இந்த பதிவில், 2022 ம் ஆண்டில் இந்தியாவில் செயல்படும் தலைசிறந்த Network Marketing நிறுவனங்களின், தர வரிசை அடிப்படையில், முதல் 10 இடங்களை பிடித்துள்ள நிறுவனங்களை குறித்து தான் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவில் பல Network Marketing நிறுவனங்கள் இருந்த போதும், முதல் 10 இடங்களை மிகவும் பிரபலமான நிறுவனங்கள் பிடித்துள்ளன.
இந்த நிறுவனங்கள், இந்திய சந்தையில் மிகவும் சிறப்பாகவும் , புகழ் வாய்ந்தகவும், இருக்கின்றன. MLM என்று சொல்லக்கூடிய Network Marketing நிறுவனங்களின் ஒரு சிறப்பு என்னவென்றால் எந்த வித கல்வித் தகுதியும் எதிர் பார்க்காமல், பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ, எல்லோரும் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றது. இது தொடர்பான தகவல்களை கீழே காண்போம்.
இந்தியாவில் 2022 இல் சிறந்த 10 சிறந்த Network Marketing நிறுவனங்களின் பட்டியல் இதோ
1.Mi Lifestyle Marketing global Private Limited
2.Keva Kaipo Industries Pvt.Ltd
3.Amway
4.Vestige
5.Modicare
6. RCM
7.WinNature International Pvt. Ltd.
8.Herbalife
9.Asclepius Wellness Private Limited
10.Atomy India
Network Marketing என்பது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு அற்புதமான தொழில்துறை ஆகும். இன்று இந்தியாவை பொறுத்தவரை, வேலைவாய்ப்பு என்பது ஒரு மாபெரும் பெரும் சவாலாகவே உள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் கூட, மாபெரும் தொழில் வாய்ப்பையும் , பொருளாதார மாற்றங்களையும், உருவாக்கும் துறையாக உருவெடுத்து வருகின்றது நேரடி வர்த்தகத்துறை.
இப்போது Network Marketing துறைக்கென்று தெளிவான வழிகாட்டு ஒழுங்கு முறைகள் இந்திய அரசால் கொண்டுவரப் பட்டுள்ளன.( Network Marketing Guideline – 2016 ) . Network Marketing துறையில் தற்போது 7,400 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது 2025 ம் ஆண்டில் 64,500 கோடி அளவிற்கு வணிகம் நடைபெறும் என, தொழில் துறையை சார்ந்த KPMG, FICCI போன்ற வல்லுநர்கள் குழு கருதுகின்றது. இவ்வாறு வணிகம் நடக்கும் பட்சத்தில் இந்தியாவில் ஆயிரக் கணக்கான மக்கள், கோடீஸ்வரர்கள் ஆவது உறுதி.
இந்தியாவில் 2022 இல் சிறந்த 10 சிறந்த Network Marketing நிறுவனங்களின் சுருக்கமான விவரங்கள் இதோ…
1.Mi Lifestyle Marketing global Private Limited
Mi Lifestyle Marketing global Private Limited https://www.milifestylemarketing.com/ என்பது 2013 ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட ஒரு சிறந்த நேரடி வர்த்தக நிறுவனம் ஆகும். தற்போது 2022 லும் இந்த நிறுவனமே முதிலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் சிறப்பு என்னவென்றால், AYUSH அமைச்சகத்தால் அங்கீகரிக்க பட்ட தயாரிப்புகளை நேரடியாக அதன் வடிகளாருக்கு வழங்குவது தான். இந்த நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது.
இன்று சாதாரண வணிகத் துறையில் புழங்குகின்ற FMCG பொருள்களுக்கு போட்டியாக தரமிக்க பல பொருள்களையும், குறைந்த விலையில் வழங்குவது இதன் இனொரு சிறப்பு. இது இந்த நிறுவனத்தை நம்பி நிற்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் கனவையும் நிறைவேற்றும் என்ற தன்னம்பிக்கையை தருகின்றது. இந்த நிர்வாகத்துக்கு நேரடி வர்த்தக துறையில் 19 வருட அனுபவம் உளது. இந்த நிறுவனம் FICCI மற்றும் FDSA ன் உறுப்பினராக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 1500 கோடியாக உள்ளது . இந்த நிறுவனம் தொடர்பான அதிகபடியான தகவல்களை பெற https://www.milifestylemarketing.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
2.Keva Kaipo Industries Pvt.Ltd
Keva Industries என்கின்ற நேரடி வர்த்தக நிறுவனம் 2009 ம் ஆண்டில் துவங்கப் பட்டது. இந்த நிறுவனத்தில், ஆரோக்கியம், உணவு, தனிப்பட்ட பராமரிப்பு, வண்ண அழகு சாதன பொருட்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள், FMCG, விலங்குகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பொருள்கள் என உலகத்தரம் வாய்ந்த பொருள்களை வழங்குகின்ற ஒரு சிறந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 400 க்கும் மேற்பட்ட பொருள்களை கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் 1 பொருள் எடுத்தால் 1 பொருள் இலவசம் என்பதாகும்.சாதாரண வணிகத் துறையில் கிடைக்கின்ற FMCG பொருள்களுக்கு போட்டியாக தரமிக்க பல பொருள்களையும், குறைந்த விலையில் வழங்குகின்றார்கள். இந் நிறுவனம் பலனளிக்கும் பல திட்டங்களை கொண்டுள்ளது. https://www.kevaind.org/distributor_login.aspx என்ற இணைய தளத்தில் நிறுவனத்தின் சுய விபரம், தயாரிப்புகள், சான்றிதழ்கள், விருதுகள், சட்ட ஆவணங்கள், காப்புரிமை போன்ற விபரங்களை சரி பார்க்கலாம்.
