நாம் விரும்பியதை அடைவது எப்படி?

ஒரு மனிதனுடைய வாழ்வில் முன்னேற்றங்கள் தடை படுவதற்கு மிக முக்கியமான காரணம் அந்த நபரிடம் காணப்படும் எதிர்மறை எண்ணங்களே. நாம் விரும்பியதை அடைய வேண்டுமெனில்  தடைகளை உடைத்தெறிய வேண்டும். அதேநேரம் நம் எண்ணங்களை நேர்மறையாக மாற்ற வேண்டும். இதைக் குறித்து விவரமாக இப்பதிவில் காணலாம்.

எதிர்மறை எண்ணங்களை மாற்றும் வழி

நமது எதிர்மறை எண்ணங்களை மாற்றுவதற்கு ஒரே வழி பயிற்சிதான். பயிற்சியோடு இணைந்த முயற்சியும் தேவை. இப்போது எதிர்மறை எண்ணங்களை மாற்றும் ஒரு அற்புதமான பயிற்சியை பார்க்கலாம். முதலில் ஒரு ஓய்வான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு நாற்காலியைப் போட்டு அதில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.

முதலில் உங்கள் சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை ஆழமாக உள்ளிழுத்தல் என்பது வயிறு நிறைய காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது ஆகும். இவ்வாறு ஐந்து முறை செய்யும் போது உங்கள் மனது அமைதியாகும். தொடர்ந்து உங்கள் இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று தொடாதவாறு வைத்துக் கொள்ளுங்கள்.

அதுபோல உங்கள் கைகளும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளாமல் மடியில் ஓ அல்லது முழங்காலிலும் நீட்டி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைகளிலும் உள்ள உங்களது பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் ஒன்று சேர்த்து  வைத்துக் கொள்ளவும்.

இப்போது முக்கோணம் போன்ற ஒரு அமைப்பை நீங்கள் காணமுடியும்.  இனி சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்திக்  கொள்ளுங்கள். மனதில் 1 முதல் 7 வரை நிதானமாக எண்ணுங்கள். பின்னர் மெதுவாக சுவாசத்தை வெளியே விடுங்கள்.

ADVERTISEMENT

இவ்வாறு ஏழு முறை தொடர்ந்து செய்யவும். இப்போது அமைதியாக கைகளுடைய நிலையை கொஞ்சம் விடுவித்து அமைதியாக இருக்கவும். இப்போது எதிர்மறையான எண்ணங்கள் உணர்வுகள் உங்களை விட்டு அகன்று இருக்கும். ஆதலால்  மன அமைதியை உங்களால் உணர முடியும்.

நல்ல எண்ணங்களை மனதில் பதித்தல்

உங்கள் உடலையும் மனதையும் தயார் செய்யக்கூடிய அடுத்த கட்டத்திற்கு செல்வோம். முன்பே சொல்லியது போல ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும். இரு கால்களையும் சேர்த்து ஒன்றை வந்து பாருங்கள் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும்.

உங்கள் இரண்டு கை விரல்களும் ஒன்றை ஒன்று கோர்த்தவாறு நெஞ்சுப் பகுதியில் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மறுபடியும் சுவாசக் காற்றை உள்ளே ஆழமாக இழுங்கள். குறைந்தபட்சம் ஐந்திலிருந்து ஏழு எண்ணிக்கை எண்ணும் வரை அந்த காற்றை உள்ளே தக்கவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மெதுவாக அந்த காற்றை வெளியே விடுங்கள்.

இப்படி உங்களுடைய மனதின் எண்ணங்கள் அலை பாய்வது நிற்கும்வரை என்ற பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சுவாசத்தை உள்ளிழுக்கும் போது பிரபஞ்ச பேராற்றல் உங்களின் உள் கடந்து வருவதாக நினைத்துக் கொள்ளுங்கள். சகல விதமான செல்வ வளங்களும் உங்களை சூழ்ந்து கொள்வதாக மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

விரும்பியதை அடைய மனப்பயிற்சி

இந்த உலகில் நீங்கள் எதை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தாலும் நிச்சயமாக அதை உங்களால் அனுபவிக்க முடியும். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? நாம் விரும்புவது நமக்கு ஏன் கிடைக்கவில்லை என நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால், நமக்கு எது வேண்டும் என்று நமக்கே தெரியவில்லை.

