-2 மனதை அமைதி படுத்துதல்

முதல் கட்டமாக உடல் முழுவதையும் தளர்த்தியதன் வழியாக   ஆல்ஃபா தியானத்தின்   50%த்தை எட்டிவிட்டோம். அடுத்ததாக நமது மனதை மெல்ல, மெல்ல  அமைதி படுத்த வேண்டும். தற்போது உடலை கடந்து நிற்கும் மனம் அமைதியற்று அங்கும் இங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் தான் எதிர்மறையான பழைய நினைவுகள் மடைதிறந்த வெள்ளம்போல் வெளியில் வரும். அதற்காக கவலைப்படவேண்டாம்.

அவ்வாறு எண்ணங்கள் வெளியில் வந்தால்தான் உங்களது சிந்தனை தெளியும். நல்ல பதிவுகளை ஆழ்மனதில்  பதிக்கமுடியும். ஆரம்ப காலகட்டங்கள் இப்படித்தான் இருக்கும். மனதை அமைதி படுத்த அமைதி, அமைதி என உங்களுக்குள் திரும்ப, திரும்ப  சொல்லிக் கொள்ளுங்கள். அதே நேரம் உங்கள் மனம் கொஞ்சம், கொஞ்சமாக  பேரமைதியை நோக்கி செல்வதை உணரத் தொடங்குங்கள்.

மெல்ல, மெல்ல உள்ளுக்குள் மனம் ஆழ்ந்து போவதை உணருங்கள். அந்த அனுபவம் மிகவும் இனிமையானது. அதை உணருங்கள். உங்களால் ஆழ்ந்து செல்வதில் சிரமம் இருப்பதாக உணர்ந்தால் ஏதாவது மிக அமைதி நிரம்பிய தேவாலயங்கள், அல்லது தியான மண்டபங்களில் சென்றிருந்தால் அந்த அனுபவத்தை நினைத்து பாருங்கள்.

அல்லது நீங்கள் சந்தித்த எதாவது அமைதியான அனுபவத்தை கற்பனை செய்து பாருங்கள். வாழ்வில் மகிழ்ச்சி அடைந்த அனுபவங்கள் உண்டெனில் அதை நினைத்து ஆனந்தம் அடையுங்கள். மிகவும் ஆழமாக செல்லுங்கள். ஆழ்ந்த அமைதியை, பேரின்பத்தை அனுபவியுங்கள். இப்போது 3 வது நிலைக்கு செல்கிறோம்.

ADVERTISEMENT

நிலை-3  மனதுக்கு பிடித்த இடம்

இப்பொழுது மனதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு இடத்தை நினைவில் நிறுத்துங்கள். அது வழிபாட்டுத் தலமாகவும் இருக்கலாம். அல்லது இயற்கை சார்ந்த இடமாகவும் இருக்கலாம். குறிப்பாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம், உங்களுக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் தருகின்ற இடமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது  நீங்கள் தேர்ந்து கொண்ட  இடத்திற்கு மனதால் சென்று விடுங்கள். உதாரணமாக, ஒரு மிகப்பெரிய பூங்காவனத்துக்குள் நுழைவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அங்கே நன்றாக சுற்றிப் பாருங்கள். அங்கு கேட்கும் பறவைகளின் இனிமையான குரல் ஒலிகள், வாசனைகள், நிறங்கள்  போன்றவற்றை உணருங்கள். அங்கே உங்களுக்கு பிடித்த உணவுகள் கிடைப்பதை உணருங்கள்.

இயற்கையாக மரங்களிலும், கொடிகளிலும் காய்த்து குலுங்கும் காய் மற்றும் கனிகளை மனதால் காணுங்கள். அவற்றை பறித்து உண்டு அந்த சுவையை உணர்ந்து அனுபவியுங்கள். பிடித்தமான இடங்களை தொட்டு பாருங்கள். தென்றல் உங்கள் உடலை தீண்டிச் செல்வதை அற்புதமாக உணருங்கள். உங்களுக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் அனுபவிங்கள்.

இப்போது உங்கள் மனம் அமைதியாகவும், நிம்மதியாகவும், பேரானந்தத்துடன் இருப்பதை உணர்கின்றீர்கள். இப்போது உடலை மறந்து மனதால் மகிழ்ச்சியினை அனுபவிக்கின்றீர்கள். இது தான் ஆல்ஃபா நிலை.  அடுத்ததாக ஆல்ஃபா தியானத்தின்  இறுதி நிலைக்கு செல்வோம்.

