நம்பிக்கையின் ஆற்றல்கள்

எல்லா அறிவையும் எல்லோருக்கும் சமமாக கொடுத்திருக்கின்றது இயற்கை அல்லது இறைவன். அதில் ஒரு சிலர் மட்டும் வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்று, மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி செல்பவர்களுக்கு சொந்தக் காரர்களாக மாறி வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கின்றார்கள். ஆனால் மற்றவர்களோ வாழ்க்கை பாதையில் தடுமாறி கீழே விழுந்து அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். நம்பிக்கையின் ஆற்றல்கள் தான் இவற்றை சரி செய்யும்.

நம்பிக்கையின் அதிதீவிர சக்தி

இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்று சொன்னால்  துளியளவும் நம்பிக்கையின்மை தான் என உறுதியாகச் சொல்லலாம். இந்த நம்பிக்கை என்கிற ஆற்றல் நீங்கள்  எங்கே செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்கு உங்களைக் கொண்டு சேர்க்கும் பலம் இதற்கு உண்டு.

வாழ்கை சிறக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் வாழ்வில் உயரத்தை தொடவைக்கும். இதற்கு மாறாக எதிர்மறையாக சிந்தித்தால் எல்லாவற்றையும் இழக்கவைத்து தெருக்கோடிக்கு கொண்டு சேர்த்துவிடும்.  சரி பரவாயில்லை வாழ்க்கையில் வீழ்ந்தே கிடப்பவரா நீங்ககள்? தொடர் தோல்விகள்தான்  உங்களை இருகை விரித்து வரவேற்கின்றதா?

கவலையை விடுங்கள். நம்பிக்கை எனும் ஆயுதத்தை கையில் எடுங்கள். இந்த பதிவின் வழியாக நம்பிக்கையை உருவாக்கி, இலக்குகளை கருவாக்கி, வசந்தங்களை பெற்றெடுக்க தயாராவோம். வாழ்வில் ஒருவர் முன்னேறி இருக்கிறார் என்றால் அவருக்கு நிச்சயம் தனது வாழ்வில் தன்னம்பிக்கை அதிகமாக இருந்திருக்கும்.

அந்த உறுதியான நம்பிக்கையை நாமும் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். வெற்றிக்கு முதல் படி உங்கள் விதியை மாற்ற உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நம்பிக்கை என்பது உங்கள் எண்ணங்களை பலப்படுத்துவது தான்.

ADVERTISEMENT

எண்ணங்கள் பல படுகின்ற போது நம்பிக்கை கூடிவரும். அந்த நம்பிக்கையே அலைக்கற்றைகள் ஆக பிரபஞ்சப் பேராற்றலுடன் கலந்து உங்களுக்கு வெற்றியை ஈர்த்து வருகின்றது. ஆகவே மன உறுதி இல்லாமல் எதையும் சாதித்து விட முடியாது இந்த உலகில்.

நம்பிக்கையில் இரண்டு வகைகள் இருக்கின்றது. ஒன்று உங்கள் மேல் உள்ள நம்பிக்கை. இரண்டாவது வகை கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் மிகுந்த சக்திகளின் பெரும் அறிவாற்றல் ஆகும். இந்த இரண்டு விதமான ஆற்றல்களின் சக்திகளை நாம் இப்போது பார்க்கலாம்.

உங்கள் மேல் உள்ள நம்பிக்கை

இதற்கு உண்மையாகவே நடந்த ஒரு உதாரணத்தை பார்க்கலாம். ஒருமுறை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தார்கள். அதில் 8 வயது சிறுமி ஒருவரும் இருந்தாள். விமானப் பயணம் கடல் வழியாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

திடீரென விமான ஓட்டியிடமிருந்து ஒரு அறிவிப்பு வருகின்றது. அந்த அறிவிப்பு என்னவென்றால், விமானத்தின் என்ஜின் பழுது அடைந்து விட்டது. விமானத்தை பத்திரமாக தரை இறக்க நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டேன்.  முயற்சி இதுவரைக்கும் எந்த பலனையும் தரவில்லை.

