நினைத்ததை விரைவில் அடைய வேண்டுமா?

இது என்ன கேள்வி? யாராவது நினைத்ததை அடைய வேண்டாம் என நினைப்பார்களா? என உங்கள் மனம் ஆதங்கப்படுவதை என்னால் உணர முடிகிறது. நாம் அவ்வாறு நினைத்த விஷயங்கள் ஏன் நம்மால் அடைய முடியவில்லை என்றால், நமது ஆழ்மனதை சரியாக பயன்படுத்த தெரியாதுதான் முக்கிய கரணம். அந்த ஆழ்மனதை எப்படி சரியாக பயன்படுத்தி நாம் விரும்பிய விஷயத்தை சரியாக அடைவது என்பதை விரிவாக காண்போம்.

இலக்கினை உருவாக்குங்கள்

முதலில் இந்நிலைகள்  மாறி நமது வாழ்வு சீராக, இனிமையாக, மாறவேண்டும் எனில் ஒரு இலட்சியத்தை   உருவாக்க வேண்டும். உதாரணமாக உங்கள் ஊரிலிருந்து சென்னை மாநகருக்குச் செல்ல வேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள். இப்போது என்ன செய்வீர்கள்? பேருந்து நிலையம் சென்று ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்வீர்களா?  இல்லை சென்னை செல்லுகின்ற பேருந்தில் ஏறி பயணத்தை தொடர்வீர்களா?  நிச்சயம்  சென்னை செல்லுகின்ற  பேருந்தை தேடிப்பிடித்துத்தான் பயணத்தை தொடங்குவோம். ஆனால் வாழ்க்கையில் மட்டும் ஏனோ இதுபோன்ற இலக்குகளை நிர்ணயிக்க மறந்துவிடுகிறோம் .

எவ்வாறு சென்னை செல்லவேண்டும் என்ற  இலக்கை அடைய, சென்னை செல்லும் பேருந்தில் சென்றால் எளிதில் அடைய முடிவதைபோல, நமது வாழ்வில் கோடிகளை சம்பாதிக்கவேண்டும், வாழ்வை இனிமையாக அமைத்து கொள்ளவேண்டும் என இலக்கை தீர்மானித்தால், அந்த  இலக்கை நோக்கிச்செல்லுகின்ற ஆழ்மனம் என்ற வண்டியைப்பிடித்து பயணம் செய்தாகவேண்டும்.  பேருந்தில் ஏறி  உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துவிட்டு, நடத்துனரிடம் உரியபணத்தை செலுத்தி பயணச்சீட்டை பெற்றுவிட்டு, அப்படியே இருந்துவிடுங்கள்.

ஓட்டுநர் சரியான நேரத்தில்,   சரியான இடத்தில் உங்களை கொண்டு சேர்த்துவிடுவார். இதை விட்டுவிட்டு,  ஓட்டுநர் எப்படி உறங்காமல் வண்டியை ஓடுவாரோ ? வண்டி இடையில் பழுதாகி நின்றுவிட்டால்…… இப்படி எல்லாம் சிந்திக்காதீர்கள். அதுபோல நீங்கள் செல்லவேண்டிய இலக்கை   – அது கடனிலிருந்து  விடுதலை பெறுவதாய் இருக்கலாம், அல்லது ஒளிமயமான எதிர்காலமாக இருக்கலாம், குறிப்பிட்ட காலவரம்புக்குள் கோடிஸ்வரன்  ஆவதாக கூடஇருக்கலாம்.

ADVERTISEMENT

இலக்கு எப்படிப்பட்டதாகவும்   இருக்கலாம். உங்கள் ஆழ்மனம் என்ற வண்டியில் ஏறி அமர்ந்துவிடுங்கள். திட்டமிடல் என்ற    நடத்துனரிடம், கடின உழைப்பு , விடாமுயற்சி போன்ற பயணச்சீட்டை பெற்றுவிட்டு  நிம்மதியாக உங்கள் அன்றாடப் பணிகளை தொடருங்கள்.  நீங்கள் நினைத்த அனைத்தையும் ஒருநாளில் உங்களிடம் கொண்டுசேர்த்துவிடும்.

அது எவ்வளவு வேகமாக உங்களிடம் கொண்டு சேர்க்கும் என்பது, உங்களது சிந்தனைகளின் ஆழத்தை பொறுத்தது. இதை விடுத்தது,  உங்கள் ஆழ்மனம், கடன் இப்படி தீரும்? எனது சூழ்நிலை இப்படி இருக்கும்போது    நான் எப்படி கோடிஸ்வரன் ஆவேன்? இப்படி எல்லாம் சிந்திக்க வேண்டாம். அப்படி எல்லாம் எதிர்மறையாக சிந்தித்தால், உங்கள் ஆழ்மனதிற்கு பிரச்சனைகளை தீர்க்கவேண்டாம் என சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். அதற்கு நீங்களே தடை போடுகின்றீர்கள். எனவே  தெளிவான இலக்குகளை உருவாக்கி பயணியுங்கள்.

