இயற்கையின் முக்கியத்துவம்

இயற்கை என்பது இறைவன் மனிதனுக்கு  கொடுத்திருக்கும் வரம் எனலாம். எனவே இயற்கையின் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆனால் நாமோ   இயற்கையை அழித்து பூமியின் சம நிலையினை நிலை குலைய செய்து கொண்டிருக்கின்றோம். இதனால் நாம் சந்திக்கும் பாதிப்புகள் எண்ணில் அடங்கா.

இயற்கை என்றால் என்ன?

மேற்கண்ட வினாவுக்கான பதில் என்ன வென்றால்  இந்த பூமிப் பந்தும், அதில் காண்கின்ற அனைத்துமே இயற்கை தான். குறிப்பாக இயற்கை மிக அருமையாக பல படைப்புகளை படைத்திருந்த போதிலும் அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பு தான் மனிதன். இயற்கை என்பதை எண்ணிப் பார்த்தால்  அதன் விந்தைகள் நம்மை மிகவும் ஆச்சிரியப் படவைக்கும். மிகப் பெரிய விந்தைகளில் ஓன்று தான் மனித உயிர்.

மனித உடலின் இயக்கம்

நம்மை நாம் என்றாவது ரசித்தது உண்டா ? இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்களை நீங்களே கொஞ்சம் உற்று பாருங்கள். உங்கள் கண்கள் அனைத்தையும் பார்ப்பதால் உங்களில் ஏற்படும் ஆனந்தத்தை உணருங்கள்.

உங்கள் மூக்கின் வழியாக சுவாசக் காற்று ஒவ்வொரு நொடியும் உள்ளுக்கும், வெளியிலுமாக சென்று வருகின்றதே. இதை நீங்களா செய்கின்றீர்கள் ?அது போல ஒவ்வொரு நாளும் உண்கின்றோம், குடிக்கின்றோம். அவை ஜீரணம் ஆகி சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றது.

கழிவுகள் மலமாகவும், சிறு நீரகவும் பிரிந்து செல்கின்றனவே ! அவற்றை நீங்களா செய்கின்றீர்கள்?  உங்கள் இதயம் ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டே இருக்கின்றதே! அதை நீங்களா செய்கின்றீர்கள் ? இல்லவே ! அவைகள் தானாகவே அல்லவா செயல்படுகின்றது? இது தான் இயற்கை என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

ADVERTISEMENT

கடலின் அமைப்பு

இயற்கை என்றால் என்ன? என்ற வினாவுக்கு இன்னொரு சிறந்த படைப்பு கடல். இந்த கடலை கொஞ்சம் நனைத்துப்  பார்த்தால் அது ஒரு பெரிய அதிசயம் எனலாம். பூமிப் பந்தின் நான்கில் மூன்று பங்கு கடலாக இருக்கின்றது.

மீதி இருக்கக் கூடிய ஒரு பங்கில் தான் மனிதன் உட்பட எல்லா உயிர்களும் வாழ்கின்றன. இந்த ஒரு பங்கு நில அமைப்பில் தான் சுமார் 800 கோடி மக்களும் மற்ற உயிரினங்களும் வாழ்கின்றன. ஒரு பங்கு நிலமே இவ்வளவு பெரிதென்றால் கடலின் பரப்பளவு எவ்வளவு என்ன சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது கற்பனைக்கே  எட்டாத அளவில் அல்லவா அது பரந்து விரிந்துக்  கிடக்கின்றது. புயல் மற்றும் மழை என எது வந்தாலும் கரையை கடக்காமல் கட்டுப் பட்டு கிடக்கின்றதே ! என்ன பேரதிசயம்? ஒரு வேளை கடல் கரையை கடந்தால் மனித வாழ்வு  என்ன ஆகும்?  இவற்றை சிந்தித்துப்  பார்த்தால் இயற்கை எவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது என்பது தெளிவாக புரியும்.

காடுகளும் மலைகளும்

இந்த பரந்து விரிந்த உலகில் மனித உயிர்களை தவிர பல்வேறு விதமான மரங்கள், செடி கொடிகள், விலங்குகள், பறவை இனங்கள், ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் என அனைத்தும்  வாழ மலைகளையும், காடுகளையும் மிக அழகாகவும், தத்ரூபமாகவும் படைத்திருக்கின்றது இயற்கை.