எனவே விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாவது உறுதி. எனவே எல்லோரும் பாராசூட்டுடன் வெளியில் குதிக்க தயார் ஆகுங்கள். இவ்வாறு விமானம் ஓட்டுபவர்  அறிவிப்பை கொடுத்தவுடன் எல்லோர் மத்தியிலும் கடும் பதட்டமும், பயமும்  நிலவியது. செய்வதறியாது திகைத்தவர்கள் தங்களை பாதுகாத்து தரை இறங்குமாறு அவரவர் தெய்வங்களை வேண்டத் துவங்கினர்.

ADVERTISEMENT

காரணம் விமான ஓட்டி அறிவிப்பை கொடுத்தாலும் முயற்சியை இதுவரைக்கும் கை விடவில்லை. விமானம் கீழே இறங்குவதும் மேலே ஏறுவதும் ஆக நிலைதடுமாறி பறந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு எல்லோரும் உயிருக்கு பயந்து அவரவர் கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கையிலே, அதில் பயணம் செய்த 8 வயது சிறுமி மட்டும் எதைக் குறித்தும் கவலை இல்லாதவளாய் துள்ளி குதித்து ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள்.

எமது முந்தய பதிவை வாசிக்க:உன்னை நீ அறிவாய்

குழந்தையின் மகிழ்ச்சிக்கு கரணம்

இவள் குழந்தையாக இருந்தாலும் அங்கிருந்தவர்களுக்கு இவள் மேல் கோபம் தான் எழுந்தது. தற்போது விமான ஓட்டியின் கடுமையான முயற்சியினால் எஞ்சின் ஓரளவு சீரடைந்து விமானம் சரியாக ஓடத்துவங்கியது. பக்கத்து நாட்டில் இருந்த விமான நிலையத்தில் அனுமதி பெற்று விமானம் அவசரம் அவசரமாக தரை இறங்கியது.

விமானம் தரை இறங்கியதும் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் எல்லோரும் அந்த சிறுமியை அழைத்து விமானம் விபத்தை சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் எல்லோரும் நாங்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தோம்.

நீ மட்டும் ஏன் அனைத்தையும்  உதாசீனப் படுத்திவிட்டு அப்படியே விளையாடிக் கொண்டிருந்தாய்?   என கோபமாக கேட்டனர். அப்போது அந்த சிறுமி பதில் அளித்த விதம் சூழ்ந்திருந்த அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.

ADVERTISEMENT

பதில்  என்னவென்றால், அந்த விமானத்தை ஓட்டிச் சென்றது என்னுடைய அப்பா. அவர் என்னை எந்த விபத்திற்கும் உட்படுத்த மாட்டார் என எனக்கு நன்றாக தெரியும். நிச்சயமாக பத்திரமாக தரை இறங்குவார்  என்று எனக்கு தெரியும். எனவேதான் நான் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தேன் என்றாள்.

பாருங்கள் குழந்தையின் நம்பிக்கை எவ்வளவு உறுதியானது என்று.  இதுதான்  உச்சக்கட் நம்பிக்கை. வாழ்க்கையில் எவ்வளவு நெருக்கடிகள், தோல்விகள், வீழ்ச்சிகள்  வந்தாலும், அந்த நேரத்திலும் நிலைகுலையாமல் நான் சேர வேண்டிய இடத்தில் நிச்சயம் சென்று சேருவேன் என்கின்ற ஆழமான உறுதியான நம்பிக்கையோடு இருப்பதுதான் வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டுவரும்.

கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கை

நான் வாழ்வில் எதை நினைத்தாலும் அதை என்னால் நிச்சயம் அடைய முடியும் என்கின்ற உறுதியான எண்ணம் தான் இந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கையே நீங்கள் வளர்த்துக் கொள்ளத் தவறினால் உங்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருவது மிகவும் சிரமம். பலருக்கும் இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தெரியவில்லை. அதற்கான ஒரு அற்புதமான திட்டத்தை பார்க்கலாம்.

