இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களேஉலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும், நொடிப் பொழுதில் எந்த உபகரணமும் இன்றி நமது ஆழ்மனதை வைத்து அவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஆம் நிச்சயம் தொடர்பு கொள்ள முடியும். அந்த முறைக்குப் பெயர் தான் டெலிபதி.
தொடர்பு கொள்ளும் முறை
மேற்கண்ட டெலிபதி முறையில் மூன்று வகைகள் உண்டு. நமக்கு நாமே நமது மனதில் இருந்து மூளையையும், பிரபஞ்ச பேராற்றலையும் தொடர்பு கொள்வது முதல் முறை ஆகும். இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் மனதினால் தொடர்பு கொள்வது இரண்டாவது முறை ஆகும். பலர் கூட்டாக ஓன்று சேர்ந்து ஒருவரை தொடர்பு கொள்வது இன்னொரு முறை ஆகும்.
நமக்கு நாமே தொடர்பு கொள்ளும் முறை
நமக்கு நாமே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறை என்பது, நமது மனதில் இருந்து நமது மூளைக்கு கட்டளை பிறப்பிப்பது ஆகும். அதாவது மனதுக்கும் மூளைக்கும் இடையே நடைபெறும் ஓர் உரையாடல் ஆகும். அதே நேரம் பிரபஞ்ச பேராற்றலுடன் நமது மனது தொடர்பு கொள்ளும் நிலையையும் குறிக்கும்.
பிரபஞ்சத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நமக்கு விருப்பமான செயல் பாடுகளை நடைபெற வைக்க இந்த முறை பயன்படுகின்றது. இந்த நிலையில், உணர்ச்சி வசப்பட்ட நமது மனதை அமைதிப் படுத்த முடியும். நமது மூளையுடன் பேசி நமது உடலை கட்டுப்படுத்த முடியும்.
பய உணர்வுகளை மாற்ற முடியும். நமது நோயை நாமே குணப்படுத்த முடியும். நமக்கு நாமே உற்சாகம் தர முடியும். அதாவது நம்முள் என்ன மாற்றத்தை நாம் கொண்டுவர நினைத்தாலும் அது சாத்தியமே.
ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளுதல்
நாம் ஒரு தனி நபராக இருந்து கொண்டு நமக்கு அறிமுகமான நபர்களுக்கு அல்லது அறிமுகம் இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு நிச்சயமாக நாம் விரும்பும் செய்தியை அவர்களுக்கு அனுப்ப முடியும். நாம் விரும்பும்படி அவர்களுடைய செயல்பாட்டை அமைக்க முடியும்.
நமது உணர்வலைகள் வழியாக அவர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் இதை நம்மால் நிகழ்த்த முடியும். இதற்கு தூரம் எதுவும் தடையாக அமைவதில்லை. வரலாற்றில் இதற்கான ஒரு உதாரணம் நடந்துள்ளது. ஒருமுறை ரஷ்யா மனிதனை விண்கலம் வழியாக விண்ணுக்கு அனுப்பி வைத்தது.
அந்த மனிதரை டெலிபதி முறை மூலம் இங்கிருந்து தொடர்பு கொண்டார்கள். அவரும் அந்த செய்தியை மனதளவில் பெற்றுக்கொண்டு அதற்கு தெளிவான முறை மூலம் பூமியில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு பதில் அளித்தார் என்பது வரலாறு.
எது நினைத்தாலும் அது நடக்கும்
நமது ஆழ்மன ஆற்றலை சரியான முறையில் படுத்தினால் நடக்காத சம்பவங்களை எல்லாம் நடக்க வைக்க முடியும். நாம் எதை எண்ணினாலும் அதை நிச்சயம் அடைய முடியும். மனதில் இருக்கும் கவலைகளையும், குழப்பங்களையும் அகற்றிவிட்டால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். அப்போதுதான் மனதில் நம்பிக்கை தீபம் ஒளிர துவங்கும்.
செய்தி அனுப்பும் முறை
மனதின் வழியாக டெலிபதி முறையில் அடுத்தவர்களுக்கு செய்தியை அனுப்புகின்றவர்கள் முதலில் அன்பு அலைகளை குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப வேண்டும். அது எவ்வாறெனில் நாம் செய்தியை அனுப்ப நினைக்கும் நபரை முதலில் நமது மனக்கண் முன் பார்க்க வேண்டும்.
அந்த நபர் நமது முன்னால் நிற்பதை போன்றே நாம் உணர வேண்டும். அவரது முகத்தைப் பார்த்து அவரது பெயரையும் சொல்லி நீங்கள் விரும்பக்கூடிய செய்தியை முதலில் அன்பாக அனுப்புங்கள். அந்த செய்தி நிச்சயம் அவரை சென்றடையும்.
