வேலை இல்லா திண்டாட்டமும் தீர்வும்

வேலை இல்லா திண்டாட்டமும் தீர்வும் என்ற இந்த பதிவின் வழியாக வேலை இல்லா திண்டாட்டம் என்ற மாபெரும் சவாலை எப்படி எதிர்கொள்வது என்று பார்க்கலாம்.

வேலை இல்லா திண்டாட்டம் ஏன்?

இன்று நமது இந்திய தேசம் மட்டுமல்ல, பல உலக நாடுகளே சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை தான் வேலை இல்லா திண்டாட்டம். ஏன் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது? சிந்தித்து பார்த்தால் நம்மில் பலரும் அரசையே குறை சொல்லுவோம். ஆம் நம்மை ஆளும் அரசும் ஒரு காரணம் தான்.

இல்லை என சொல்லவில்லை. அதில் முக்கிய பங்கு வகிப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் தான். எப்படி என கேட்கின்றீர்களா? நான் பல படித்த அல்லது படிக்காத வேலை எதுவும் இல்லாத இளைஞர்களை சந்தித்து என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள் என கேட்டிருக்கின்றேன்.

அப்போது அதிகமான நபர்களும் தரும் பதில் என்னவென்றால் வேலை ஒன்றும் இல்லை என்பது தான். அதாவது நங்கள் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றோம் என சொல்வார்கள். அப்போது நான் சரி வேலை கிடைக்கும்வரை நான் சம்பாதித்துக் கொண்டிருக்கும்  நேரடி வர்த்தகத் துறையில் நீங்களும் சம்பாதிக்கலாம் என சொல்வேன்.

அதற்கு அவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ஐயோ சற்றும் நேரம் இல்லை. நான் மிகவும் பிசியாக இருக்கின்றேன். என்ன அப்படி வேலை என மறுபடி கேட்டால் பதில் இல்லை. இது போன்ற மன நிலைகள் தான் வேலை இல்லா திண்டாட்டங்களுக்கு காரணம். குறுக்கு வழியில் ஏதாவது சம்பாதிக்க முடியுமா, என யோசிக்கும் மனநிலைகள் சமூகத்தில் நிரம்பி காணப்படுகின்றது.

ADVERTISEMENT

இளைஞர்கள் முன் வரவேண்டும்

இன்றய நவீன காலகட்டத்தில் அலைப்பேசி போன்ற நவீன கண்டுபிடிப்புகள் நமது  இளம் சமூகத்தை சிந்திக்க விடாமல் முடக்கி வைத்துள்ளது. அதனால் உழைக்க வேண்டும், உயரவேண்டும் போன்ற எண்ணங்கள் மறைந்து சோம்பல்த் தனம் பல இளம் உள்ளங்களில் குடியேறி உள்ளது. தான் கற்ற  கல்விக்கு ஏற்ற வேலை கிடைத்தால் மட்டுமே செய்வேன் என்ற வறட்டு எண்ணம் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

இந்த தேவையற்ற எண்ணங்களில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக சிந்திக்கும் திறனை  இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அதற்கு நமது சிந்தனை திறனை சீரழிக்கும் நவீன கால கண்டுபிடிப்புகளை, அதன் பயன்பாடுகளை சற்று நாம் குறைக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, இந்த கண்டுபிடிப்புகள் பலரது  எதிர்காலத்தையும்  பலவீனப் படுத்துகின்றது.

இவ்வாறு வாழ்வை சீரழிக்கும் சூழ்நிலைகளை  நன்றாக உணர்ந்துகொண்டு, எதிர்காலம் வளமாய் அமைய உழைப்பதற்கு முன்வருவோம். சிந்தனை திறனை சீரழிக்கும் கலாச்சாரங்களை உதறித் தள்ளுவோம். நமது குடும்ப உறுப்பினர்கள் நிறைவாய், மகிழ்வாய்  வாழ நமது உண்மையான உழைப்பை மூலதனம் ஆக்குவோம். இந்திய தாய் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க நாமும் ஒரு காரணமாய் இருப்போம். இந்த அறச்செயலை செய்ய முன் வருவோம்.