நம்பிக்கையை உருவாக்க ஆல்பா நிலை

நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த தொந்தரவும் இல்லாத ஒரு தனி அறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அறையின் ஜன்னல்களும் கதவுகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மின்விசிறி அல்லது குளிர்சாதன வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த அறையில் சிறிதளவு வெளிச்சம் மட்டும் தரக்கூடிய 0 வாட்ஸ் பல்ப்பை பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படி வசதியாக இருக்க முடியுமோ அப்படி தரையில் விரிப்பை போட்டு அமர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

நீங்கள் இருக்கும் இடத்தில் வசதியாக இருந்து கொண்டு அந்த 0 வாட்ஸ் பல்ப்பை உற்று நோக்குங்கள். கழுத்துப் பகுதி வலிக்காத அளவுக்கு நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியை படுக்கையில் படுத்தவாறு செய்யலாம். வேறு எந்த எண்ணமும் இல்லாமல் அந்த விளக்கையே உற்றுப் பார்த்தவாறு உங்களுடைய உடல் உறுப்புக்களை தளர்த்திக் கொள்ளுங்கள்.

உடல் உறுப்புகளை தளர்த்துதல்

அதாவது எனது ஒவ்வொரு உறுப்புகளும் தளர்ச்சியாக அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். கை மற்றும் கால்கள் இப்போது தளர்கின்றன என்கிற என்று உங்கள் மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

இப்போது உடலின் மற்ற எல்லா உறுப்புகளும் அமைதியாக இருப்பதை கவனிக்கவும். தொடர்ந்து கால் பெருவிரல் தொடங்கி முழங்கால் முழங்கால்கள் வரை தளர்வடைந்து விட்டது என மனத்தால் சொல்லிக் கொள்ளுங்கள்.

அதே போன்று மற்ற உறுப்புகளான  தொடை பகுதி , இடுப்பு பகுதி, வயிறு  மற்றும் மார்பு, கைவிரல் மணிக்கட்டு, முழங்கை, தோள் பட்டை, கழுத்து, தாடை, கண்கள், நாசி, தலை  என ஒவ்வொரு பகுதியாக மனதில் எண்ணி, உச்சந்தலை வரை   வரை உணரவும்.

இப்போது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடல் அனைத்தும் தளர்வாக செயல்படுகின்றது. இந்த சூழ்நிலையில் பூரணமான அமைதியை உங்களால் உணர முடியும். நீங்கள் காற்றில் மிதப்பது போன்ற உணர்வு உருவாகும். இப்போது சிலர்  தலை பாரமாக இருப்பதை உணர்வீர்கள்.

ADVERTISEMENT

உடம்பு மற்றும் நரம்பு மண்டலங்கள் அமைதியாக இருப்பதை உங்களால் உணர முடியும். மனதைப் பொறுத்த வரையில் இறுக்கங்கள் மாறி ஒரு சுகமான மன நிலையை உணர்வீர்கள்.  இப்போது உங்கள் கண்களை மெதுவாக மூடி இந்த இன்பமான அனுபவத்தை சுவைத்துப் பாருங்கள்.

நீங்கள் எதை எல்லாம் அடைய வேண்டும் என விரும்புகின்றீர்களோ, அதை எல்லாம் தெளிவாக ஒரு திரைப்படம் போன்று காட்சியாய் பாருங்கள். இப்போது  இந்த அனுபவம் போதும் எனத் தோன்றும் போது மெதுவாக கண்களை திறந்து அந்த ஒளி விளக்கை பாருங்கள்.

உள்ளத்தின் ஆழத்துக்கு செலுத்தல்

இப்போது கண் இமைகள் லேசாக வலிப்பது போன்று தோன்றும். சற்று நேரம் தொடர்ந்து விளக்கை கண்ணை திறந்து வைத்து கவனியுங்கள். இனி ஒன்று முதல் பத்து வரை உங்கள் மனதால்  எண்ண வேண்டும்.  நிதானமாக ஓன்று, இரண்டு, மூன்று  என என்ணும் போது கண்கள் சோர்வாக இருக்கும் என சொல்லுங்கள்.

