Elements wellness Uri flush 3 in Tamil என்ற பதிவின் வழியாக சிறுநீரக கற்கள் தொடர்பான செய்திகளை காணலாம். இன்றைய நாகரிக உலகில் உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்களால் மனித உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப் படுகின்றன. உள் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகிய சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் மற்றும் அதில் ஏற்படுகின்ற kidney stone ல் இருந்து எப்படி விடுபடுவது என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
- எலிமென்ட்ஸ் வெல்னஸ் ஆயுர்வேத பொருட்கள்
- ஆயுர்வேதத்தின் சிறப்புகள்
- சிறுநீரகங்களை பாதுகாக்க யூரி பிளஸ்
- சிறுநீரக கற்கள் என்றால் என்ன?
- சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள்
- சிறுநீரக கற்களின் வகைகள்
- சிறுநீரக கற்கள் உருவாக காரணங்கள்
- சிறுநீரகக் கல் இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது?
- சிறுநீரக கற்களுக்கு இன்றய மருத்துவம்
- இந்த மருத்துவ முறையால் ஏற்படும் பக்க விளைவுகள்
- சிறுநீரக கற்கள் நிரந்தரமாக மாறுவதற்கு தீர்வு
எலிமென்ட்ஸ் வெல்னஸ் ஆயுர்வேத பொருட்கள்
மேற்கண்டது போல இன்றைய உணவு முறைகளால், நம் உடலுக்கு சரியான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதன் காரணமாக, பல்வேறு விதமான நோய்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன.அப்படிப்பட்ட நோய்களின் தாக்கங்களில் இருந்து விடுபடவும், ஒருவேளை நோய்வாய் பட்டிருந்தால் அந்த நோயில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறவும் மை லைப் ஸ்டைல் மார்க்கெட்டிங் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிமுகப் படுத்துகின்றது எலிமென்ட்ஸ் வெல்லனஸ் ஆயுர்வேதப் பொருட்கள்.
இதில் நாம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வைக்கக் கூடிய அனேக பொருட்கள் உள்ளன.இந்த பொருட்களை நோய் வருமுன் பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. ஒருவேளை நோய்வாய்ப் பட்டால் மற்ற மருந்துகளோடு இந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு பயன் பெறலாம். அந்த சிறப்புமிக்க தயாரிப்புகளில் இன்று நாம் பார்க்க இருப்பது, சிறுநீரக கற்களை முற்றிலும் அகற்றி தருகின்ற யூரி பிளஸ் என்கின்ற கேப்சூல் மற்றும் அதன் லிக்யூட் பற்றி தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.
ஆயுர்வேதத்தின் சிறப்புகள்
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே தோன்றிய ஒரு மிக உன்னதமான மருத்துவ முறைதான் ஆயுர்வேதம். ஆயுர்வேத மருத்துவ முறையை இன்று உலக நாடுகள் பலவும் பின்பற்றத் துவங்கி விட்டன. மனிதனுடைய உடலானது பஞ்ச பூதங்களால் ஆனது. பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலில் ஏற்படுகின்ற எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு ஆயுர்வேதத்தில் இருக்கின்றது. ஆனால் சரியான மூலிகைகளை அடையாளம் கண்டு பயன்படுத்தினால் வெற்றிதான்.
சரியான மூலிகைகளை கண்டுபிடித்து தலைசிறந்த கண்டுபிடிப் பாளர்களை கொடுத்தான் இந்த ஆயுர்வேத பொருட்களைதயாரித்து மை லைப் ஸ்டைல் மார்க்கெட்டிங் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், எலிமென்ஸ் வெல்லனஸ் என்ற பெயரில் வழங்குகின்றது. பல்வேறு பொருட்களை இந்நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அதில் நமது சிறுநீரகத்திற்கு உதவி புரிந்து சிறுநீரக கற்களை வெளியேற்ற அல்லது சிறுநீர் குழாய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்ற ஒரு அற்புதமான பொருள் தான் யூரி பிளஸ் கேப்சூல் மற்றும் லிக்யூட்.