சோம்பல் வேண்டாமே

வேலையினை உணர்ந்து செய்வதை விட, பிழைப்பை நடத்த கிடைத்த வேலையினை செய்யும் இளைஞர்கள் ஏராளம். வேலைக்கு போனால் ஊதியம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்திக்காகவே பலரும் வேலைக்குச்  செல்கின்றனர். இதனால் படைப்பாடல்கள் குறைந்து கொண்டு வருகின்றன. இளைஞர்களின் படைப்புத் திறன் அதிகரித்தால் தான் புதிய மாற்றங்கள் நிகழும்.

தனது சிந்தனை திறத்தால் புதிய மாற்றங்களை இந்த சமூகம் காணவேண்டும். சமீப காலமாக இளைஞர்களின் சோம்பல் கலந்த சிந்தனைத் திறன் இழப்பால் இந்த மானுட சமூகம் சந்தித்த இழப்புகள் ஏராளம். அதற்காக ஒட்டு மொத்த இளைஞர் சமூகமும் சிந்தனைத் திறன் அற்றவர்கள் என்பது அல்ல. நல்ல சிந்தனை  வளம் கொண்ட பல இளைஞர்களால் தான் இந்த உலகம் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் சந்தித்தது உண்மை.

ADVERTISEMENT

அண்மை காலத்தில் உலகமே சந்தித்த கொரோனா பெரும் தொற்றால்  உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியினை சந்தித்த காலகட்டத்தில் கூட , பல  இளைஞர்களின் புது முயற்சியால் தான் இந்த உலகம் ஓரளவு தலை நிமிர்ந்து. எந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் பல இளைஞர்களை சிந்திக்க விடாமல் முடக்கியதோ, அதே கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி தான் சில இளைஞர்கள் புது தொழில் வாய்ப்புகளை உருவாக்கி உலகை வாழவைத்துக் கொண்டு இருகின்றார்கள்.

எனவே இளைஞர்கள் அனைவரும் உங்களுக்கு சோம்பலை தருகின்ற அனைத்து செயல்களையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, சுறுசுறுப்புடன் இயங்கி, சமூகத்துக்கு நன்மை தருகின்ற புதிய தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்து கண்டுபிடித்தோ, அல்லது கண்டுபிடிப்பாளருக்கு உடன் நின்று உதவி செய்தோ, நல்ல மாற்றங்களை இந்த சமூகத்துக்கு கொடுத்தால், வேலை இல்லாத திண்டாட்டதை பெருமளவுக்கு குறைக்க முடியும். அதே நேரம் இந்தியாவின் வளர்ச்சிக்கு நீங்கள் ஒரு தூணாகவும் இருக்க முடியும்.

எமது முந்தய பதிவை வாசிக்க:கருவிலிருந்து கல்லறை வரை

இலக்கை உருவாக்குவோம்

வேலை இல்லாத நபர்கள் பாட்டியலில்  இருக்கும் நபரா நீங்கள்? வேலையும் கிடைக்கவில்லை! ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்தால் முதலீடு செய்ய கையில் பணமும் இல்லை என விரக்தியில் இருக்கும் நபரா நீங்கள்?  ஒன்றும் கவலை படவேண்டாம். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை மட்டும்  உங்களிடம் இருந்தால் போதும். பல கோடிகளை சம்பாதித்து கோடீஸ்வர வாழ்க்கை வாழும் வாய்ப்பு தாராளமாய் இருக்கின்றது.