தெளிவாகத் திட்டமிடுங்கள்

இலக்குகளை நிர்ணயித்துவிட்டால் மட்டும் போதாது. அந்த இலக்கை அடைய  எந்த வழிமுறைகளை கையாளவேண்டும் எனத் திட்டமிடவேண்டும். உதாரணமாக சென்னை செல்ல நடந்து செல்வதா? பேருந்தில் பயணம் செய்வதா? ரயில் வண்டியில்பயணம் செய்வதா?  விமானத்தில் பயணம் செய்வதா?  இப்படிப்பட்ட  தெளிவான முடிவுகளை எடுத்துவிட்டு பயணங்களை  மேற்கொள்வது போல, நமது இலக்குகளையும் அடைவது தொடர்பாக தெளிவாக திட்டமிடவேண்டும். தேர்ந்தெடுக்கின்ற விதத்தைப்பொறுத்து  நமது இலக்கு வெகு விரைவில் நிறைவேறுவதும், அல்லது தாமதம் ஆகுவதும் நிகழும்.

எமது முந்தய பதிவை வாசிக்க: நினைத்ததை விரைவில் அடைய வேண்டுமா?

ADVERTISEMENT

திட்டமிடல் உதாரணம்

சொத்து வாங்கி, அதில் அழகிய, மனதுக்கு பிடித்த   முறையில் ஒரு வீடு கட்டவேண்டும் என்பது நமது இலக்கு என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் அந்த சொத்தை எந்த பகுதியில் வாங்குவது? எதனை ரூபாய் மதிப்பிலான   சொத்தை வாங்குவது? அதில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள எவ்வளவு செலவு ஆகும்?  எந்த கால அளவிற்குள் பணியை முடித்து இல்லத்தில் குடியேறவேண்டும், போன்றத் திட்டங்களை தெளிவாக முடிவு செய்யவேண்டும்.

அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்றெல்லாம்  சிந்திக்க வேண்டாம். காரணம், நமது ஆழ்மனதுக்குத்தான் இவை வேண்டுமென்று தெளிவாக கட்டளை பிறப்பித்துள்ளோமே!   ஒருமுறை தெளிவாக , உறுதியாக முடிவு செய்த்துவிட்டால் , உங்கள் ஆழ்மனதை நம்பிவிட்டால் போதும். ஆழ்மனமானது மிகச்சிறப்பாக செய்ல்பட்டு சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக்கி கொடுத்துவிடும்.

உங்கள் இலக்கு மிக எளிதாக நிறைவேறிவிடும். உதாரணமாக, வீட்டில் ஒரு திருமண நிகழ்வை நிறைவேற்றவேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள். கையில் பணம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு  தைரியத்தில், நிச்சயித்த திருமணத்தை நடத்தியே  தீருவோம்  என உறுதியாக முடிவெடுத்து, தேதியையும் முடிவு  செய்து  விடுகிறோம். பணம் தற்போது கையில்  இல்லாவிட்டாலும், உரிய நேரத்தில் நமது கைக்கு   வந்து சேர்ந்து நிகழ்வும் சரியாக நடந்து முடிந்து விடுகிறது. இதே போன்ற அனுபவங்கள் சிலநேரம் நாமும் பெற்றிருப்போம். இதே அனுபவம்  நமது வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்தும்.

அதிகாலையில் எழும்புங்கள்

நமது வாழ்க்கையில்    நாம் நினைக்கும் அனைத்தும் நிறைவேறவேண்டுமெனில், முதலில் நாம் அதிகாலையில் எழும்பிப்பழகவேண்டும். அதிகாலை 3.45 மணிக்கெல்லாம் படுக்கையில் இருந்து எழும்பிவிடவேண்டும். நான் இந்த பதிவை  எழுதும்போதும் தெளிவான சிந்தனைத் துளிகளை பிரபஞ்சம் எனக்கு அருளிய நேரம் அதிகாலை 4 மணி தான்.