அது மட்டுமா ? மனிதன் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வழத் தேவையான பல்வேறு மூலிகைகள், மற்றும் பழங்கள், காய்கறி வைகைகள், விதைகள், கிழங்கு வர்க்கங்கள் என ஏராளமான படைப்புகள் விரிந்துக் கிடக்கின்றன. ஒவ்வொரு உயிருக்கும் மற்றொன்று உணவாக படைக்கப் பட்டுள்ளது மிகவும் சிறப்பு.

ADVERTISEMENT

உயிரினங்களின் தாகத்தை தணிக்க அழகான நீரோடைகள் சல சலவென பாய்ந்துச் சென்றாலும், சற்று பூமியின் ஆழத்திற்குச் சென்றால் அங்கும் தண்ணீர் ஓடைகள்.  எல்லா உயிர்களும் உயிர் வாழ அழகான காற்று, பூமியின் வெப்பத்தை தணிக்க மழை. அப்பப்பா என்னென்ன  ஆச்சரியங்கள்? இவற்றை எல்லாம் வாரி வழங்கிய பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்.

எமது முந்தய பதிவை வாசிக்க: இன்றைய சூழலில் மனித நேயம்

இயற்கையை அழித்தல்

இயற்கை இவ்வளவு பொக்கிஷங்களை அள்ளி வழங்கிய போதிலும், மனிதனைத் தவிர அனைத்து ஜீவ ராசிகளும் அதன் எல்கைக்கு உட்பட்டு தான் இயங்குகின்றன. ஆனால் மனிதன் மட்டும் எல்லாம் எனக்கு வேண்டும் என்ற பேராசை காரணமாக, இயற்கையின் எல்கையையும்  தாண்டி இயற்கை வளங்களை சீரழித்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

வளங்கள் அனைத்தும் பதுக்க அல்ல. மாறாக பகிர்வதற்கே  என்ற தத்துவம் மற்ற உயிர்களுக்கு புரிகின்றது. அதனால் அவைகள் தேவைக்கு பயன்படுத்தி விட்டு மற்றதை விட்டு விடுகின்றன. தனக்கென அல்லது தனது வாரிசுக்கென எதையும் அவைகள் சேர்ப்பது இல்லை. இந்த மனித உயிர்களுக்கும் இது போன்ற  எண்ணம் இருந்திருந்தால் இயற்கை இவ்வளவு அளிக்கப் பட்டிருக்காது.

வணிக நோக்கங்களுக்காக மரங்கள் வெட்டப் படுகின்றன. கனிம வளங்கள் சூறையாடப் படுகின்றன. பல்வேறு விதமான தொழிற் சாலைகள் பெருகி விட்டன. வாகனங்கள் பெருக்கத்தால் மாசுக்கள் அதிரித்து விட்டது. நாகரிக வளர்ச்சி என்ற பெயரால் கண்டுபிடிக்கப் பட்டுள்ள பல்வேறு மின் சாதன பொருட்களால் கதிர்வீச்சுகள் அதிகரித்து விட்டது. இன்னும் எண்ணிலடங்கா முறையில் இயற்கை அளிக்கப் பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

கதிர் வீச்சுகளினால் பாதிப்பு

மனிதனை தவிர மற்றெந்த உயிர்களும்  இயற்கையை சீரழிப்பது இல்லை. ஆனால்  பல்வேறு விதமான முறைகளில் இயற்கையை உரு குலைப்பது மனிதன் மட்டும் தான். மனிதன் என்றவுடன் சில  நபர்கள் நான்  இயற்கையை தொந்தரவு செய்யவில்லையே என  நினைக்கக் கூடும்.

அது தவறு. நாம் இணைந்து தான் இந்த நாசகர செயல்களை செய்கின்றோம்.காரணம்  நாம் நேரடியாக இந்த செயலை செய்யாவிட்டாலும், அனுதினம் நமது  செயல்பாடுகள் அதை நிரூபிக்கின்றன.

உதாரணமாக அலைபேசி என்ற உபகரணத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்தாமல், அதை ஒரு பொழுது போக்கு சாதனமாக அதிக நேரம் பயன்படுத்துவதால் கதிர் வீச்சுகள்  அதிகரிக்கப் படுகின்றது. இவ்வாறு இயற்கை அழிக்கப் படுவதால் பூமியின் சமநிலையில் தவறுத்தல்கள் நிகழுகின்றன.