ADVERTISEMENT

அதாவது நமது விருப்பத்தில்  தெளிவில்லை என்பது அர்த்தம். உங்களுக்கு எது வேண்டுமோ அதை உங்கள் மனத்திரையில் தெளிவாகப் பார்த்து, அதை உங்கள் கையில் கிடைத்தால் எப்படி அனுபவிப்பீர்களோ, அந்த அனுபவத்திற்கு நீங்கள் கடந்து வரவேண்டும்.

கடவுள் அல்லது இயற்கை இந்த உலகில் மனிதனை தவிர வேறு எந்த உயிருக்கும் சிந்தித்து கற்பனையில் அதை பார்க்கும் திறனை கொடுக்கவில்லை. எனவே பிரபஞ்ச பேர் அறிவாற்றல் நமக்கு கொடுத்திருக்கக் கூடிய இந்த அற்புத சக்தியை நாம் பயன்படுத்தி எளிதில் வெற்றியடைய முடியும். இதில் வேறு எந்த ரகசியமும் இல்லை.

ஆனால் இதை சரியான வழியிலும் பயன்படுத்த முடியும். தவறான வழியிலும் பயன்படுத்த முடியும். எச்சரிக்கை மிகத் தேவை. ஏனெனில் நன்மையான செயல்களை மனத்திரையில் பார்த்தால் அது அப்படியே நிகழும். அதுபோல தீமையான செயல்களை மனத்திரையில் பார்த்தாலும் அதுவும் அப்படியே நிகழும். அதுதான் எச்சரிக்கை தேவை என்றேன். இந்த பயிற்சியை முறையாக எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி தொடர்பான ஓர் முன்னோட்டம்

முதலில்  இந்தப் பயிற்சியை துவங்கும் முன் உங்களது அடிப்படைத் தேவை என்ன என்பதை முதலில் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். உங்களது தேவை என்ன என்பதை தெளிவாக முடிவு செய்தபின்பு அந்தத் தேவையை அடைந்தே தீருவது என உறுதியாக இருங்கள்.

ஒரு தேவையை மட்டும் முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள். பல செய்திகளை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். காரணம் அது தோல்வியில் முடியும். இந்தப் பயிற்சியை செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது நீங்கள் ஒதுக்க வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியை மேற் கொள்ளலாம்.

ADVERTISEMENT

ஆனாலும் அதிகாலை நேரம் என்பது மிகவும் அருமையான நேரம் என்று சொல்வேன். இந்தப் பயிற்சிக்காக ஒரு தனி அறையை தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த தியானப் பயிற்சி நேரத்தில் யாரும் வந்து குறுக்கிடாத வாழு பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது.

மனத்திரையில் உங்கள் தேவையை ஒரு காட்சி போல நீங்கள் பார்த்து வரவேண்டும். வேறு எண்ண ஓட்டங்களும் குழப்பங்களோ மனதில் இருக்காது பார்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் மனதை அமைதிப் படுத்த கொஞ்சம் நேரம் பிடிக்கும். அப்படி மனம் அமைதியான பின்பு, கண்களை மூடிக்கொண்டு திரையில் சினிமா பார்ப்பது போல் உங்களுடைய தேவைகளை நீங்கள் பார்த்து வரவேண்டும். ஒரு காட்சியை எந்த அளவுக்கு அதிக நேரம்  நீங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்களோ அதை நிச்சயம் விரைவில் நடைபெறும்.