அதற்கான பலனும் உடனடியாக கிடைக்கும். உதாரணமாக ஒரு நபரிடம் நீங்கள் ஒரு உதவியை எதிர் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபரை உங்கள் மனத்திரையில் பார்த்து அவரது பெயரை அழைத்து நீங்கள் எதிர்பார்க்க கூடிய உதவியை அவரிடத்தில் தெரிவிக்க வேண்டும்.
நன்றி கூறல்
உதாரணமாக உங்களுக்கு பணத்தேவை இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபரை மனத் திரையில் பார்த்து, நான் உங்களை இன்று சந்திக்க வருவேன். உங்களிடம் ஒரு சிறு பொருளாதார உதவியை நான் எதிர்பார்த்து வருவேன். நிச்சயம் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்.
உதவி செய்ததற்கு நன்றி! நன்றி! நன்றி! என கூறுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த எந்த உதவியாக இருந்தாலும் அதை உங்களுக்கு அவர் செய்வார். இந்தச் செய்தியை நீங்கள் அனுப்புகின்ற போது உங்கள் மனது மிகவும் அமைதியாக இருத்தல் அவசியம்.
உங்கள் மனம் உணர்ச்சிவசப் பட்டு இருக்கும் போது இந்த மாதிரி செய்திகளை அனுப்ப வேண்டாம். நீங்கள் சொல்லக் கூடிய செய்தி அந்த நபரின் மனதில் போய் பதிவையும் நீங்கள் உணர வேண்டும்.
எமது முந்தய பதிவை வாசிக்க: ஆழ்மனதின் அபார சக்திகள்
மனத்திரையில் பார்த்து பேசுதல்
அதாவது அந்தத் தகவல் அந்த நபரிடம் சென்று அவர்களுக்கு உதவி செய்வது போன்று மனத்திரையில் பார்க்க வேண்டும். உதவியை மட்டும் கேட்டுக் கொள்ளாமல் அவருக்கு அன்பு அலைகளையும் செலுத்துங்கள் நீங்கள் அவர்களை நேசிப்பதாகவும் உங்களுக்குள் புதிய உறவுகள் மலர் வதாகவும் அந்த நபரிடம் பேசுங்கள்.
இவ்வாறு செய்தியை நீங்கள் அனுப்பிவிட்டு சாதாரணமாக உங்கள் வேலையை நீங்கள் செய்து கொள்ளுங்கள். நீங்கள் செய்தி அனுப்பியதை இப்போது மறந்து விடுங்கள். பின்பு தன்னம்பிக்கையோடு புறப்பட்டுப் போங்கள். அந்த நபரின் இருப்பிடத்தை தேடி. நீங்கள் சென்று அடைந்தவுடன் அவர் உங்களை வரவேற்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். இதை அனுபவத்தில் உணர முயலுங்கள்.
பயிற்சி செய்து பாருங்கள்
இந்த முறை உங்களுக்கு எளிதில் கைகூட வேண்டு மென்றால் முதலில் நீங்கள் இதை ஒரு பயிற்சியாக செய்து கொள்ளலாம். உங்களுடன் கருத்தொற்றுமை உடைய ஒரு நண்பரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த பயிற்சி தொடர்பாக இருவரும் உரையாடி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
அதாவது பயிற்சியை எந்த நேரத்தில் எங்கே தொடங்கலாம் போன்ற செய்திகளைமுடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர் ஒரு அறையிலும் நீங்கள் இன்னொரு அறையிலும் அமர்ந்து கொள்ளுங்கள். இது ஒரு வீட்டில் உள்ள இரண்டு அறைகளாக இருக்கலாம் அல்லது வேறு இடங்களில் இருக்கும் இடங்களாக கூட இருக்கலாம்.
அருகில் இருக்கலாம் அல்லது தொலைவில் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இந்தப் பயிற்சியை தொடங்கும் நேரம் உங்கள் இருவருக்கும் தெரிய வேண்டும். இரண்டு பேரும் பயிற்சி ஆரம்பிக்கும் நேரம் தொடங்கியவுடன் அமைதியான சூழ்நிலையில் சென்றுவிடுங்கள்.
முதலில் யார் செய்தி அனுப்புவது என்பதை நீங்கள் ஏற்கனவே முடிவு செய்து இருப்பீர்கள். முதலில் செய்தியை அனுப்பு பவர், செய்தி பெறுபவரின் முகத்தை மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.