இயற்கையின் கொந்தளிப்பு

உங்கள்  தலையில் 50 கிலோ எடை உடைய ஒரு சுமையை சுமப்பதாக கற்பனை செய்யுங்கள். அந்த சுமையை சரியான இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமெனில்  சுமையின் மையப்பகுதி  தலையில் சரியாக இருக்க வேண்டும். அதாவது  மற்ற இரண்டு பக்கங்களும் சரி சமமாக இருக்க வேண்டும்.மாறாக ஒரு புறம் சுமை அதிகரித்தால் நமது உடல் தடுமாறும் தானே !.

ஒரு சிறு உடலுக்கே இந்த தடுமாற்றம் என்றால், இந்த உலகின் நிலை எவ்வாறு இருக்கும் என சிந்தித்து பாருங்கள். உதாரணமாக மலைகள், மணல் மேடுகள், பள்ளங்கள் என ஏற்ற இறக்கங்களோடு சம நிலையோடு தான் இந்த உலகம் படைக்கப் பட்டிருந்தது. ஆனால் மனிதனோ பூமியில் கனிம வளங்களை தோண்டி எடுத்து இன்னொரு இடங்களில் குவிப்பதால் இந்த தடுமாற்றங்கள் நிகழுகின்றன.

ADVERTISEMENT

வானுயர்ந்த கட்டிடங்கள்  கட்டுவது மனிதனின் சாதனையாக இருக்கலாம். ஆனால் பூமித்தாய் சுமையால் தள்ளாடுகின்றாள். இந்த தடுமாற்றங்களால் தான் பூமிக்கடியில் அதிர்வுகளும், பூகம்பங்களும், சுனாமிப் பேரலைகளும் இன்னும் பல பேரழிவுகளையும்  உருவாகி பல உயிர் சேதங்களை உருவாக்குகின்றது.

உலகம் எதிர்கொள்ளும் பாதிப்புகள்

உலகில் உயிர்கள் வாழ மிகவும் முக்கியமான  தேவை ஆக்சிஜன். இந்த உயிர் காற்றை இன்று விலை கொடுத்து வாங்க வேண்டிய கால கட்டத்திற்கு தள்ளப் பட்டுள்ளது உலகம். காரணம், காடுகளை மனிதன் அழிப்பது வாடிக்கை ஆகி விட்டது.

மரங்களை சுய லாபத்திற்காக வெட்டி சாய்க்கும் நிலை உலகத்தின் எதிர்காலத்தை கேள்விக் குறி  ஆக்கியுள்ளது. மரங்களை கொண்டு மாட மாளிகைகள் உருவாக்குவதில் தவறில்லை. ஆனால் ஒரு மரத்தை வெட்டும் இடத்தில் இன்னொரு மரக் கன்றை நட்டு பாதுகாப்பதில் நாம் உறுதி எடுக்க வேண்டும்.

இந்த செயலை மனித சமூகம் செய்ய தவறியதன் காரணமாக, மழை காலம்  தவறி பொழிகின்றது. தேவைக்கு மழை பொழிந்த காலம் மாறி, தேவைக்கு குறைவாக சில நாடுகளிலும், தேவைக்கு அதிகமாக சில நாடுகளிலும் பொழிந்து பேரழிவை கொடுக்கின்றது.

புவி வெப்ப மயமாதல்

வாகனங்களின் பெருக்கத்தாலும், இரசாயன தொழிற் சாலைகளின் அதிகரிப்பாலும், அலைப்பேசி போன்ற கதிர் வீச்சுகளை தருகின்ற மின் சாதன பொருள்களின் தக்கங்களாலும் உலகம் வெப்ப மயமாதல்  என்ற பேரழிவை நோக்கி பயணம் செய்கின்றது. உலகம்  வெப்பமயம் ஆனால் மனித குலத்துக்கும் மற்ற உயிர்களுக்கும் என்ன பாதிப்பு ஏற்படும் என பலருக்கும் தெரிவதில்லை.

ADVERTISEMENT

காரணம் விழிப்புணர்வு இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் புவியில் வெப்ப மயமாதல் தொடர்ந்து அதிகரித்தால் கடலில் பெரும்பான்மையாக காணப்படும் பனிப்பாறைகள் உருகும். தற்போது அது மிகவும் வேகமாக உருகிக் கொண்டுதான் இருக்கின்றது. இதனால் தான் பல கடலோரங்களில்  2000 மாவது ஆண்டு காலகட்டத்தில் இருந்த கடற்கரை அளவிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு தண்ணீர் முன் ஏறிக் கிடக்கின்றது.