சிறுநீரகங்களை பாதுகாக்க யூரி பிளஸ்
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால், அதை கவனிக்காமல் விட்டுவிட்டு அது பெரிதாகிவிட்டால் அதனால் வரும் வேதனையை நம்மால் தாங்க முடியாது. அது மிகப்பெரிய ஒரு கொடிய வேதனையாகும். அந்த வேதனையின் தாக்கம், ஒரு முறையாவது இதை அனுபவித்தவர்களுக்கு தான் சரியாக உணர முடியும். அந்த அளவுக்கு வலி கடுமையாகவும், கொடுமையாகவும் இருக்கும்.
வலி வந்தவர்கள் மருத்துவமனைக்கு போகாமல் இருக்க முடியாது.அதுமட்டுமல்ல சிறுநீரகக் குழாய்களில் வரக்கூடிய தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அதுவும் பெரிய பாதிப்புகளை உருவாக்கும். இவ்வாறு சிறுநீரக கற்களில் இருந்து விடுதலை பெறவும் அல்லது சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா மல் இருக்க வும் சிறுநீரகக் குழாய்களில் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் உங்களுக்காக அறிமுகப்படுத்தி இருக்கக்கூடிய ஒரு அற்புதமான பொருள் தான் யூரி பிளஸ் என்ற ஆயுர்வேத தயாரிப்பு.
சிறுநீரக கற்கள் என்றால் என்ன?
சிறுநீரகம் என்றால் என்ன? அந்த சிறுநீரகம் எப்படி செயல்படுகிறது? அந்த சிறுநீரகத்தில் கற்கள் எப்படி உருவாகின்றது? என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். மனித உடலில் இருக்கக் கூடிய ராஜ உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று தான் சிறுநீரகம். ஒரு மனிதனுக்கு வலப்புறம் மற்றும் இடப்புறம் என இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். இதில் ஓன்று பழுதுபட்டாலும் மற்றொன்றை வைத்து ஆரோக்கியமாக வாழலாம். இந்த சிறுநீரகங்களுடைய வேலை என்னவென்றால் அழுக்குகளை வெளியேற்றுவது.
நமது உடலின் உள் வரக்கூடிய புரோட்டின், குளுக்கோஸ், சோடியம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், யூரியா, கிரியேட்டின், போன்றவற்றை உடல் தேவைக்கு எடுத்த பின், தேவையற்றவை இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். இவ்வாறு இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்இருக்கும் அழுக்குகள் நச்சுகளாக மாறி உடலுக்கு பல்வேறு விதங்களில் தீங்கு விளைவிக்கும். இவற்றை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் வேலை. இந்த வேலையை சிறுநீரகமானது 24 மணி நேரமும் செய்து கொண்டிருக்கின்றது.
எமது முந்தய பதிவை வாசிக்க: Elements Wellness Ayushwaas benefits in Tamil
சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள்
மேற்கண்ட செயலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற சிறுநீரகங்கள் ஆனது சில நேரங்களில் பாதிப்புகளையும் அடைகின்றது. பொதுவாக சிறுநீரகங்களில் இரண்டு விதமான பாதிப்புகள் நடக்கின்றது. சிறுநீரக குழாய் தொற்று மற்றும் சிறுநீரக கற்கள் என்பவைதான் அந்த பாதிப்புகள். இதில் மிக முக்கியமான பிரச்சனை சிறுநீரக கற்கள்.
இவை எப்படி உருவாகின்றன என்றால், சிறுநீரகமானது இரத்தத்தை சுத்திகரிக்கும் போது அதில் சில படிமங்கள் சிறிது சிறிதாக படிய ஆரம்பிக்கும். இவ்வாறு சிறிது சிறிதாக படியும் படிமங்கள் பெரிதாக மாறுகின்ற போது தான் சிறுநீரக கற்கள் என்று அழைக்கப் படுகின்றது. இந்த கற்களானது சிறுநீரகத்தில் சிறுநீர்ப் பையில் சிறுநீரகக் குழாயில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். இது ஆரம்பிக்கும் போது எந்தவிதமான வலியோ உணர்வுகளோ நமக்கு இருக்காது.