ADVERTISEMENT

ஆக வாழ்கையில் வென்ற அனைவரையும் கேட்டுப்பாருங்கள், அது அரசியல்வாதிகளாக இருக்கலாம், அல்லது வணிகம் செய்து பிரபலமான கோடிஸ்வரர்களாக மாறிய மனிதர்களாக இருக்கலாம், யாராக இருந்தாலும்  அதிகாலை 4 மணிக்கு முன்பாக எழும்பி தனது கடமையைத் தொடங்கியவர்களே. காரணம், அதிகாலை நேரம் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கடந்து செல்கின்ற மிக, மிக அற்புதமான நேரம்.

பிரம்ம முகூர்த்த வேளை

தினமும் அந்த பிரம்ம முகூர்த்த வேளையில் எழும்பி சற்று அமைதியாக இருந்து நாம் எதை நினைக்கிறோமோ, அதை தொடர்ந்து 90 நாட்கள்  மிகவும் உறுதியாக நினைத்தோம் எனில் நமது  வாழ்வில் அது கிடைத்தே விட்டது என்று அர்த்தம். அது நாம் விரும்புகின்ற ஒரு வேலை வாய்ப்பாக இருக்கலாம், செய்கின்ற தொழிலில் வெற்றி பெறுவதாக இருக்கலாம், கோடிகளை சம்பாதிப்பதாக இருக்கலாம், தானோ அல்லது தனக்கு வேண்டியவரோ   மிகக் கடுமையான நோயில் இருந்து விடுதலை பெறுவதாக இருக்கலாம், மனம் விரும்புகின்ற நபரை திருமணம் செய்து கொள்வதாகக் கூட இருக்கலாம்.

சுருங்கக் கூறின், நல்லதோ ,கெட்டதோ நீங்கள் நினைப்பது எதுவாகவும் இருக்கலாம். அது நிச்சயம் ஒரு நாள் நம்மிடம் வந்து சேரும்.”நீ எண்ணியது விண்மீனாக இருந்தாலும் அது உன்னிடம் வந்து சேரும்”, “அதிகாலையில் நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டே ஒதுங்கிக்கொள்ளும்”. இவை நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின் அனுபவ மொழிகள். அதிகாலை எழும்பி சும்மா ஏனோ தானோ என்று நினைத்தால் போதாது. அதற்கும் சில வழி முறைகள் இருக்கின்றது. அவற்றையும் தொடர்ந்துக் காண்போம்.

கோரிக்கையை ஆழ்மனதிடம் தெரியப்படுத்துங்கள்

நினைத்ததை அடைய முதல் வழி அதிகாலையில் எழும்பி அடைய வேண்டிய இலக்கை நினைக்க வேண்டும் என அறிந்துகொண்டோம். அடுத்தபடியாக நமது விருப்பத்தை, தெளிவான கோரிக்கையாக, (உணர்வு வழியாக) அந்த அதிகாலை நேரத்தில் ஆழ்மனதிடம் தொடர்ந்து தெரியப்படுத்த வேண்டும்.  உங்கள் ஆழ்மனது உங்களுக்கு எஜமான் அல்ல. மாறாக உங்களது நம்பிக்கைக்குரிய தலைசிறந்த வேலைக்காரன்.

ADVERTISEMENT

நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால் உங்களது வேலைக்காரனுக்கு வேலையை செய்ய எப்படி சொல்வீர்கள்? கட்டளை இடுவீர்களா? இல்லை கெஞ்சி கேட்ப்பீர்களா?  நிச்சயமாக கட்டளைதான் பிறப்பிப்பீர்கள். அந்த கட்டளை அன்பு கலந்ததாகவும் இருக்கலாம் அல்லது அதட்டல் நிறைந்ததாகவும்  இருக்கலாம். எப்படியோ, கட்டளைதான் தீர்வு. அதுபோல உங்கள் ஆழ்மனது என்ற வேலைக்காரனுக்கு கட்டளை கொடுப்பீர்களாயின் அது அந்த கட்டளையை நிச்சயம் நிறைவேற்றி தரும்.

அது நேர்மறையான கட்டளையானாலும்  சரி, எதிர்மறையான கட்டளையானாலும்  சரி, அதை   நிறைவேற்றிவிடும். காரணம் அதற்கு நல்லது எது? கெட்டது எது?  என பிரித்துப்பார்க்கத் தெரியாது. எனவே அதிகாலை 3.45  மணிக்கெல்லாம்   எழுந்து உங்களை புதுப்பித்துக்கொண்டு சரியாக 4  மணிக்கு துவங்கி குறைந்தது  20 முதல் 30  நிமிடம் வரை  நிம்தியான முறையில் தியான நிலையில் அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடையவேண்டிய இலக்குகளை கட்டளையாக கொடுக்கவேண்டும். பின்னர் நமது அனுதின அலுவலை தொடரலாம்.   இவ்வாறு 90 நாட்கள் தொடர்ந்து செய்தால் நினைத்ததை ஒரு நாள் நிச்சயம் அடையலாம்.

