புனித தேவசகாயத்தின் பிறப்பும் இளமையும்

புனித தேவசகாயத்தின் பிறப்பும் இளமையும் என்ற இந்த பதிவின் வழியாக, கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற ஊரில் பிறந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதனால் பல துன்பங்களை அனுபவித்து இறந்து இன்று  புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள  புனித தேவசகாயத்தை  குறித்து பார்க்கலாம்.

நட்டால நாகயனின் பிறப்பு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சார்ந்த வாசுதேவன் நம்பூதிரி மற்றும்  நட்டாலத்தை சார்ந்த தேவகியம்மை தம்பதிகளுக்கு 1712 ம் வருடம் ஏப்ரல் மாதம் 23 ம் நாள் ஒரு மகன்  பிறந்தார். அவருக்கு பெற்றோர் நீலகண்ட பிள்ளை என பெயர் வைத்தனர்.

நீலகண்ட பிள்ளையின் இளமையும் கல்வியும்

நீலகண்டனிடம் சிறு வயதிலிருந்தே நல்ல அறிவும், ஆராயும் திறமையும் இருந்தது. அதே நேரம் நல்ல பகுத்தறிவும் இருந்தது.தனது ஒரே தங்கையான லெட்சுமி குட்டியோடு வீர விளையாட்டுகளில் ஈடுபடுவார்.திருவோண பண்டிகையின்போது ஆட்டுக்கிடவை அடக்கி அரசரிடமிருந்து பரிசும் பெற்றவர். நீலகண்டன் தமிழ்,மலையாளம் மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து வடமொழி, வேதாந்தம், இலக்கணம் போன்றவற்றை கற்று தமிழ் இலக்கிய ஞானமும் தத்துவ  ஞானமும் பெற்றார்.அது போல சிலம்படி, வர்மசாஸ்திரம், அம்பு எய்தல், களரி போன்ற போர்பயிற்சிகளிலும் புலமைபெற்று விளங்கினார். இவ்வளவு கலைகளை கற்று தெளிந்திருந்தும் மிகவும் எளிமையானவராகவே விளக்கினார். அதாவது சக மனிதர்களை மனதார நேசிப்பவராக விளங்கினார் நீலகண்டன்.

எமது முந்தய பதிவை வாசிக்க:புனித தேவசகாயம் முட்டிடிச்சான் பாறை

ADVERTISEMENT

நீலகண்டனின் திறமையை அறிதல்

நீலகண்டன் இளமையில் நன்கு கற்றவராகவும், திறமைசாலியாகவும் திகழ்ந்தார். திருவிதாம்கூர் மன்னார் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையில் நீலகண்டனின் தாய் மாமா வேலைபார்த்து வந்தார். இதனால் நீலகண்டனின் நேர்மையும், இரக்ககுணமும், திறமையும்  அரசனுக்கு தெரிந்திருந்தது.

எனவே தனது பத்மனாபபுரம் அரண்மனையை நவீனப்படுத்த விரும்பி அவரை நீலகண்ட சுவாமி கோவிலின் நிர்வாகி ஆக்கினார்.மேலும் தனது படையின் ஒரு பகுதிக்கு பொறுப்பாளராகவாகும் நியமனம் செய்தார். இவரது ராணுவ பணியில் தலைசிறந்து விளங்கியதால் மார்த்தாண்ட வர்மாவாலும், மற்ற அமைச்சர்களின் அன்புக்கும் உரியவராய் இருந்தார்.

நீலகண்டனின் திருமணம்

நீலகண்டனின் நற்குணங்களை அறிந்த அவரது சமூகத்தினர் பலரும் அவருக்கு பெண் கொடுக்க போட்டியிட்டனர். நாயர் சமூகத்தினருக்கு ஆடம்பர திருமணம் நடத்த அன்று அனுமதி இல்லாதிருந்தும் நீலகண்டனின் திருமணம் பார்கவி அம்மாளுடன் மிகவும் விமரிசையாகவே நடந்தது. தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்வை வாழ்ந்து வந்தனர்.

எமது முதல் பதிவை வாசிக்க:ஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம்

2 comments

 1. I absolutely love your site.. Great colords & theme.
  Didd youu make tnis site yourself? Please reply
  back ass I’m attempting to creat mmy own website and waqnt tto
  finhd out where you got ths freom oor jut what thhe theme is named.
  Kudos!

  1. Thanks for visiting and appreciating my website. A person helped me. I am giving his contact number here. You contact. Thanks .Contact number +916382062807

Leave a Reply

Your email address will not be published.