ADVERTISEMENT

நிலை-4 ஆழமான ஆல்ஃபா நிலை

இப்போது  ஆல்ஃபா நிலையில் இருக்கின்றீர்கள். நமது மனம்,  நமது கட்டளையினை ஏற்று  அதை  நமக்கு நடத்தி தரவேண்டும் எனில் இன்னும் ஆழமாக செல்லவேண்டும். அதாவது பிரபஞ்ச சக்தியுடன் இரண்டற கலக்கவேண்டும். அந்த நிலைக்கு செல்ல உங்கள் மனதிற்குள் 10, 9, 8 என 0 வரை இறங்கு வரிசையில் நிதானமாக எண்ணவும். ஒவ்வொரு எண்ணையும் சொல்லும்போது இன்னும் மனதால் ஆழமாக செல்லவும்.

0 வருகின்ற போது நீங்கள் முழுவதுமாக பிரபஞ்சத்தோடு இணைந்துவிட்டீர்கள். இந்த சூழ்நிலையில் வெளியில் என்ன நடந்தாலும் தெரியாது. அவ்வளவு உள்ளார்ந்த உலகத்தில் நாம் சஞ்சரித்துக் கொண்டிருப்போம். இதுதான்   தங்கமான நேரம். இங்கே உங்கள் இஷ்ட தெய்வத்தை நேரில் கண்டு உரையாட, உறவாட முடியும். நீங்கள் மனதால் எதை படமாக பார்த்தாலும், அல்லது உணர்வால் எண்ணினாலும் அது நிச்சயம்  நடந்தே தீரும்.

அது உங்கள் உடல் நலனாய் இருக்கலாம், தொழில் வெற்றியாய் இருக்கலாம், காதல் கைகூடுவதாய் இருக்கலாம் அல்லது கோடிகளில் புரள்வதாய் இருக்கலாம். எதுவானாலும் நடந்தே தீரும். அதனால் நல்லதை மட்டுமே நினையுங்கள். தப்பி தவறி கூட நல்லது அல்லாதவற்றை நினைவுக்கு கொண்டு வராதீர்கள். காரணம் இந்த நேரத்தில் நாம் எதையெல்லாம் நினைக்கிறோமோ அதுவெல்லாம் நடக்கும்.

நமது ஆழ்மனதிற்கு நல்லது கெட்டது தெரியாது . நாம் கொடுக்கும் கட்டளை எதுவானாலும் அதை வள்ளி புள்ளி மாறாமல்  நிறைவேற்றி தரும் ஒரு நல்ல வேலைக்காரன் தான் நமது ஆழ்மனம். இது மிகவும் அற்புதமான நேரம்.

ADVERTISEMENT

எனவே, வாழ்வில் நீங்கள் அனுபவிக்க விரும்புகின்ற நல்ல விஷயங்களை ஒரு திரைப்படத்தை போன்று   நம்பிக்கையுடன் பாருங்கள். இப்போது உங்கள் இரண்டு கைகளையும் ஒன்றோடு ஓன்று சேர்த்து உரசுங்கள். உள்ளம் கையில் உருவான சூடை இரண்டு கைகளால் இரண்டு கண்களிலும் வையுங்கள். மெதுவாக கண்களை திறந்துவிடுங்கள்.

இப்போது  சாதாரணமாக உங்கள் அன்றாட பணிகளை தொடரலாம். எல்லா நேரத்திலும்  ஆல்ஃபா தியானம் செய்யலாம். இருந்தாலும் தினமும்  பிரம்ம முகூர்த்த நேரமாகிய  அதிகாலை 4 முதல்  6 மணிக்குள்   செய்தால் சிறப்பு. தொடர்ந்து 90 நாட்கள் இந்த பயிற்சியை ஒரே விஷயத்தை மனதில் நினைத்து தியானிப்பீர்கள் என்றால் 90 நாள் நிறைவடைவதற்குள் உங்களது வெற்றி துளிர் விடும். அதை பாதுகாத்து தொடர் தியானத்தால் உரமிட்டு வளர்த்தெடுத்து  வாழ்கையை வசந்தமாக்குங்கள். இன்னும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

எமது அடுத்த பதிவை படிக்க: வார்த்தையின் சக்தி வாழ்க்கையை மாற்றிவிடும்

Leave a Reply