அன்று இருந்த குடியிருப்புகள் பலவற்றை காணவில்லை. நிலைமை இப்படியே சென்றால் சுமார் 2050 காலகட்டங்களில் பூவுலகின் பல்வேறு இடங்கள் கடல் நீரால் மூழ்கடிக்கப் படும்  பேராபத்துகள் காணப் படுகின்றன  என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது மட்டுமா ? புயல்களுக்கும், பேரலைகளுக்கும் பஞ்சம் இருக்காது.

எனவே நட்புக்களே நமது தலை முறைகள் இந்த பூமியில் நலமாய் வாழ வேண்டுமெனில் இப்போதே இயைற்கையினை நேசிப்போம். மரம் வளர்க்கும் பணியில் ஈடுபாடு காட்டுவோம். வெப்ப மயமாதலுக்கு எதிராக நம்மால் என்னென்ன செய்ய முடியமோ அந்த அறச் செயலை தனியாகவோ அல்லது குழுவாகவோ மேற்கொள்வோம். உலகை அழிவிலிருந்து பாதுகாப்போம்.

பசுமை காப்போம்

மரம் வளர்த்தால் மழை பெறுவோம் என்பது உறுதி. மழை பெற்றால் மண் குளிரும். மண் குளிர்ந்தால் விவசாயம் செழிக்கும். விவசாயம் செழித்தால் மக்கள் கையில்  பணம் புரளும். இந்த உலகை அழிவிலிருந்து பாதுகாப்பது நமது முக்கிய கடமை ஆகும்.

வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்படுகின்ற மாசும், தொழிற் சாலைகளிலிருந்து வெளிவருகின்ற மாசுகளும், டிஜிட்டல் காலகட்டத்தால் ஏற்படுகின்ற கதிர்வீச்சுகளும்,  ஓசோன் படலங்களை பதம் பார்த்து விடுகின்றன.

ADVERTISEMENT

ஓசோன் படலம் என்பது புவியில்  வாழும் உயிர்களை கதிரவனின் கதிர் வீச்சிலிருந்து பாதுகாப்பதற்காக இயற்கையால் உருவாக்கப் பட்ட ஓர் தடுப்பாகும்.   மேற் சொன்ன  இந்த மாசுக்கள் ஓசோன் படலத்தில் சென்று  ஓட்டைகளை உருவாக்குகின்றது.

எனவே  கதிரவனின் கதிர் வீச்சு நேரடியாக பூமியில் அதிக வெப்பமுடன் பதிவாகின்றது. இதனால் பூமி சூடாகின்றது. இதனால் தான் பனிப் பாறைகள் உருகுகின்றது. பருவ நிலைகளில் மாற்றங்கள் நிகழுகின்றன.

இதனால் தான்  பூமியில் ஒரு பகுதி வெப்பத்தாலும், மறு பகுதிகள் மழை மற்றும் பனி உறைதல் போன்ற பாதிப்புகளையும் எதிர் கொள்கின்றன. வெள்ளமென்றல் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு பாதிப்புகள் ஆங்காங்கே நிகழ்வதை நாம் பார்த்துக் கொண்டுதானே  இருக்கின்றோம். அது போல அடிக்கடி ஏற்படுகின்ற பூமி அதிர்வுகள் மற்றும் பூகம்பங்கள் போன்றவை கூட இவற்றின் தாக்கங்கள்தான்.

உலகை பாதுகாக்க

இந்த உலகை பாதுகாக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. ஒவ்வொருவரும் மரம் வளர்க்க முன் வரவேண்டும். நமக்கென சொந்த நிலம் இருந்தால் காலியாக இருக்கும் இடங்களில் பலன்தரும் மரம்,செடி,கொடிகளை வளர்ப்போம். சொந்த நிலம் இல்லாதவர்கள் மரம் நட சில அமைப்புகளோ அல்லது அரசோ எடுக்கும் முயற்சிகளை முன் நின்று ஆதரிப்போம்.

மரம் நடுவதோடு கடமை முடிந்ததென நினைக்காமல் அவற்றை நீர் ஊற்றி, உரமிட்டு அவை வளர்வதை உறுதி செய்வோம். பசுமை காக்க நாம் முன் வந்தால் உலகம் வளமாகும்.தலைமுறைகள் செழித்து வாழும். நீங்கள் இதற்காக முன்னெடுக்கும் முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

ADVERTISEMENT

எமது அடுத்த பதிவை படிக்க: அன்பின் சிகரம் அம்மா                 ­­­­­­

Leave a Reply