3.Amway
ஆம்வே என்பது ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். இது பல்வேறு விதமான பொருட்களை வழங்குகின்றது. குறிப்பாக உடல்நலம் தொடர்பான பொருட்கள், அழகு சாதன பொருட்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள் போன்ற தரம் மிக்க பொருட்களை வழங்குகின்றது. இந்த நிறுவனம் 200 ற்கு மேற்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது. FMCG பொருட்களையும்போட்டி விலையில் வழங்குகின்றது. இந் நிறுவனம் 2015 கணக்கு படி 9.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானமாக பெற்றுள்ளது. ஆம்வே IDSA ல் உறுப்பினராக உள்ளது.மேலும் தகவல்களை அறிய https://www.amway.in
4.Vestige
vestige marketing Pvt.Ltd.நிறுவனம் 2004 ம் ஆண்டு தனது சேவையை தொடங்கியது. உலகத் தரம் வாய்ந்த உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை கையாளும் ஓர் முன்னணி நேரடி விற்பனை நிறுவனம் ஆகும். vestige ஒவ்வொரு முறையும் ஒரு தனி விகிதத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இந்த நிறுவனம் 200 ற்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்கியுள்ளது.
தனது வாடிக்கையாளருக்கு தனது தயாரிப்புகளை இலவசமாகவும் வழங்குகின்றது. vestige FMCG வகை தயாரிப்புகளில் பெரும்பலவானவற்றை பாரம்பரிய விலையிலும், போட்டி விலையிலும் வழங்குகின்றது. வளர்ச்சி விகிதம், தயாரிப்புகளின் தரம், சிறப்பாக உள்ளது. vestige IDSA ன் உறுப்பினர். மேலும் தகவலுக்கு https://www.myvestige.com/ இணையதளத்தை பார்க்கவும்.
5.Modicare
மோடி குழுமம் தொடங்கப் பட்டதில் இருந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது.Modicare அறக்கட்டளை 1996 ல் தொடங்கப்பட்டது. மக்களின் சிறந்த பாதுகாப்பான எதிர்காலத்துக்காக மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் அநேக பொருட்களை தனது தயாரிப்புகளாக கொடுத்துள்ளது. நிறுவனத்தை குறித்த அதிகப்படியான தகவல்களை காண https://www.modicare.com/
6.RCM
RCM லிமிடெட் என்ற நிறுவனம் பொதுவாக RCM என அழைக்கப்படுகின்றது . இது இந்தியாவில் செயல்படும் மிக பெரிய நேரடி வர்த்தக நிறுவனங்களிகளில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இணைந்து நேரடி வர்த்தகத்தில் ஈடுபற்று வருகின்றனர். நிறுவனத்தின் மிக முக்கிய நோக்கம் மக்களுக்கு நிதி சுதந்திரம் மற்றும் நேர சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்பதாகும். இதனால் மக்கள் மகிழ்ச்சியாகவும் மன நிறைவோடும் வாழ முடிகின்றது. உலகெங்கும் உள்ள தலைசிறந்த உற்பத்தியாளரிடம் இருந்து தரமான பொருட்களை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள். உடல் நலம் மற்றும் பொதுவான பொருட்கள் என அநேக பொருட்களை நிறுவனம் வழங்கி வருகின்றது. அது போல வெற்றிகரமாக நிருபிக்கப் பட்ட பிளான்களை கொண்டுள்ளது. நிறுவனத்தில் 150 ற்கும் மேற்பட்ட தயாரிப்புகள் உள்ளன. மனித குலத்துக்கு தேவையான சுகாதாரம், தினசரி வாழ்கை முறை, வீடு மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள், விவசாயத்துக்கு தேவையானது என பல பொருட்களை வழங்குகின்றது. மேலும் தகவலுக்கு https://www.rcmbusiness.com/
7.WinNature International Pvt. Ltd.
Win Nature International Pvt Ltd நிறுவனமானது இந்தியாவின் மையமான நாக்பூரில் ( மகாராஷ்டிரா ) தொடங்கப்பட்ட ஒரு நேரடி வர்த்தக நிறுவனம் ஆகும். இது ஆயுர்வேத தயாரிப்புகளை வழங்குகின்ற வளர்ந்துவரும் ஒரு நிறுவனம் ஆகும்.ஆயுர்வேதம் என்பது நமது இந்தியாவின் பண்டைய மருத்துவ முறை ஆகும்.