மேலே சொன்னது போல முதலில் அன்பு அலையே அனுப்புங்கள். அதாவது நமது நட்பு புனிதமானது. நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். நல்ல உறவோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது நமது வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றது. இதுபோன்று விதத்தில் உங்கள் அன்பு அலை அமைய வேண்டும்.
குறியீடு அனுப்பும் முறை
தொடர்ந்து செய்தியை அனுப்புவதற்கு முன் ஏதாவது ஒரு குறியீடை அவர்களுக்கு அனுப்பிப் பாருங்கள். அதாவது, உங்கள் மனக்கண் முன் ஒரு வட்டத்தையோ அல்லது ஒரு முக்கோணத்தையோ உருவாக்கி அந்த குறியீடை அவருக்கு அனுப்புங்கள். அந்தக் குறியீடு அவர் மனதில் போய் பதிவதாகவும் நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
என்ன அதிசயம் என்றால், எதிர்தரப்பில் அவருடைய ஆழ் மனதில் சென்று அப்படியே பதிந்துவிடும். நீங்கள் அனுப்பிய குறியீடை அவர் உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் மனம் மிகவும் பூரிப்படையும். நாம் அனுப்பும் குறியீடை அல்லது செய்தியை பெற்றுக் கொள்கின்றவரும் அமைதியான மனநிலையுடன் வரவேற்பதற்கு தயாராக இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது செய்து பழகுங்கள். வெற்றி அடைய, அடைய பயிற்சி செய்யும் நேரத்தை அதிகரிப்பது நல்லது. இந்த பயிற்சியில் முழுமையாக வெற்றி கிடைத்தவுடன் வேறு யாருடை மனதுக்கும் நாம் விரும்பும் செய்தியை அனுப்பி நினைத்த வெற்றியை பெற முடியும்.
டெலிபதியின் இன்னொரு முறை
இந்த டெலிபதி முறையை இன்னும் ஒரு முறையில் செய்யலாம். பொதுவாக நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது நமது வெளி மனமே செயல்படுகின்றது. ஆனால் நாம் உறக்க நிலையில் இருக்கும்போது வெளி மனமானது அடங்கி உள் மனமானது திறந்திருக்கிறது. இந்த உறக்க நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு நாம் ஒரு செய்தியை அனுப்பினோம் என்றால் அவர் மனதில் அது சென்று பதிந்துவிடும்.
பதிவது மட்டுமல்ல நாம் என்ன கட்டளையை கொடுத்தோமோ அந்தக் கட்டளைக்கு ஏற்றவாறு அந்த நபர் செயல்படுவார். இந்த முறையையும் நீங்கள் செயல்படுத்திப் பார்க்கலாம். ஆனால் இந்த டெலிபதியை மேற்கொள்பவருக்கு மிகுந்த மன வலிமை தேவை.
அந்த உறுதியான மனவலிமை இருந்தால் மட்டுமே இத்தகைய டெலிபதி முறையை நாம் செயல்படுத்த முடியும்.இந்த முறையிலும் நாம் யாருக்கு செய்தி அனுப்புகிறோமோ அந்த நபரின் முழு உருவத்தை நமது மனதால் நினைத்து அவர் முகத்தைப் பார்த்து பேசுவதைப் போன்று நேரடியாகவே பேச வேண்டும்.
முதலில் சொன்ன டெலிபதி முறைக்கும் இப்போது சொல்கின்ற டெலிபதி முறைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், முதல் முறையில் நாமாகவே நமது மனதை தயார்படுத்திக் கொண்டு அந்த சூழ்நிலைக்கு வந்து தெளிவரி முறையை கையாள்கிறோம்.
இரண்டாவது முறை என்னவென்றால் அது இயற்கையாகவே நடக்கின்ற அந்த உறக்கச் சூழலில் இந்த டெலிபதி முறையை மேற்கொள்கிறோம். நீங்கள் இதில் எந்த முறை சிறந்தது என கேட்பது எனக்கு புரிகின்றது.
தெளிவாக அனுப்புங்கள்
உங்களுக்கு எந்த முறை சரிப்பட்டு வருமோ அந்த முறையை கையாளுங்கள். ஒருவர் நல்ல தூக்கத்தில் இருக்கும்போது உறுதியான மனநிலையுடன் நாம் அனுப்ப வேண்டிய செய்தியை தெளிவாக அனுப்பினோம் என்றால் நிச்சயமாக அந்த நபர் மனதில் சென்று பதிந்து தாக்கத்தை உருவாக்கும். இந்த முறையைப் பயன்படுத்தி பல வெளிநாடுகளில் உளவியல் நிபுணர்கள் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளனர்.