எமது முந்தய பதிவை வாசிக்க: நம்பிக்கையின் ஆற்றல்கள்

மனதை அமைதிப்படுத்த தியானம்

அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். எந்த சச்சரவும் அங்கே இருக்கக் கூடாது. தரையில் ஒரு விரிப்பை விரித்து முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து கொள்ளுங்கள் .முதலில் உங்கள் கால் பாதம் தளர்வாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின் தசைகள், கால்கள், முழங்கால், தொடை, தசை நார்கள், அமைதி அடைவதை உணருங்கள். தொடர்ந்து உங்கள் இடுப்பு, உங்கள் வயிறு, மார்பு, முதுகு ஆகியவை அமைதியாக இருப்பதை உணரவும். அதன் பின்பு கைகள், முழங்கைகள், தோள் பட்டைகள், அமைதியாக இருப்பதை உணரவும்.

ADVERTISEMENT

மேலும் கழுத்து, கண், காது, மண்டை ஆகியவைகள் தளர்வாக இருப்பதை உணரவும். இது உணர்வுடன் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் இந்த அமைதியான சூழலை உணரவும். அதாவது உடல் உங்கள் வசம் இல்லாமல் மனம் மட்டும் தனித்து நிற்பது போன்ற ஒரு உணர்வு வரும்.

இப்போது உங்கள் எண்ணத்தை உங்களுடைய மனதிற்குள் செலுத்துங்கள். இப்போது உங்கள் எதார்த்த கண்கள் மூடியிருக்கும். ஆனால் உங்கள் மனக்கண் முன்பு ஒரு வெண்நிற திரை ஒன்று இருப்பதை பாருங்கள். அந்தத் திரை  உங்கள் கண்களுக்கு பெரிதாக தெரியட்டும்.

அந்தத் திரையில் வெள்ளை நிற ஒளி பரவி வருவதை தெளிவாக உணருங்கள். தற்போது அந்த திரையை பார்ப்பதற்கு சினிமா போன்று இருக்கும்.  இனி நீங்கள் விரும்புகின்ற அனைத்தையும் அந்தத் திரையில் ஒரு திரைப்படம் போல பாருங்கள்.

உதாரணமாக நெடுநாளாக ஒரு இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்திருந்தால் அந்த வாகனத்தை நீங்கள் வாங்குவது போன்றும் அதை உங்கள் விருப்பப்படி ஓட்டுவது போன்றும் நீங்கள் கற்பனையாக அந்தத் திரையில் பார்த்து மகிழுங்கள்.

கற்பனை கட்சியை அமைப்பது

இதுபோன்று எதுவாக இருக்கலாம் நீங்கள் எதை வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்களுக்கு கிடைப்பது போன்று உங்கள் வாழ்க்கையில் அது நடப்பது போன்று அந்த கற்பனைக் ஆட்சியை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்தது உங்களில் கையில் தவழும் போது எந்த மகிழ்ச்சி கிடைக்குமோ அந்த மகிழ்ச்சியான அனுபவத்தை அந்த இடத்தில் உங்களால் உணர முடியும்.

ADVERTISEMENT

இந்த மனத்திரையில் என்னவெல்லாம் காட்சிகளை உணர்ச்சிப் பூர்வமாக உங்களால் பார்க்க முடியுமோ அதையெல்லாம் வெகுவிரைவில் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். இதுதான் ஆழ்மனதின் அற்புதமான நிலை. அதுபோல நீங்கள் ஒரு வியாபாரத்தில் வெற்றியடைய வேண்டும் என நினைத்தால் அந்த வியாபாரத்தை நீங்கள் எப்படி எல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும்.

அப்படியெல்லாம் மனக்காட்சி அமைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நீங்கள் நினைத்த பெரிய லாபம் கிடைத்தது போலவும், அந்த லாபத்தை கொண்டு நீங்கள் விரும்பிய வீடு வாகனம் தோட்டம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்வதாகவும் கற்பனையில் பாருங்கள்.

உங்கள் வங்கிக் கணக்கில் 5 கோடி அல்லது ஆறு கோடி உங்களுக்கு எத்தனை கோடிகள் வேண்டுமோ அந்தப் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பதாக கற்பனையில் பார்த்துக்கொள்ளுங்கள்.  இதில் ஒரு தெளிவு என்னவென்றால் பல கோடிகள் இருப்பது போன்று நீங்கள் பார்க்கக்கூடாது. எத்தனை கோடிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை துல்லியமாக மனக்காட்சிகள் பாருங்கள்.