இந்த நிறுவனம் ஆயுர்வேத தயாரிப்புகளை சந்தைப் படுத்தி, மக்களுடைய உடல்நலனில் அக்கறை செலுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள https://www.winnature.net/about.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
8.Herbalife
Herbalife என்பது உலகளவில் ஊட்டச்சத்து நிறைந்த தயாரிப்புகளை வழங்குகின்ற ஒரு நேரடி வர்த்தக நிறுவனம் ஆகும். இது 1980 ம் ஆண்டு முதல் தனது பணிகளை தொடங்கியது.தனது FMCG தயாரிப்புகளை போட்டி விலையில் வழங்கி வருகின்றது. Herbalife Family Foundation (HFF) என்ற அமைப்பு Casa Herbalife program என்ற திட்டத்தில் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டசத்தை வழங்குகின்றது. இந்த நிறுவனம் 100 ற்கும் மேற்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது. Herbalife IDSA ன் உறுப்பினர். இந்த நிறுவனம் தொடர்பான அதிக படியான தகவல்களை தெரிந்து கொள்ள https://www.herbalife.co.in/ இணையதளத்தை பார்வை இடலாம்.
9.Asclepius Wellness Private Limited
Asclepius Wellness Private Limited என்பது ஒரு இந்திய நேரடி விற்பனை நிறுவனம் ஆகும். இது 1956 கம்பெனி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும்.இது புது தில்லியை மையமாக வைத்து செயல்படுகின்றது. இது வாடிக்கையாளருக்கு சில்லறை விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சில்லறை விற்பனையை தங்களது விற்பனை நிலையங்கள் வழியாக நடத்துகின்றனர். தனது சொந்த தயாரிப்புகளை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் விற்பனை செய்ய, வணிக விளம்பரங்களை மேற்கொள்ள சொந்த வர்த்தக முத்திரையை கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் பல சொந்த தயாரிப்புகளை கொண்டுள்ளது. நங்கள் தரமிக்க பொருட்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல தொழில் முனைவோரையும் உருவாக்கி கொண்டுளோம். நிறுவனத்தின் தயாரிப்புகள் விஞ்ஞான அடிப்படையில் பச்சை பொருட்களை கொண்டு தயாரிக்க படுகின்றன. Asclepius Wellness உங்களுக்கு கல்வி மற்றும் அறிவை வழங்குகின்றது.
தயாரிப்புகளை மார்க்கெட்டிங் மூலம் அதிகரிக்க பல திட்டங்களை அறிமுகப் படுத்தி உள்ளோம். இந்த நிறுவனத்தில் விநியோகஸ்தர் ஆவதற்கு எவ்வித வைப்பு தொகையோ, புதுப்பித்தல் கட்டணங்களோ அல்லது எந்தவித மறைமுக கட்டணங்களோ கிடையாது. மேலும் தகவல்களுக்கு https://asclepiuswellness.com/ என்ற இணயதளத்தை பாருங்கள்.
10.Atomy India
Atomy Enterprises India Pvt Ltd என்ற நேரடி வர்த்தக நிறுவனம் 2009 ல் நிறுவப்பட்டது. இது ஒரு தென் கொரிய நிறுவனம் ஆகும். 2021 டிசம்பர் வரை 23 நாடுகளில் சேவையை வழங்குகின்றது. 2010 இல் அமெரிக்காவில் தொடக்கி, ஜப்பான், கனடா, தைவான், சிங்கப்பூர், கம்போடியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, கொலம்பியா,ஹாங்காங், இந்தியா, நியூஸ்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மெக்சிகோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிறப்பாக தனது சேவைகளை வழங்கி வருகின்றது.
உலக மக்களுக்கு பயன்படக் கூடிய அற்புதமான பொருள்களை சந்தை படுத்தியதன் விளைவாக, சாதனைகளை புரியவேண்டும் என்ற ஒரே கட்டமைப்போடு உழைத்து ஒன்றல்ல, பல ஏற்றுமதி கோபுர விருதுகளையும் நிறுவனம் பெற்றுள்ளது. நிறுவனமானது சுகாதார உணவுகள், அழகு சாதன பொருட்கள், வீட்டு பொருட்கள் உட்பட 426 தயாரிப்புகளை இதுவரை வழங்கியுள்ளது. 2020 ம் ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 1.73 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. எங்களது உலகளாவிய உறுப்பினர்கள் 15 மில்லியனரை எட்டி உள்ளது.மேலும் விபரங்களை பார்க்கவும் https://global.atomy.com/
குறிப்பு :
மேற்கண்ட தகவல்கள் https://www.topdirectsellingbusiness.com/top-10-direct-selling-company-in-india/ என்ற இணைய தளத்தில் உள்ள ஆங்கில பதிவு தமிழாக்கம் செய்ப்பட்டுள்ளது .
எமது முதல் பதிவை வாசிக்க: ஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம்
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.