அது பெரிதாகி சிறுநீரை அடைக்கின்ற போதோ அல்லது அந்த கல்லின் வீரியத்தால் பக்க சுவர்கள் கிழிக்கப்பட்டு சிறுநீருடன் இரத்தம் கலந்து வரும் போதோ தான் வலியினூடைய கொடுமை ஆரம்பிக்கும். அதுவும் சர்க்கரை போன்ற நோய்கள் வந்து நரம்பு மண்டலங்கள் பாதிப்படைந்து இருந்தால் எந்த வலியும் தெரியாது.
இந்த வலியானது அடிவயிற்றில் இருக்கக்கூடிய சிறுநீரகங்களின் பின் பக்கத்தில் இருக்கக்கூடிய இடுப்பு பகுதியில் தான் அதிகமாக வலி தெரியும். பின் இந்த வலியானது கீழிறங்கி செல்வதை உணர முடியும். கல்லின் உடைய அளவு பெரிதாக பெரிதாக வலியினுடைய அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் சிறு அறிகுறிகள் தோன்றும் போதே உடனடியாக இதை மருத்துவம் செய்து மாற்றுவதே நல்லது. இல்லை என்றால் சிறுநீரகச் செயலிழப்பு என்கின்ற நிலைக்கு கொண்டு சென்று விடும்.
சிறுநீரக கற்களின் வகைகள்
சிறுநீரக கற்களில் கீழ்காணும் ஆறு வகைகள் உண்டு
- Calcium Oxalate
- Brushite
- Struvite
- Hydroxy Apatite
- Uric Acid
- Calcium Pyrophosphate
இந்தக் கற்களில் மிகவும் முக்கியமானவை Calcium Oxalate, Uric Acid. இந்த வகை கற்கள்தான் மக்களை அதிகம் பாதிக்கின்றது.100 நபர்களுக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டால் அதில் 60.5 நபர்களுக்கு முதல் வகையில் இருக்கக்கூடிய Calcium Oxalate வருகின்றது. இந்தியாவில் சிறுநீரக கற்கள் உடைய பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று எம்ஜிஆர் யுனிவர்சிட்டி எடுத்த ஆய்வில் 15 கோடி மக்கள் சிறுநீரக கற்களினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். உலகளவில் பார்த்தோமென்றால் 12 சதவீத மக்கள் இந்த சிறுநீரக கற்களினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
சிறுநீரக கற்கள் வந்த நபர்களில் 10 சதவீதம் பேருக்கு நிரந்தரமாகவே சிறுநீரகம் செயலிழப்பு ஆக வாய்ப்பு இருக்கின்றது. வேதனையான விஷயம் என்னவென்றால் அனேகமான நபர்கள் தனக்கு சிறுநீரக கற்கள் இருக்கிறது என்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஏதாவது வலி சார்ந்த பிரச்சனைகள் வரும்போது தான் தனக்கு சிறுநீரகக்கற்கள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்கிறார்கள்.ஆனால் இதை ஆரம்பத்திலேயே சிறு அடையாளங்கள் தெரியும் போதே இதை கண்டு கொண்டு சரியான சிகிச்சை செய்து கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.
சிறுநீரக கற்கள் உருவாக காரணங்கள்
1 .பாரம்பரியம் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது அதாவது நமது முன்னோர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்றால் நமக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
2.அதிக சூடான இடங்களில் வசிப்பவர்களுக்கு இந்த சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
3 கால்சியம், உப்பு, சில இறைச்சி வகைகளை அதிகமாக உண்பதால் சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
4.சில நோய்களுக்காக மருந்து மாத்திரைகள் எடுக்கும் போதும் கிட்னி ஸ்டோன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
5.இரத்த ஓட்டத்தில் குறைபாடுகள், செரிமானக் கோளாறு போன்றவை வரும் போதும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.
6.நாம் தண்ணீர் குடிப்பதில் குறைபாடு வைக்கும் போது உடலில் நீர் சத்து குறைகிறது. இதனால் கிட்னியில் கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது?
இடுப்பின் பின் பகுதியில் வலி ஏற்படும். இதை பலரும் இடுப்புவலி என தவறாக நினைத்துக் கொண்டு வேறு மருத்துவத்தை பார்க்கின்றனர். இடுப்பில் ஏற்படும் வலி தொடை பக்கமாக இறங்கி வர வாய்ப்பு உண்டு. அப்படி வந்தால் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும் சிறுநீரக கல் நமக்கு இருக்கிறது என்று.
