உடல் எடை அதிகரித்தல் என்பது இன்று மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது . இதிலிருந்து விடுபட மக்கள் அதிக அளவில் பணத்தை செலவு செய்கின்றனர். எனினும் பலன் கிடைக்காமல் தவிக்கின்றனர். உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உங்களுக்காகவே Elements Wellness Melt fat என்ற ஆயுர்வேத பொருளை வழங்குகின்றது Mi Lifestyle Marketing நிறுவனம்.
கெட்ட கொழுப்பை வெளியேற்ற
இன்று அனேக ஆயுர்வேத பொருள்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் ஒரு அற்புதமான நிறுவனம் தான் மை லைப் ஸ்டைல் மார்க்கெட்டிங் குளோபல் பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனம் வெல்லனஸ் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்தியாவின் பாரம்பரியமிக்க ஒரு மருத்துவ முறைதான் ஆயுர்வேதம். இன்று ஆயுர்வேதத்தை நோக்கி எல்லா உலக நாடுகளும் பயணம் செய்கின்றன என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இன்று நாம் பார்க்க இருப்பது Elements wellness Melt Fat என்ற உடல் எடையை குறைக்க பயன்படக்கூடிய ஆயுர்வேத தயாரிப்பை தான் பார்க்க இருக்கின்றோம். MELT என்றால் உருகுவது FAT என்றால் கொழுப்பு. ஆக தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலில் ருந்து வெளியேற்றி நம்மை பாதுகாக்கக் கூடிய ஒரு பொருள் தான் இந்த மெல்ட் ஃபேட். இந்தப்பதிவில் மெல்ட் ஃபேட் என்றால் என்ன? உடல் பருமன் எப்படி அதிகரிக்கின்றது? அதை குறைப்பது எப்படி? கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? இந்த பொருளை எப்படி பயன்படுத்துவது போன்ற தகவல்களை தெளிவாக இந்த பதிவில் காணலாம்.
உடல் எடை அதிகரிப்பதற்கு காரணங்கள்
உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன . இன்றைய உலகில் பலரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை தான் உடல் எடை அதிகரித்தல். இந்த உடல் எடை அதிகரிப்பால் இன்று பல்வேறு நோய்களுக்கு பலரும் ஆளாகி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் இந்தப் பிரச்சனை அதிகம் இருந்தாலும் நாம் வாழுகின்ற இந்தியாவில்தான் உடல் எடை பிரச்சனை அதிகமாக இருக்கின்றது.
இந்த உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை வருவதற்கு, அதுவும் இந்தியாவில் அதிகரிப்பதற்கு காரணம் இந்தியாவில் இருக்கக் கூடிய மக்களின் உடல் அமைப்பும் ஒரு காரணமாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இந்தியாவில் உள்ள நகரங்களில் 73 சதவீதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 10 பேரை எடுத்துக் கொண்டால் அதில் 7 நபர்கள் இந்த உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக இருபத்தி எட்டு வயதிலிருந்து முப்பத்தி எட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இந்த பிரச்சனையில் அதிகம் சிக்கித் தவிக்கிறார்கள். முன் காலங்களில் அதாவது கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒரு குழந்தை பிறந்தால், அதுவும் உடல் எடையோடு பிறந்தால், உடல் எடை அதிகம் இருந்தால் அந்த குழந்தையைப் பார்த்து நல்ல ஒரு ஆரோக்கியமான குழந்தை என சொல்லியது அன்றைய சமூகம். அன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கே ஏதாவது ஒரு சில குழந்தைகள் தான் உடல் எடையோடு இருப்பார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் எங்குபார்த்தாலும் எடை அதிகமான குழந்தைகளே காணப் படுகின்றார்கள்.
இன்றைய குழந்தைகளின் நிலை
அதாவது இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை பரிதாபமாகத் தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. இன்று உடல் எடையோடு காணப்படுகின்ற குழந்தைகளின் உடல் எடையை எப்படி குறைப்பது, அதாவது ஒல்லியான உடலமைப்பை பெறுவது எப்படி என்கிற ஆராய்ச்சிகள் பல கட்டங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இன்று உடல் எடையை அதிகரிப்பதற்கு மக்கள் பணத்தை அதிகம் செலவு செய்வதைவிட, உடல் எடையை குறைப்பதற்காக தான் அதிக அளவில் பணங்களை செலவு செய்கின்றார்கள்.
