புனித தேவசகாயம் முட்டிடிச்சான் பாறை
புனித தேவசகாயம் முட்டிடிச்சான் பாறை திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகாமையில் அமைந்துள்ள புலியூர் குறிச்சி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இடது புறத்தில் அமைந்திருப்பதை காணலாம்.
நீலகண்ட பிள்ளை என்ற தேவசகாயம்
நீலகண்ட பிள்ளை என்ற தேவசகாயம் இயேசுக் கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக் கொண்டதற்காக, திருவிதாம்கூர் மன்னரால் 1749 ம் ஆண்டு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட்டது. அந்த மா மனிதரை அதே ஆண்டு மே மாதம் வலது கையையும், இடது காலையும் பிணைத்து ஒரு சங்கிலியும், இடது கையையும், வலது காலையும் பிணைத்து இன்னொரு சங்கிலியும் போட்டு அவ்வழியாக அழைத்து வந்தனர்.
பல்வேறு கொடுமைகளை அனுபவித்தவராய், பசியுடன் தள்ளாடியபடி நடந்து வந்தார். அவரது உடலில் ஏற்பட்ட காயங்களில் மிளகாய் பொடிகளை தூவி மேலும் துன்பங்களை கொடுத்தனர். மிகவும் சோர்வுற்றவராய் அதே நேரம் அழுகையை வெளிக் காட்டாமல் நடந்தார். அவர் அந்த பாறைகள் மீது கால்பதித்து நடந்துவந்த நேரம் நண்பகல். வெயிலின் தாக்கங்கள் பாறையில் பதிந்திருந்ததால் அந்த வெப்பம் அவர் காலை பதம் பார்த்தது.
துன்பத்திலும் ஜொலித்த புனிதர்
துன்பத்தை பொருட் படுத்தாமல் வழி நெடுக மக்களுக்கு போதித்துக் கொண்டே நடந்தார். அவரது உதடுகள் வெடித்து காணப்பட்டது. தாகம் தொண்டையை அடைக்க தாகம் என்றார். சேவகர்களோ தண்ணீர் தர மறுத்தனர். அரசனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் அதாவது இயேசுக் கிறிஸ்துவை விட்டுவிட்டு தாய்மதம் திரும்புவதாய் இருந்தால் அரசரிடம் அனுமதி பெற்று சங்கிலியை விலக்குவதாகவும் கூறினர். மறுத்தார் தேவசகாயம்.
உறவுகள் உதறியபோதும், உயிரே போகும் நிலை வந்தபோதும் அவர் ஏற்றுக்கொண்ட இயேசுக் கிறிஸ்துவை துறக்க அவர் விரும்பவில்லை. அவர் நாவு மேலும் இறைவனை போற்றித் துதித்தது. கோபப்பட்ட சேவகர்கள் மீண்டும் காயத்தை அதிகப்படுத்தினர். துன்பத் தீயில் புடமிடப் பட்டபோது அவரது அவரது ஆன்மா மீண்டும் விசுவாசத்தில் உறுதிபெற்றது. தங்கம் தீயில் புடமிடப் படும்போது தனித்துவமாய் ஜொலிப்பது போல நமது புனிதர் ஜொலித்தார்.
பாறையில் அற்புத நீரூற்று
தொண்டை வறண்டுபோக மீண்டும் தாகமாய் இருக்கின்றது. தண்ணீர் கொடுங்கள் என்றார். கோபம் அடைந்த சேவகர்கள் அழுக்கும், புழுக்களும் கலந்த நாற்றமெடுக்கும் சாக்கடைத் தண்ணீரைக் குடிக்க கொடுத்தனர். அவரால் அந்த தண்ணீரை குடிக்க இயலவில்லை. கையிலும், காலிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நமது புனிதர், தாகத்தின் கொடுமையாலும், உடல் சோர்வாலும் தடுமாறினார்.
எனவே ஆண்டவர் இயேசுவிடம் உருக்கமாக ஜெபித்த அவர் அந்த பாறையில் தனது முழம்கையால் ஓங்கி அடித்தார். உடனே அந்த பாறையில் இருந்து அற்புதமான நீரூற்று ஓன்று எழும்பி சுவையான நீரை சுரந்தது. அந்த நீரை பருகி தனது தாகத்தை தனித்துக் கொண்டார். இதை கண்ட சேவகர்கள் அதிர்ந்து போயினர்.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் 270 ஆண்டுகள் தாண்டியும் அந்த நீரூற்று இன்றும் சுரந்துகொண்டே இருக்கின்றது. இந்த நீரூற்றிலிருந்து பல மக்களும் புனித நீரை அருந்தி சுகம்பெற்று வருகின்றனர். உங்களது வாழ்விலும் நோய் நீங்கி நலமாக வாழ மற்றும் பல அற்புதங்களை பெற்றுக் கொள்ள நீங்களும் ஒருமுறை இந்த புண்ணிய தலத்துக்கு வாருங்கள்.
எமது முந்தய பதிவை வாசிக்க:இருமல் சளிக்கு ஆயுர்வேத மருந்து
சுவை மிகுந்த தண்ணீர்
அந்த நீரூற்று அமைந்துள்ள இடம்தான் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் அமைந்துள்ள புலியூர் குறிச்சி என்னும் இடம். இன்றும் மழை ஆனாலும் அல்லது கடும் வெயில் ஆனாலும் அந்த பாறையில் சம அளவு சுவை மிகுந்த தண்ணீர் இன்றும் காணப்படுகின்றது. இந்த புனித நீரை அருந்தி இன்றும் உடல்நலமும், அல்லது வாழ்க்கையில் எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர்கள் ஏராளம்.
இந்த பதிவை வசிக்கும் நீங்களும் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது நமது மறைசாட்சி புனிதர் தேவ சகாயம் பிறந்து வளர்ந்த நட்டாலம் திருத்தலம், இறைவன் தண்ணீர் கொடுத்த புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை, அவர் இரத்த சாட்சியாய் இறந்த காற்றாடிமலை போன்ற மூன்று புனித தலங்களையும் தரிசிப்பது உங்கள் வாழ்வில் மாற்றங்களை நிகழ்த்தும்