ஆம், மேற் சொன்னபடி வாழ்வில் உயரத்தை அடைய வேண்டும் என்ற துடிப்பு இருந்தால் உங்களுக்கு வழி காட்ட நான் தயாராய் இருக்கின்றேன். இதற்கு கல்வி அறிவோ, எழுத்தறிவோ தேவை இல்லை. வாழ்வில் வெற்றி என்ற சிகரத்தை தொட வேண்டும் என்ற இலக்கு தெளிவாய் இருந்தால் போதும். அப்படி என்ன தொழில் வாய்ப்பு என நீங்கள் கேட்பது எனக்கு புரிகின்றது. அது வேறு ஒன்றும் நம்மால்  முடியாத தொழில் அல்ல.

ADVERTISEMENT

புதிய தொழில் துறை

நான் சொல்லும் தொழில் மனிதர்களை இணைத்து செய்யவேண்டிய தொழில். முதலீடு எதுவும் இல்லாமல், வாழ்க்கையில்  கடைக் கோடியில் இருந்த பல நபர்களை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கொண்டு வந்த மகத்தான தொழில். அந்த தொழில்தான் நேரடி வர்த்தக துறை.

இன்று நேரடி வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய மை லைப்ஸ்டைல் நிறுவனத்தை குறித்து தான் சொன்னேன். நான் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் என்னை இந்த நிறுவனத்தில் இணைத்துக் கொண்டு வெற்றி கனிகளை அனுபவித்துக் கொண்டு வாழ்கின்றேன்.

நீங்களும் வேலை இல்லா திண்டாட்டம் என சொல்லிக் கொண்டு, அரசுகளை குறை சொல்லாமல், உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் என்னோடு இணைந்து வெற்றிபெற விரும்பினால் கருது பெட்டியில் உங்கள் மொபைல் எண்ணுடன் தொடர்பு கொள்ளுங்கள். நான் உங்களை தொடர்பு கொண்டு உதவி செய்ய தயார்.

வெளிநாடு வாழ்கை எதற்கு?

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? ஏன் கை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்? என்ற அழகான வரிகளை நீங்களும் கேள்விப் படிருப்பீர்கள். ஆம் நாம் வாழுகின்ற இந்த அழகான பூமி அனைத்து வளங்களையும்  தன்னகத்தே கொண்டுள்ளது. அதை பயன்படுத்த நாம் அறிந்திருந்தால் எந்த வெளி நாடுகளிலும் சென்று அடிமை வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை.

வெளிநாட்டு வாழ்கையில் அப்படி என்னத்தான் இருக்கின்றது? வெளிநாட்டு மோகம் இன்று மட்டும் அல்ல, காலம் காலமாகவே மனித குலத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த மோகத்தை பயன்படுத்தி பல இளவல்கள் ஏமாற்றப்  பட்டுள்ளார்கள். இது இந்தியாவில் இருந்தும் அனேகர் ஏமாற்றப்  பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதே நேரம் யாரோ ஒருவரை நம்பி வெளிநாடுகளுக்கு சென்றவர்களில் பலர் உணவு,உறைவிடம் போன்ற அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டு வஞ்சிக்க பட்டுள்ளார்கள். வெகு சிலர் மட்டுமே பல நாடுகளில் சென்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். அப்படி பொருளாதார உயர்வை சந்தித்த நபர்களும் மகழ்ச்சியினை தொலைத்து தான் வாழ்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

காரணம் வெளிநாட்டில் சென்று  சம்பாதித்து, சொந்த நாட்டில் நிலம் வாங்கி, அதில் ஒரு இல்லம் அமைத்து தனது குடும்பத்தை நிறைவாய் வாழவைத்து அதில் இன்பம் காண்பவர்கள் தான் அதிகம். மற்றபடி தனது சுக வாழ்க்கையை தொலைத்து, பாலை வனங்களிலும், தெரு வீதிகளிலும், கடுமையான சூடு,

குளிர் போன்ற  கால நிலைகளில் அவதிப்பட்டு, தான் கட்டிய வீட்டையும், மனைவி மக்களையும் முக நூல் போன்ற தளங்கள் வழியாக பார்த்து திருப்தி அடைகின்றனர். நம்மை நமது நாட்டில் உள்ள வளங்களை உணர்ந்தால் இப்படி அவதிப்பட வேண்டிய தேவை இல்லை என்பது எனது கருத்து.