இந்த வலியோடு இணைந்து காய்ச்சலோ, அல்லது சர்த்தல் போன்ற பிரச்சனை வந்தால் கிட்னியில் கல் இருக்கிறதா என்பதை நீங்கள் சோதனை செய்யலாம். மேற்கண்ட அடையாளங்கள் ஏதாவது இருப்பின் அல்ட்ரா சவுண்ட்ஸ் ஸ்கேன் நாம் எடுத்துப் பார்த்தோம் என்றால் இதைப் பற்றிய தெளிவு கிடைக்கும்.
3 மில்லி மீட்டர் வரை இருக்கும் கற்கள் சாதாரண கற்களே. நாம் அதிகமாக தண்ணீர் அருந்தினால் வெளியேறிவிடும். 3 முதல் 7 வரை உள்ள கற்கள் மீடியம் ஆனவை . இவை சில சிகிச்சை முறைகளால் வெளியே சென்றுவிடும். 7 மில்லி மீட்டருக்கு மேல் இருக்கக் கூடியதை பெரிய கற்கள் என்று சொல்லுவோம். இதை உடனடியாக சிகிச்சை முறையில் வெளியேற்றி தான் ஆக வேண்டும்.
சிறுநீரக கற்களுக்கு இன்றய மருத்துவம்
இந்த வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைக்குச் சென்றால் அவர்கள் முதலில் கொடுக்கக்கூடிய தீர்வு வலிநிவாரணி மருந்துகள். இது தற்காலிகமாக வலியைத்தான் போக்குமே தவிர நோயை நீக்காது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்வார்கள். அதுபோல சிறுநீர் குழாய்களை விரிவுபடுத்த கூடிய சில மருந்து மாத்திரைகளை தருவார்கள்.
சிறுநீர் கற்களை உடைத்து துண்டுதுண்டாக மாற்றி வெளியே எடுக்கும் சிகிச்சை முறையும் இருக்கின்றது. அதுபோல சில அறுவை சிகிச்சை முறைகளும் உள்ளன.
இந்த மருத்துவ முறையால் ஏற்படும் பக்க விளைவுகள்
சிகிட்சைக்கு பின்னர் மீண்டும் கல் உருவாகின்றது. அதிக தலைவலி தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் உருவாகும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அதனுடைய தன்மை அதிகரிக்கும். அதே நேரத்தில் தசைநார்களில் வலிகள் உருவாகும்.கொழுப்பு பிரச்சனை அதிகரிக்கும். அதேபோல் தோல்களிலும் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
சிறுநீரக கற்கள் நிரந்தரமாக மாறுவதற்கு தீர்வு
ஆயுர்வேத முறைப்படி சிறுநீரக கற்களை நிரந்தரமாக உருவாகுவதை தவிர்ப்பதற்கும் அல்லது உருவான கற்களை வெளியே கொண்டு செல்வதற்கும் எலிமென்ஸ் வெல்னஸ் அறிமுகப்படுத்தி உள்ள ஒரு ஆயுர்வேத பொருள்தான் யூரி பிளஸ் கேப்சூல் மற்றும் சிறப்பு. இது எந்த வித பக்க விளைவுகளும் இல்லாதது.
இது சிறுநீரக கற்களை முற்றிலும் கரைத்து சிறுநீர் வழியாக வெளியே கொண்டு செல்கின்றது. இதில் நெருஞ்சில் முள், கொள்ளு,முக்கிரட்டை கீரை,சிறுபூளை ஆகிய மூலிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எமது அடுத்த பதிவை படிக்க: Elements Thyhealth liquid benefits in Tamil
உங்களுக்கு இந்த பொருள் தேவையா?
நீங்களும் சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படும் நபரெனில் இது உங்களுக்கான பொருள்தான். இது உங்களுக்கு தேவை எனில் கருது பதிவு பெட்டியில் உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவிடுங்கள். நான் உங்களை தொடர்பு கொள்கின்றேன். அல்லது 8072301341 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். நன்றி இன்னுமொரு பதிவில் சந்திப்போம்.
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.
சிறுநீரக கல்லை முற்றிலும் மாற்றும் ஒரு ஆயுர்வேத வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல முடியும்