நீங்கள் ஆசைப்பட்ட கார் கிடைக்க

அதுபோல நீங்கள் காருக்கு ஆசைப்பட்டு இருந்தால் அந்த கார் எப்படி இருக்க வேண்டும்?  எந்த கம்பெனி கார் ஆக இருக்கவேண்டும்?  எந்த கலரில் இருக்க வேண்டும்?  என்பதை மிகவும் துல்லியமாக மனதில் பதித்து அதை காட்சியாக பாருங்கள். தினமும் உங்கள் வேலைக்காக அந்த காரில் பயணம் செய்வதைப் போன்றும் உங்கள் குடும்பத்தினரோடு, நண்பர்களோடு பயணிப்பது போன்று கற்பனை தோற்றத்தில் தெளிவாகப் பாருங்கள்.

இத்தகைய காட்சியை என்றோ ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பார்ப்பது அல்ல. தொடர்ந்து பல நாட்கள் இதை தொடர்ந்து  பார்த்து வாருங்கள். வெகு விரைவில் நீங்கள் விரும்பிய கார் உங்களிடம் இருக்கும். இதுதான் உங்கள் கற்பனை சக்தியை பயன்படுத்தி உங்கள் ஆழ்மனதை இயக்கி விரும்பியதை அடையும் கலையாகும்.

ADVERTISEMENT

இந்த மனக் காட்சியை பார்த்து முடித்தபின் அன்றாட வாழ்க்கையில் அன்றாட பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் போது இவற்றை குறித்து எதுவும் சிந்திக்க வேண்டாம். காரணம் அந்த தியான நிலையில் அந்த கருத்துக்களை ஏற்கனவே உங்கள் உள் மனதிற்கு கொடுத்தாயிற்று. மற்ற நேரங்களில் அதைப் பற்றி சிந்தித்தோம் என்றால் உங்கள் ஆழ்மனது குழம்பி விடும்.

ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால் நீங்கள் மறுபடி அதை நினைத்துப் பார்க்கும்போது நான் கற்பனையில் கண்ட காட்சி சரி இல்லையோ என்று ஒருவேளை உங்களுக்குள் தோன்றக் கூடும். இந்தச் செய்தியும் உங்கள் ஆழ்மனதை எட்டும்போது ஆள் மனமானது குழப்பத்திற்கு உள்ளாகும்.  அதுபோல மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மனக் காட்சியை மற்றவர்களுக்கு தீங்கு இழைக்கக் கூடிய வகையில் பார்க்க வேண்டாம்.

காரணம், பிறருக்கு தீங்கு வருவித்து விட்டு நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. நாம் இந்த பிரபஞ்சத்திற்கு எதைக் கொடுக்கிறோமோ அதை பல மடங்காகத் திருப்பித் தருவதே பிரபஞ்சத்தின் வழக்கம். எனவே பிறருக்கு நீங்கள் ஒரு தீமை நினைத்தால் அது 10 தீமையாக உங்கள் முன் வந்து விழும்.

எனவே முடிந்தவரை அடுத்தவர்களுக்கு நன்மையை நினையுங்கள். மாறாக  நீங்கள் அவர்களுக்கு ஒரு நன்மையை நினைத்தால் பிரபஞ்சம் உங்களுக்கு 10 நன்மையை கொண்டு சேர்த்து தரும். நலத்தை நினைப்போம். வளமுடன் வாழ்வோம்.வாழ்க வளமுடன்.

எமது அடுத்த பதிவை படிக்க:ஆழ்மனதின் அபார சக்திகள்

ADVERTISEMENT

3 comments

  1. நாம் இந்த உலகில் விரும்புவதை எவ்வாறு அடைவது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறக் கூடிய அருமையான ஒரு பதிவு

Leave a Reply