இந்திய கல்வி முறை மாறவேண்டும்

மேற்கண்ட அவலநிலைகள் மாற வேண்டும் எனில், நமது இளவல்கள் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும் கல்வி முறை அறிமுகப்படுத்தப் பட வேண்டும்.  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பர் நமது முன்னோர். ஆங்கிலேயருக்கு அடிமைகளாக நமது இந்தியர்கள் இருப்பதற்காகவே மெக்காலே பிரபு என்பவரால் கொண்டு வரப்பட்ட ஏட்டுக் கல்வி முறையையே  இந்திய அரசு இன்னும் கடைபிடித்து வருகின்றது.

நமது கல்வி முறை சுயமாக ஒருவர் சிந்தித்து சொந்த காலில் நிற்கும் முறையினை கற்று தரவில்லை என்பது இன்றைய வேலை இல்லாத திண்டாட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே படித்து அதை அப்படியே ஒப்பிக்கும் கல்வி நிலைகள் மாற்றம் பெற மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

ADVERTISEMENT

நமது இளைஞர்களை சிந்தித்து செய்ல்பட வைக்கக் கூடிய செயல் முறை கல்விகள் பரவல் ஆக்கப்  படவேண்டும். அதாவது தொழில் கல்வி முறைகள் சொல்லித்தரப் படவேண்டும். இன்றும் தொழிற்கல்வி முறை இல்லாமல் இல்லை. அதுவும் வெறும் எட்டுக் கல்வியாகவே வழங்கப் படுகின்றது.

உதாரணமாக வாகனம் பழுது பார்க்கும் கலை தொடர்பாக ஒரு பாடப்பிரிவு இருக்கின்றது என்றால், அதை அப்படி செய்யவேண்டும் அல்லது இப்படி செய்ய வேண்டும் என கற்றுக்கொடுப்பது அல்ல கல்வி. அல்லது அந்த மாணவனை ஒரு வாகனத்தின் முன் கொண்டு விட்டுக்கொண்டு அங்கும் இங்குமாக நுனிப்புல் மேய்வது போன்று கடமைக்கு சொல்லி தருவது அல்ல சரியான கல்வி.

மாறாக முறையான கல்வியை கொடுத்துவிட்டு ஏதாவது வாகனம் பழுது நீக்கும் நிலையத்தில் கொண்டு விட்டு, ஒரு வாகனத்தை பிரித்து எடுத்து பின்னர் ஒன்றாக இணைக்கும் அளவுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இவ்வாறு எல்லா துறைகளிலும் பயிற்சியினை மேற்கொண்டால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் அதிரிக்கும். படைப்பு திறன் கூடும். புதிய பல வேலை வாய்ப்புகள் பெருகும்.

முடிவுரை

ஊதி அணைத்துவிட நீங்கள் ஒன்றும் மெழுகுத்ரிகள் அல்ல இளைஞர்களே ! அடிக்கும் மழைக்கும்  அணையாத சூரிய விளக்குகள் நீங்கள் ! சீறி வரும் புயலுக்கு தலைவணங்க நீங்கள் புற்கள் அல்ல! எதற்கும் அஞ்சாத இமயம் நீங்கள் ! எழுந்து வாருங்கள் வானத்தையே  வசப்படுத்துவோம்.

சூழ்நிலைகள் நமது கையை கட்டிப் போட்டாலும் அதை உடைத்தெறிந்து உலகை உருமாற்றும் உன்னத பணியினை முன்னெடுப்போம். பல தொழில் நிலையங்களை உருவாக்குவோம். வருங்கால வாரிசுகள் வளமுடன் வாழ வழி வகுப்போம்.

ADVERTISEMENT

எமது அடுத்த பதிவை படிக்க: மனித உறவுகளின் முக்கியத்துவம்

Leave a Reply