உடல் எடை ஒரே நாளில் அதிகரிப்பதில்லை. அது பல காலங்களாக ஒவ்வொரு வருடங்கள் போகப் போக, நாம் உண்ணக்கூடிய உணவில் இருந்து தேவையற்ற பொருள்கள் உடலில் தங்கி உடல் எடையை அதிகரிக்க வைக்கின்றது என்பதே உண்மை. இவற்றை ஆரம்பத்திலேயே நாம் கவனித்திருந்தால், சரியான உடற்பயிற்சி அல்லது சரிவிகித உணவுகளை சரியாக நாம் எடுத்துக் கொண்டிருந்தால் இந்த உடல் எடை பிரச்சனைகளை இந்த காலகட்டங்களில் நாம் சந்தித்து இருக்க வேண்டி இருக்காது. இந்த உடல் எடையானது மனிதனுடைய உயிருக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒரு நோயாக மாறி விடுகின்றது.
உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்
எடை அதிகரிக்க பாரம்பரியம் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. அதாவது அம்மா அப்பா தாத்தா பாட்டி அல்லது முன் காலகட்டங்களில் அந்த குடும்ப பாரம்பரியத்தில் யாராவது அதிக எடை உள்ளவர்களாக இருந்தால் அந்தப் பாரம்பரியத்தில் இந்த உடல் எடை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.நாம் உண்ணும் உணவானது சரியாக உடலில் சென்று ஜீரணித்து அவை சக்திகளாக மாறி தேவையற்ற சத்துகள் தேவையற்ற அழுக்குகள் சிறுநீர் வழியாகவோ அல்லது பேதி வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும் இல்லை என்றாலும் உடல் எடை அதிகரிக்கும்.
தவறான உணவு பழக்க வழக்கங்களும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது. முன் காலங்களில் இயற்கையாக கிடைத்த தாவர வகைகள், பயிறு வகைகள், காய்கறிகள், பழங்கள், விதைகள் என மக்களின் உணவு வித்தியாசமாக இருந்தது. அதே நேரம் சரிவிகித உணவாகவும் இருந்தது. ஆனால் இன்று எண்ணெயில் வறுத்து தயாரித்த பொருட்கள், மைதா போன்ற தேவையற்ற கழிவுப் பொருள்களில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் உணவாக மாறிப்போன காலகட்டமாக இருப்பதால், உடல் எடை அதிகரிக்கிறது.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நிதானமாக நின்று வளர்ந்த நாட்டுக் கோழி இறைச்சி மற்றும் அதன் முட்டை உண்ணும் முறை மாறி, வெறும் நாற்பத்தி இரண்டு நாளில் இறைச்சிக்கு தயாராகும் ஹார்மோன் மருந்துகளைப் பயன்படுத்தி உருவாக்கி எடுக்கின்ற வெள்ளை கோழி இறைச்சியை உண்ணும் நிலைக்கு இன்று வந்துவிட்டோம்.
உணவு முறைகளினால் வந்த மற்றம்
அந்த இறைச்சியை மாதத்திற்கு அல்லது வாரத்திர்க்கு ஒரு முறை பயன்படுத்தும் நிலை மாறி தினமும் உண்ணும் நிலைக்கு பலரும் வந்துவிட்டனர். இதுவும் உடல் எடை அதிகரிப்புக்கு மிக மிக முக்கியமான ஒரு காரணமாகும். இந்த இறைச்சியை நாம் உண்பதால் அந்த கோழியில் போடப்பட்ட ஹார்மோன் அந்தக் கோழியை உடல் எடையை அதிகரிக்க வைப்பது போல நமது உடல் எடையையும் அதிகரிக்க வைக்கின்றது என்பது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சரியான முறையில் மலம் கழித்தல் இல்லை என்றாலும் உடல் எடை அதிகரிக்கும். உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து வேலை பார்க்கும் தன்மை உடையவர்களுக்கு இந்த உடல் எடை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. அதுபோல அதிகம் மருந்துகள் பயன்படுத்தக் கூடிய நபர்களுக்கும் அதன் பக்க விளைவு காரணமாக உடல் எடை அதிகரிக்கின்றது.