காட்சிப் படுத்தி பாருங்கள்

நாம் கட்டளையாக கொடுக்கும் நிகழ்வுகளை காட்சியாக அதாவது திரையில் ஒரு படம் ஓடுவதுபோல, நாம் நினைப்பதை   காட்சியாக பார்க்க இயலுமெனில் அதை விரைவாக அடைய முடியும். அதை தெளிவாக காட்சிப்படுத்தி பார்க்கவேண்டுமெனில் நமது மனதை தியான நிலைக்கு கொண்டுவந்தால் சற்று வசதியாக  இருக்கும்.  தியான நிலைக்கு உங்கள் மனதை கொண்டு வருவது எப்படி? முதலில் உங்கள் வீட்டில் உள்ள சாதாரண, தொந்தரவு இல்லாத ஒரு அறையை   தேர்ந்தெடுங்கள். மேலே சொன்னது போல அதிகாலை 4  மணிக்கு அந்த அறையின் தரையில் ஒரு விரிப்பின் மேல் அமரவேண்டும் . வசதியாக அமர்ந்தபின்  இரு கண்களையும் மூடிக்கொள்ளுங்கள். முதலில் உங்கள் உடலை தளரச் செய்யவேண்டும்.

உங்கள் உள்ளங் கால் முதல் உச்சந்தலை வரை ஒவ்வொரு பாகமாக தளர்வதாக மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக எனது உச்சம் தலை தளர்கிறது . என்னுடைய நெற்றி தளர்கிறது….  இவ்வாறு ஒவ்வொரு பாகமாக  தளர்கிறது என சொல்லும்போது அதை உணரவேண்டும். அடிக்கடி மூச்சை உள் இழுத்து வெளி விடவேண்டும். இறுதியில் உங்களது உடல் உங்களுக்கே மெல்லியதாய்  தோன்றும்.

ADVERTISEMENT

உங்கள் உடல் காற்றில் மிதப்பது போன்ற உணர்வு இருக்கும். இந்நேரம்தான்  ஆழ்மனம் உங்கள் கட்டுப்பாட்டில் வரும். (இந்த ஆல்பா தியானம் செய்வது தொடர்பாக பல்வேறு பதிவுகள் கிடைக்கின்றன. அதை  வாங்கிப்படித்து நீங்கள் பயன் பெறலாம்.) இதுவரை உங்கள் மனதின் பிடியில் இருந்த நீங்கள், தற்போது முதல்முறையாக உங்களது ஆழ்மனம் உங்களது கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.

உண்மையில் இந்த நேரம்தான்  மிகவும் உன்னதமான நேரம் . உறக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் இடைப்பட்ட நிலை . இந்த  தங்கமான நேரத்தில், உங்கள் ஆழ்மனதிற்கு சில கட்டளைகளை கொடுக்கலாம். உதாரணமாக , நான் அழகாக இருக்கிறேன் . நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்திலும் நான் வளர்ந்துகொண்டே  இருக்கிறேன் . பொருளாதார மறுமலர்ச்சி எனது வாழ்வில் நிகழ்ந்துவிட்டது. நான் நல்ல வசதி வாய்ப்புகளை பெற்றுவிட்டேன். நான் வெற்றியாளன். மனதுக்கு பிடித்த  எனக்கு சொந்தமான அழகிய இல்லத்தில் எனது குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக குடியிருக்கிறேன். எனது அழகிய வாகனத்தில் தினமும் பயணிக்கிறேன்.

இவ்வாறு  நேர்மறையாக, இல்லாத ஒவ்வொன்றையும் இருப்பதாக நினைத்து, அதை கற்பனையாக, தெளிவான மனக்காட்சியாக, தொடர்ந்து உறுதியாக பார்த்துவந்தால் அது நிச்சயமாக நிறைவேறிவிடும். உதாரணமாக நீங்கள் பொருளாதார சிக்கலில் இருப்பீர்கள்  என வைத்துக் கொள்ளுங்கள். அதை இந்த நேரத்தில் மறந்துவிடுங்கள். மாறாக, நீங்கள் வசதியாக இருப்பதாகவும், பண மழையில் நீங்கள் நனைவதாகவும், உயிரோட்டமான  கற்பனை காட்சியாக பாருங்கள். நீங்கள் கண்ட கனவெல்லாம்  நிச்சயம் நிறைவேறிவிடும். இன்னும் ஒரு பதிவில் சந்திபோம்.

எமது அடுத்த பதிவை படிக்க:ஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம்

One comment

Leave a Reply