கணவனின் மனதில் மற்றம் உருவாக்க
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை இந்த முறையில் சரி செய்ய முடியும். உதாரணமாக ஒரு கணவன் மனைவி யோடு தினமும் சண்டை போடக்கூடிய பழக்கமுள்ளவர் உள்ளவராக இருக்கலாம். அல்லது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுபவர் ஆக இருக்கலாம்.
அப்படிப் பட்ட நபரை மாற்ற வேண்டும் என நீங்கள் விரும்பினால் அவர் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் போது நீங்கள் விழித்திருக்க வேண்டும். அவரது உருவத்தை மனதில் நினைத்து அல்லது அவரை நேரடியாக முகத்தைப் பார்த்து பேச வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி என்னோடு சண்டை இடும் பழக்கத்தை தயவு செய்து நிறுத்தி விடுங்கள்.
மது அருந்தி வரும் பழக்கத்தையும் நீங்கள் கைவிடுங்கள். நீங்கள் மிகவும் நல்லவர். அடிக்கடி நீங்கள் கோபப்படுகிறீர்கள். அந்த கோபத்தை மட்டும் சற்று மாற்றிக் கொள்ளுங்கள். நமது குடும்ப வாழ்வு இன்ப வனமாக அமையும்.
எப்போதும் என்னிடம் அன்புடன் பேசுங்கள். நமது குழந்தைகளிடமும் பாசமாக இருங்கள். போன்ற வார்த்தைகளை கணவரை உங்கள் மனத்திரையில் பார்த்தோ, அல்லது உறங்கிக் கொண்டிருக்கும் அவரது முகத்தை நேரில் பார்த்தோ இந்த செய்தியை பத்து நிமிடத்தில் இருந்து 15 நிமிடம் வரை தினமும் உணர்ச்சிபொங்க பேசிய வாருங்கள்.
ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து இவ்வாறு பேசி வர நாளடைவில் அவர் குடி பழக்கத்தை மாற்றி உங்களோடும் பிள்ளைகளோடும் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்வதை நீங்கள் காண்பீர்கள்.
கோபக்கார மனைவியை மாற்ற
அதுபோல மனைவி சண்டை போடுபவராக இருந்தால் மனைவி நல்ல தூக்கத்தில் இருக்கும்போது கணவன் தனது மனைவியின் உருவத்தை மனத்திரையில் பார்த்து நீ அன்பானவள், நல்லவள், கோபத்தை விட்டுவிடு! அதனால் கெடுதல்கள் தான் வரும்.
குடும்ப அமைதி போய்விடும். ஆகவே எப்போதும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இரு. என்னோடு அன்பாகப் பேசிப் பழகு. நான் எப்போதும் உன்னை அன்பு செய்கிறேன். எல்லையற்ற முறையில் அன்பு செய்கிறேன். ஆகவே வீணாக சண்டை சச்சரவுகள் போடாமல் அமைதியாக இரு.
இது போன்ற வாசகங்களை தினமும் மனைவியின் உருவத்தை மனதில் பார்த்தோ அல்லது உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் முகத்தை பார்த்தோ பேசி வந்தால் உங்கள் மனைவி நாளடைவில் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வதை நீங்கள் காணமுடியும்.
நோயை குணப்படுத்த
இதுபோன்ற செய்தியை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்த முறைப்படி உங்கள் நோயை நீங்களே குணப்படுத்த முடியும். அதுபோல் மற்றவர்களையும் நீங்கள் குணப்படுத்த முடியும். உதாரணமாக உங்களுக்கு தெரிந்த ஒரு நபர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், அவர் இரவு தூங்குகிற நேரத்தில் நீங்கள் விழித்திருங்கள். தொடர்புடைய நபரை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். அவர் எந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றாரோ அந்த நோயை சொல்லி நீங்கள் இப்போது நலம் அடைந்து விட்டீர்கள்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த நோயிலிருந்து விடுதலை அடைந்து கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் நோயிலிருந்து விடுதலை அடைந்து விட்டீர்கள். இப்போது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்ற வாசகங்களை தொடர்ந்து சொல்லி வாருங்கள்.
நாளடைவில் அவர் முழுமையாக குணப்படு அவருடைய அன்றாட வாழ்க்கையில் செயல்படுவதை உங்களால் கண்கூடாக காணமுடியும். மீண்டும் சொல்கிறேன் இந்த எல்லாம் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு தேவை உறுதியான மனநிலை.
எமது அடுத்த பதிவை படிக்க: இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களே
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.
டெலிபதி முறை மிகவும் சிறப்பாகும் மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது tnq sir