பெண்களுக்கு குழந்தைப் பேறு காலம் முடிந்த பிறகு,சில தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகளாலும் அல்லது அந்த உடலில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளினாலும் உடல் எடை அதிகரிக்கின்றது.
உடல் எடை அதிகரிப்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அநேக வேறுபாடுகள் இருக்கின்றன. ஆண்களுக்கு கொழுப்பு அதிகரிக்கும் போது அது வயிற்றுப் பகுதியில் சேர்ந்து வயிறு பெரிதாகி உடல் எடையை அதிகரிக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை உடலின் பின்பகுதி மற்றும் கால் தொடை பகுதிகளில் கொழுப்புக்கள் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கும்.
கலோரிகளின் தேவை
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 கலோரிகள் உடலுக்கு தேவை. இந்த அளவிற்கு மேல் கலோரி உடலில் வந்தால் அந்த உடல் எடை அதிகரிக்கும். சாதாரண எடையில் இருக்கக்கூடிய ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1500 கலோரிகளை போதுமானது. இதற்கு மேல் வரக்கூடிய கலோரிகளை உடல் உடைய சக்தியால் எரிக்கப்பட்டு குளுக்கோஸாக மாற்றி கொழுப்பு வடிவில் சேமித்து வைத்திருக்கும் நமது உடல்.
எதற்காக சேமித்து வைத்திருக்கிறது என்றால் திடீரென ஒருநாள் நாம் உணவு எடுக்க முடியாத சூழ்நிலை வரும் போது உடலுக்கு தேவையான கலோரிகளை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது சேமித்து வைக்கப்பட்டு, கொழுப்பு வடிவில் இருக்கக்கூடிய கலோரிகள் உடலுக்கு கிடைத்து மீண்டும் உடலுக்கு ஊட்டத்தை தருகின்றன.
அதிகமாக உடலில் வரக்கூடிய கலோரிகள் எரிந்து சக்தி ஆக்கப்படவில்லை என்றால் அவை ஆங்காங்கே கொழுப்புகள் தேங்கி உடல் எடையை அதிகரிக்கும். உடலின் தேவைக்கு அதிகமாக உடலில் வருகின்ற கலோரி எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்பட வேண்டும் என்றால் அந்த உடம்பிற்கு நல்ல உடற்பயிற்சி தேவைப்படும் அல்லது கடின உடல்சார்ந்த கடின உழைப்பு தேவைப்படும். அந்த உடலுழைப்பை கொடுக்காத பட்சத்தில் அது கொழுப்பாக மாறி, உடல் எடையை அதிகரிக்க வைக்கும். முற்காலங்களில் வீடுகளில் கூட மக்கள் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
குறிப்பாக தண்ணி எடுக்கும்போது கிணற்றில் சென்று கைவைத்தால் தண்ணியை இழுத்து எடுத்தார்கள். அதேபோன்று வீட்டில் மாவுகளை இடிப்பதற்கு. தானியங்களை எடுப்பதற்கு, உடல்களை பயன்படுத்தினார்கள். துணிகளை துவைப்பதற்கு கற்களைப் பயன்படுத்தினார்கள். இப்படி உடலுக்கு அதிகமான வேலை கொடுத்தார்கள். அதனால் அன்றைக்கு வாழ்ந்த மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாம் எளிமையாய் போய்விட்டது.
மேற்சொன்ன செயல்களையெல்லாம் செய்வதற்கு எந்திரங்களை வந்துவிட்டன. இதனால் இன்று நமது உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்து போய்விட்டது. இதுவே உடல் எடை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. ஆயுர்வேதம் அழகாக செல்கிறது பசித்த பின்பே சாப்பிட வேண்டும் என்று. ஆனால் இன்றைக்குள்ள காலகட்டத்தில், எல்லோரும் பசித்தல்ல, சூழ்நிலைக் காரணமாக மணியைப் பார்த்தே சாப்பிடுகின்றனர். இதனால் சாப்பிடக் கூடிய உணவு ஜீரணிக்காமல் கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிப்பதற்கு இது துணை புரிகிறது.