நான்கு, ஐந்து, ஆறு  என எண்ணும் போது கண்களை திறப்பதற்கு சிரமமாக இருப்பதை உணருங்கள். ஏழு, எட்டு, ஒன்பது  என்று சொன்னதும் கண்கள் மூடிக் கொள்கின்றது   என சொல்லிக் கொள்ளுங்கள். பத்து என்று சொன்னதும் இனிமேல் சிறிது நேரத்திற்கு கண்ணை திறக்கவே முடியாது என்று பலமுறை உள்ளுக்குள்   சொல்லிக் கொள்ளுங்கள்.

இது தான் அதி உன்னதமான நிலை. எல்லா வெளிப்புற சூழ்நிலைகளும் மறைந்து ஒரு பேரின்ப நிலையினை இப்போது அனுபவிக்கின்றீர்கள். அதாவது இப்போது நீங்கள் சுய தூக்க நிலையில் இருக்கின்றீர்கள்.  இப்படி தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி எடுக்கும்போது நீங்கள் எப்போது நினைத்தாலும் விரைவில் சுய தூக்க நிலைக்கு வரமுடியும்.

ADVERTISEMENT

இப்போது எந்த நினைவுகளும் கவலைகளும் இருக்காது. அதாவது எண்ணங்கள் அற்ற ஒரு நிலையில் இருப்பீர்கள். இந்த அதி உன்னதமான நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்படி எல்லாம் இருக்க விரும்புகிறீர்கள், எதை எல்லாம் அனுபவிக்க விரும்புகின்றீர்கள்,என கற்பனை செய்யுங்கள் .

எவ்வளவு பணம் உங்களிடத்தில் இருக்க வேண்டும்,  உங்கள் வீடு எப்படி இருக்க வேண்டும், உங்களுடைய கார் எப்படி இருக்க வேண்டும்,என தெளிவாக காட்சிப் படுத்தி பாருங்கள். அது போல உங்களுடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், உங்களுடைய சமூக அந்தஸ்து எப்படி இருக்க வேண்டும் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அதையெல்லாம் இந்த நேரத்தில் உணர்ந்து பாருங்கள்.

உணர்தல் என்பது மேற்கண்ட விருப்பங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறினால் எவ்வாறு உணர்வீர்கள் அந்த அளவு ரசித்து உணருங்கள். அதாவது அந்த மனத்திரையில் நீங்கள் ஒரு நடிகனாக அல்லது நடிகையாக  மாறுங்கள்.

பேரின்ப நிலையை உணர்தல்

இந்த நிலையில் நீங்கள் உறுதியாக இருந்தால் உங்களது எதிர்மறை எண்ணங்கள் இடம் தெரியாமல்  போகும். இப்போது உங்களை நீங்கள் ஒரு புதிய மனிதராக உணர்வீர்கள். உங்களிடம் மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். உங்களை நீங்கள் ஒரு பணக் காரனாக உணர்வீர்கள். எல்லா செல்வ வளங்களும் உங்களை சூழ்ந்துள்ளது போன்ற உணர்வு இருக்கும்.

இதைத்தான் ஆல்பா நிலை என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது நீங்கள் ஆல்பா தியான  நிலையில் இருக்கின்றீர்கள். இவ்வாறு தினமும் உங்களால் பயிற்சி செய்ய முடியும் என்றால் நீங்கள் நினைத்த எல்லா விருப்பங்களையும் விரைவில் அடைந்து விடுவீர்கள். எல்லா வளங்களையும் பெற்று மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றேன்.

ADVERTISEMENT

எமது அடுத்த பதிவை படிக்க: நாம் விரும்பியதை அடைவது எப்படி?

2 comments

  1. நம் மனதை வலிமைப்படுத்தி கொள்ளவும் நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளவும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் இந்தப் பதிவு மிக பயனுள்ளதாக உள்ளது

Leave a Reply