நகைச்சுவை கதையும் நல்வாழ்வுக்கான கருத்தும்

எந்த துறையிலும் வெற்றி பெற பயிற்சி என்பது மிக முக்கியம் . எனவே சரியான துறைசார்ந்த அறிவு இல்லாமல் ஒருவர் செய்ல்பட்டால் எப்படி மாட்டிக்கொள்வார் என்பதை விளக்கும் ஒரு அற்புதமான நகைச்சுவை கதை இதோ உங்களுக்காய்.

விமானத்தை சுத்தம் செய்யும் பணியாளர்

விமானத்தை சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் விமானியின் அறையை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது அவரது கண்ணில் ஒரு புத்தகம் தென்பட்டது. அதில் விமானத்தை பறக்கவைப்பது எப்படி?

பக்கம் – 1 என பதிவு செய்யப் பட்டிருந்தது. அந்த புத்தகத்தை கண்டதும் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காரணம் தனக்கும் விமானம் ஓட்ட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பல நாட்கள் அவர் ஏங்கியது உண்டு.

புத்தகத்தின் முதல் பக்கம்

வாய்ப்பை எண்ணி மகிழ்ந்த அந்த நபர் புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டினார். அதில் எஞ்சினை இயக்க சிகப்பு நிற பொத்தானை அழுத்தவும் என எழுதபட்டிருந்தது. அவரும் அவ்வாறே செய்தார். விமானத்தின் இயந்திரம் இயங்கத்தொடங்கியது.

ஆச்சரியத்தின் உச்சதித்திற்கே சென்ற அவர் புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திறந்தார். விமானத்தை இயக்க நீல நிற பொத்தானை அழுத்தவும் என எழுதப்பட்டிருந்தது. அவரும் அவ்வாறே செய்தார். விமானமும் அற்புதமான வேகத்தில் ஓட தொடங்கியது.

ADVERTISEMENT

எனவே மகிழ்ச்சியான மனநிலையில் மிதந்த அவர் புத்தகத்தின் மூன்றாவது பகுதியை திறந்தார். விமானத்தை பறக்க வைக்க பச்சை நிற பொத்தானை அழுத்தவும் என எழுதப்பட்டிருந்தது.  மகிழ்ச்சியால் அவரது மனம் துள்ளிட  பச்சை நிற   பொத்தானை அழுத்தினார். விமானமும் பறக்க தொடங்கியது. மிகவும் உற்சாகமாக இருந்தார்.

விமானத்தை தரை இறக்க விரும்பினார்

ஏறக்குறைய அரை மணி நேரம் வானில் வட்டமடித்த பிறகு அவரது மனம் திருப்தி ஆனது. எனவே அவர் விமானத்தை தரை இறக்க விரும்பினார். எனவே வானில் பறந்த படியே புத்தகத்தின் நான்காவது பக்கத்தை புரட்டினார்.

நான்காம் பக்கத்தில் விமானத்தை எவ்வாறு தரை இறக்குவது என்பதை அறிய அருகில் உள்ள புத்தக கடையில் இந்த புத்தகத்தின் தொகுதி இரண்டை வாங்கி படிக்கவும் என எழுதப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க:வெற்றிக்குத் தேவை இலட்சியமே

நன்றாக சிரித்திருப்பீர்கள்

ஆம் அன்பர்களே, இப்பொது அவரின் நிலையினை நினைத்து நீங்கள் நன்றாக சிரித்திருப்பீர்கள். இது சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் கூட.  இந்த கதை வழியாக நாம் என்ன உணர்ந்துகொண்டோம்? அந்த விமானத்தை இயக்கியவரின் நிலை என்னவாய் இருந்திருக்கும்?

ADVERTISEMENT

இந்த கதை முழுக்க முழுக்க ஒரு கற்பனை தான்.இருந்தாலும் இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. எந்த செயலை நாம் செய்தாலும் முழுமையான தகவலை தெரிந்துகொண்டு, உரிய பயிற்சியை மேற்கொண்டு செய்வது மிகவும் இன்றியமையாதது.

ஒரு தொழிலாளாக இருக்கலாம் அல்லது கல்வி,கலைகள் போன்றவற்றை  கற்பதாக கூட  இருக்கலாம், எதுவாக இருந்தாலும் முழுமையாக தெரிந்துகொண்டு செய்வது தான் வெற்றியை தரும்.

ஒரு புதிய துறையில் கால் வைக்கும்போது எதை குறித்தும் கவலை படாமல், அந்த துறையில்  வேலையை செய்யும் நபரையும்  மதிக்காமல்,  நான் படித்தவன். எனக்கு எல்லாமே தெரியும். யாருடை உதவியும் எனக்கு தேவை இல்லை,

போன்ற இறுமாப்பு எண்ணத்தோடு செயல்பட்டால் விமானத்தை தரையிறக்க முடியாத அந்த நபரை போல நாமும் வாழ்வை நடுவில் இழக்க நேரிடும். எனவே நமது கர்வத்தை விட்டுவிட்டு, முழுமையான கல்வியை பெற்றுக்கொண்டு செயல்பட்டால் எல்லா சூழ்நிலையிலும் வெற்றியே.

மேலும் வாசிக்க:உன்னை நீ அறிவாய்

ADVERTISEMENT

Leave a Reply