எமது முந்தய பதிவை வாசிக்க: Woman Companion benefits in Tamil
உடல் எடை அதிகரிப்பால் வரும் பிரச்சனைகள்
உடல் எடை அதிகரிப்பு இருக்கிறவர்களுக்கு வரக்கூடிய காலகட்டங்களில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உடல் எடை அதிகரித்து இருக்கக் கூடிய நபர்களுக்கு, அதிகமாக இதய பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. காரணம் ஜீரணிக்கப்படாத கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புகளாக மாறி இரத்தத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றது.
அது இரத்த நாளங்களில் அல்லது இதயத்தில் இருக்கக்கூடிய வால்வுகளில் அடையும் போது இதயத்திற்கு பிரச்சனை வருகிறது.தேவையற்ற கொழுப்பு அதிகம் ரத்தத்தில் சுற்றிக் கொண்டு இருப்பதால் ரத்த நாளங்களில் அடைவதுபோல, நமது ஈரலில் கொழுப்பு சூழ்ந்துகொண்டு அதனுடைய செயல்பாட்டை தடுக்கின்றன. இப்படி கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதனால் பல நோய்கள் ஆரம்பிக்கின்றன.
இந்த உடல் எடை அதிகரிப்பால் நம்முடைய எலும்புகள் பாதிப்படைவதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நம்முடைய கால் முட்டிகள் இடுப்புகள் பாதிக்க வாய்ப்பு உண்டு. காரணம் நம்முடைய முழு உடல் எடை முழுவதையும் தாங்கக்கூடியது கால் முட்டுகளும், இடுப்பும் தான் .அதனால் மேல் இருக்கக் கூடிய அந்த உடல் எடையை தாங்கும் கால்களும் இடுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
இந்த பாதிப்பை ஆரம்பத்திலேயே சரி செய்யாமல், கவனிக்காமல் விட்டு விட்டால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு.இந்த உடல் எடையை குறைப்பதற்காக நடத்தல் ஓடுதல் உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லுதல் என பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அதை தொடர்வது இல்லை என்பதுதான் உண்மை. காரணம் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழல்களும் உடல் சோர்வும் ஆகும். சிலர் உணவுக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை முன்னெடுத்து அதையும் தொடர்வதில்லை.
உடல் மற்றும் வயிறு எடையை குறைக்க
நீங்கள் எடுத்த எந்த முயற்சியும் பலன் தரவில்லையா? கவலையை விடுங்கள். உங்களுக்காகவே Mi Lifestyle Marketing நிறுவனம் வழங்கும் Elements Wellness Melt fat இருக்கின்றது. இது முற்றிலும் ஒரு ஆயுர்வேத தயாரிப்பு. எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. இதில் கொடம்புளி, விடங்கம் பவுடர், திரி கடுகம், தரப்படுத்தப்பட்ட தேயிலை பவுடர், வெந்தய பவுடர், மைஷாக், ஏலக்காய் பவுடர், சரக்கொன்றை, வெள்ளை எள் உமி, கடுக்காய் பவுடர் போன்ற மூலிகைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
மெல்ட் ஃபேட் உண்பதால் கிடைக்கும் பயன்கள்
உடல் எடை குறையும், வயிறு அளவு குறையும், கொழுப்பு படிமங்கள் வெளியேற்றப் படும்.
உடல் எடை அதிரிப்பால் ஏற்பட்ட பக்க விளைவுகள் குறைகின்றது.
எமது அடுத்த பதிவை படிக்க: Elements Wellness Ayushwaas benefits in Tamil
இந்த பொருள் உங்களுக்கு தேவை எனில் கமெண்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு கருத்தை தெரிவியுங்கள். நாங்கள் உள்களை தொடர்பு கொண்டு பொருள் கிடைக்க ஏற்பாடு செய்கின்றோம். அல்லது 8072301341 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஒரு Box விலை ரூபாய் 2900 மட்டும். நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.